Posts

கடல் அலை

இரண்டு நாட்களாக தூக்கம் கெட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை...அத்தை குணவதி       ஜெகதீசனின் போன் உலுக்கி எழுப்பியது..ஹலோ..அத்தை வணக்கம்...சொல்லுங்க ..என்றேன்......கண்ணு... எங்கப்பா இருக்க...          நாகர்கோவிலிலா....சற்று நேரம் கழித்து...தம்பி இராமமூர்த்தியிடம் இருந்து போன் வந்தது.. ஹலோ தம்பி ராம்ஸ்.... சொல்லுப்பா என்றேன்..... அண்ணா... எங்க அண்ணா இப்ப இருக்கிறீங்க...........                                       வில்லிவாக்கம் இரயில் நிலையத்தின் அருகில் உள்ள தினசரி மார்கெட்டைத் தாண்டி..எதிர் இருக்கும் முதல் தெருவில் ..கடைகள் நிறைந்த பகுதியில்...ICF   யில் ஆபீஸ் சூப்பிரண்டென்ட் ஆக பணி புரியும் திரு.ஜான்சன் சார்..அவர்களின் வீட்டில்(2003) நாங்கள் குடியிருந்தோம். பிள்ளைகள்...மூவரும் சிங்காரம் பிள்ளை மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்து வந்தார்கள்.மேல் மாடியில் வீட்டுக்காரரும்....கீழே இருந்த வீட்டில் நாங்களும் குடி இருந்தோம்.வீட்டுக் கார...

தாதனூர்

பாப்பிரெட்டி பட்டியில் (ஏப்ரல். 2023)இருந்து புறப்பட்ட எங்களின் கார் அயோத்தியாப் பட்டணம் வழியில்  சேலம் வர வேண்டியது, வலப்பக்கம் திரும்பி வலசையூர் நோக்கிப்   பயணித்தது.....டிரைவரின் அருகே அமர்ந்து இருந்த சித்தப்பா திரு.பழனியப்பன் அவர்கள்...சேலம் அஸ்தம்பட்டி திருவள்ளுவர் போக்கு வரத்து கழகத்தில் பணியாற்றியவர் ... தான் பிறந்து வளர்ந்த தாதனூரை  பார்த்துச் செல்லலாமா என்றுக் கேட்டார்.....  தாதனூர்..தாதனூர்..என்று வாழ்நாளில் பலமுறை.. தாத்தா பாட்டி...அப்பா.அம்மா.. சித்தப் பாக்கள். சித்திகள்... அத்தை.. மாமா க்கள்..பங்காளிகள் என .பலரிடமும் கேட்ட..கேட்ட அந்த ஊர் தாதனூரைப்  பார்க்க வேண்டும் என்று பல முறை முயன்றும் ..பார்க்க முடியாமல் தேக்கம் கொண்டதே... அதைப் பார்க்க வாய்ப்பு இன்று கிடைத்ததே என்று...உடனே ..தாதனூர் போகலாம்ப்பா....என்றோம் நானும் பின் சீட்டில் அமர்ந்து இருந்த என் துணைவியாரும்...................................சேலம் நகருக்கு பெருமை சேர்க்கும் மேட்டூர் அணைக்குப் பிறகு ...சேர்வராயன் மலைத்தொடரில் சற்று மேற்கே  தள்ளி இருக்கும் ஏழைகளின் ஊட்டி...ஏற்காடு மலைய...

ஆலய மணி

சேலம் சந்திப்புக்கும் எங்கள் ஊர் ஆண்டிபட்டிக்கும் நடுவில் கிடப்பது தான் போடிநாயக்கன்பட்டி ஏரி.         ..இந்த ஏரியில் எப்போதும் நீர் இருந்து கொண்டு தான் இருக்கும். மழை காலங்களில் ,நீர் நிரம்பி கிழக்கே உள்ள கோடிக்கரை முழுகி நீர் வழிந்துச் செல்லும்...சல..சல வென  ஓடும் நீரில் மீன் குஞ்சுகளும் விரல் அளவு நீளம் கொண்ட கெண்டை மீன்களும் எகிறிக் குதித்து வளைந்து  விளையாடும் ...                                   பள்ளி விடுமுறை நாட்களில்...துவைக்க வேண்டிய துணிகளை எல்லாம் தோளில் தூக்கிக் கொண்டு துணிச்சலுடன்      ஏரிக்கரை வந்துவிடுவோம்.      அக்காக்கள் துணி துவைக்க ஆரம்பிப்பார்கள்.அண்ணாக்கள் தூண்டில் வைத்து மீன் பிடிக்க       கரையோரம் அமர்வார்கள். சிறுவர்களாகிய நாங்கள் கரை ஓரத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டு குட்டிக் கரணம் போடுவோம்.குதிக்கும் போதே சொல்லுவார்கள் காதில்  "ஊப்பட்டை" ஏறிக் கொள்ளும் என்று..காதில் இரு விரல் வைத்த...

நிம்மதி

சென்னை என்றாலே ...தலைக்கு மேலே..ஆகாயத்தில்...  அன்னார்ந்து பார்க்கும் உயரத்தில்  மிதந்து கொண்டு இருக்கிற ஒரு நகர மக்களின் வாழ்க்கைதான் கண் முன் தோன்றும்  . அந்தக் காலம் தொட்டு ...இன்று வரை சென்னை ....ஒரு பெருமையும்...தனிச்சிறப்பும்..தன்னகத்தே கொண்டுள்ளது....அது எதனால்.... தமிழகத்தின் தலைமை இடமா...அரசு எந்திரங்களின் அசுர வேகமா..அந்த அகன்ற மெரீனா கடற்கரையா...ஆகாயம்   தொடும் அடுக்கு மாடி கட்டிடங்களா..அறிஞர்கள் பலர் அங்கே குடிப் பெயர்ந்து போனதாலா... தொழிற்ச் சாலைகள்  நிறைந்து உள்ளதாலா...பல மொழி பேசும் பலரும் பாசத்துடன் பழகுவதாலா ...பல்கலை கழகங்கள்  பெருகி உள்ளதாலா....திரைப்பட நட்சத்திரங்கள் நிறைந்து மின்னுவதாலா..  இருண்டு கிடக்கும் தமிழ் மண்ணை  விடியலுக்கு கொண்டு வரும் கிழக்கே எழும் சூரியானா . தூங்கி எழுந்ததும் முகம் பார்க்கும் காலக் கண்ணாடியா... தமிழகத்தின் தலையெழுத்தை தினம் எழுதும் எழுதுகோலா ..அதற்கு ஏன்... தானாகவே இப்படி ஒரு தனிப்பட்ட சிறப்பு....தாவி இழுக்கும்                        ...

படிப்பும் பயணமும்

மேட்டூர் அணை... VHS பள்ளியில் பதினோராம் வகுப்பு வரைப் படித்தப் போது .. பாதிநேரம் படிப்பு ...மீதிநேரம் விளையாட்டு என்று  காலந்தள்ளியப் பிறகு .. மேற்க்கொண்டு படிக்க...மிதக்கும் எண்ணங்களோடு... மே மாத இறுதியில்......1978 யில் திருச்சி அரியமங்கலம்.  . Sashasayee institute of Technology/.SIT யின் மெயின் gate முன்பாக இரவு ஏழு மணிக்கு நானும் அப்பாவும் திருவெறும்பூர் செல்லும் பஸ்சில் இருந்து இறங்கினோம்.                   அந்த கேட் முன்பாக... நல்ல உயரத்தில் ...சிவப்பு நிறத்தில்...இடுப்பில் பஞ்சகச்சம் ..உடம்பில் கோட் ..சூட்...   காலில் ஷு ..தலையில் முண்டாசு.... முன் நெற்றியில்... புருவத்தில் இருந்து நெற்றி வரை நீண்ட நாமம்..கொண்ட ஒருவர் நின்று இருந்தார்.அவரின் வலதும் இடமுமாக இருவர் நின்று கொண்டு இருந்தார்கள்....        அவரைப் பார்த்துத் தயங்கிய... என் தந்தையாரைப் பார்த்த அவர் .. எங்கே இருந்து வறிங்க... என்றுக் கேட்டார். அப்பா...மேட்டூர் அணை கெமிக்கல்ஸ் யில் இருந்து..என்றுச் சொன்னப் போது...      ...