கடல் அலை

இரண்டு நாட்களாக தூக்கம் கெட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை...அத்தை குணவதி       ஜெகதீசனின் போன் உலுக்கி எழுப்பியது..ஹலோ..அத்தை வணக்கம்...சொல்லுங்க ..என்றேன்......கண்ணு... எங்கப்பா இருக்க...          நாகர்கோவிலிலா....சற்று நேரம் கழித்து...தம்பி இராமமூர்த்தியிடம் இருந்து போன் வந்தது.. ஹலோ தம்பி ராம்ஸ்.... சொல்லுப்பா என்றேன்..... அண்ணா... எங்க அண்ணா இப்ப இருக்கிறீங்க...........                                       வில்லிவாக்கம் இரயில் நிலையத்தின் அருகில் உள்ள தினசரி மார்கெட்டைத் தாண்டி..எதிர் இருக்கும் முதல் தெருவில் ..கடைகள் நிறைந்த பகுதியில்...ICF   யில் ஆபீஸ் சூப்பிரண்டென்ட் ஆக பணி புரியும் திரு.ஜான்சன் சார்..அவர்களின் வீட்டில்(2003) நாங்கள் குடியிருந்தோம். பிள்ளைகள்...மூவரும் சிங்காரம் பிள்ளை மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்து வந்தார்கள்.மேல் மாடியில் வீட்டுக்காரரும்....கீழே இருந்த வீட்டில் நாங்களும் குடி இருந்தோம்.வீட்டுக் காரரின் மகளும் மருமகனும்   நாகர்கோவிலிலும் ..மகனும் மருமகளும்  வெளி நாட்டிலும் இருந்தார்கள்.ஜான்சன் சாரும்..அவர் துணைவியாரும் மேல் மாடியில் வசித்து...கீழே இருக்கும் அவர்களின் கடையில்  பள்ளி குழந்தைகளுக்கான ஸ்டேஷனரி பொருள்களை விற்பனை செய்து...அவர்களின் தனிமையை விரட்டிக் கொண்டு இருந்தார்கள்.எங்களை பார்த்ததும்...அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.வயதான அம்மா...என் துணைவியார்..பெரிய மகள்... மூன்றாம் வகுப்பு....... மகன் .முதல் வகுப்பு ... இளைய மகள் ..UKG...ஆகியோரை ..தனிமைப்பட்டு இருந்த ...அந்த வீட்டுக்காரர்கள் இருவரும் தங்களின் குடும்பம் போலவே நினைத்து பழகினார்கள். .அம்மாவோடு பேசுவதும்..குழந்தைகளை மடியில் உட்கார வைத்து சாக்லேட் ஊட்டு வதும்...கொஞ்சி விளையாடுவதும் அவர்களுக்கு ... தேவையான ஒன்றாக இருந்தது.       ....அந்தத் தெரு இரவு பகலாக எப்போதும் மக்களின் நடமாட்டத்துடன் சுறு சுறுப்பாக காணப்படும்.பக்கத்தில் ஓயாமல் ரயில்கள்  ஓடும் சத்தமும் ..காய்கறி...மீன்... பழம் ...பூ விற்கும் ...வியாபாரிகளின் சத்தமும் கலந்து அமைதியான சூழலை விரட்டி விடும்.... மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் ...குழந்தைகளுக்கு..ஸ்நாக்ஸ் கொடுத்து வெளியே அழைத்துச் செல்லும் போது... அந்தப் பகுதி வேடிக்கை பார்க்க வேண்டிய நிகழ்ச்சிகளை  நாள் முழுக்க கொண்டு இருக்கும் . நானும் சென்னை சென்ட்ரல் கோச்  பராமரிப்பு சென்டரில் பணியாற்றி வந்ததால்.. அந்தப் பகுதி எங்களுக்கு வசதியாக அமைந்தது.மேலும் அது ஒரு மையப் பகுதி என்பதால்....பஸ் ஏறி செல்வதற்கும்...ட்ரெயின் பிடித்து சென்ட்ரல் வருவதற்கும்..அருகில் காய்கறி மார்கட் இருப்பதாலும் ...மூன்று நிமிடத்தில் பள்ளிக்கு ஆட்டோ இல்லாமல் நடந்தே போய் விடலாம் என்பதாலும்  ...மாலையில் குழந்தைகளுடன் வாக்கிங் செல்ல பக்கத்திலேயே அகன்ற தெரு இருந்ததாலும்  ..அனைத்தும் அருகருகே இருந்ததால் வசதியாகவே இருந்தது........ இருந்தாலும்... மழைக் காலத்தில்...  முழங்கால் அளவுக்கு மேலே மழை நீர் தெரு முழுக்க  தேங்கி நின்று ...மாதக்கணக்கில் சகதி நாற்றத்துடன்.... நாற அடித்துவிடும்.இரவில் தவளைகளின் கர் ..கொட ..கொடா...  சத்தம் தூக்கத்தைக் கெடுத்து விடும்.அதோடு அந்தச் சேரும் சகதியும்  கலந்த  .... நெரிச்சல் நிறைந்த தெருவில் கார்ப்பரேசன் குடிநீர் வரும் ...அங்கே குடி இருப்பவர்களுக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் வராது..வரும் நேரத்தில் வரும் குடிநீரை வந்த அளவுக்கு பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.வாரம் முழுக்க தேவைக்கு போதாது.வாரத்தின் நடுவில் வாடகை லாரியிலோ ..கார்ப்பரேசன் லாரியி லோ குடிநீர் வரும்..ஒவ்வொருவரும் பத்துக் குடம்...பதினைந்து குடம் பிடித்தப் பின்னர் தான் அடுத்தவருக்கு நீர் பிடிக்க விடுவார்கள்.வீட்டு ஓனர் எங்களுக்கு தேவையான அளவுக்கு குடங்களில் நீர் பிடித்துக் கொடுப்பார். இல்லை யென்றால்..லாரியை மேலேச் செல்ல அனுமதிக்க மாட்டார்.அந்தத் தெருவில் அவர் ஒரு முக்கிய VIP.. அதோடு அவருக்கிருந்த  உதவும் குணம்....அவரே தானாக முன்  வந்து  உதவி செய்வார்.....அங்கு உள்ள காய்கறி கடைகளில் ..கீரைகள்.. காய்கள்..பழங்கள்...மிகவும் புதிதாக இருக்கும். விலையும் வாங்கக் கூடியதாக இருக்கும்.காய்ந்துப் போன.
. வாடி வதங்கிய..காய்கறிகளை அங்கே பார்க்க முடியாது.காலையில் கொண்டுவரும் அனைத்தையும் அன்றே விற்று...அடுத்த நாள் புதிய வேறு காய்கறிகள் கொண்டு வருவார்கள்.நேரம் ஆக ஆக..அவற்றின் விலை குறைந்து கொண்டே போகும்.வாங்கும் பொருள் கைக்கு நிறைந்து கொண்டே வரும்.அதைப்போலவே...கடலில் பிடித்த மீன்கள் ..நண்டுகள்.. உடனடி விற்பனைக்கு வந்து விடும்...ஃப்ரெஷ் ஆக  இருக்கும்.அப்பொழுதே விற்றுப் போகும்.........விலையும் குறைவு...பொருளும் புதிது.கையில் காசும் மீதமாகும்..........இப்படி  சிக்கனமாகவும்..தேவைக்கு ஏற்றதாகவும்..மனதுக்கு திருப்தி யாகவும்...ஒவ்வொரு பொருளும் சென்னை நகரப் பகுதிகளில் கிடைப்பதால்...வாங்கும் சக்தியை   மீறி எதுவும்                                      விற்கப்படாததால்..வாழும் சக்தி வரம்புக்குள் அமைவதால். ..சென்னை வந்து சேர்ந்தவர்கள்...வடப் பகுதியாகட்டும் தென்பகுதியாகட்டும் ..திரும்ப...தங்களின் தாய் ஊருக்குச் செல்ல விரும்புவதில்லை. தாங்கள் பிறந்த மண்ணை  துறந்து சென்னையிலேயே செட்டில் ஆகி விடுகிறார்கள்.சென்னையின் பூர்வீக வாசிகள் ஒரு இருபது சதவீதம் தான் இருப்பார்கள்... மீதி வெளி               ஊர்களில் இருந்து இறக்குமதி ஆனவர்கள்........ஒரு   வாரமாக ஒரு   இன்ஸ்பெக்சனுக்காக ஆகமதாபாத் சென்று திரும்பிய எனக்கு அதிர்ச்சியும்...மகிழ்ச்சியும் கலந்த செய்தி ஒன்று என் அலுவலகத்தில் காத்து இருந்தது..... ஏம்பா...இன்னைக்கு வேலைக்கு போகலியா....அம்மா கேட்டார்கள்.இல்லம்மா இரண்டு நாள் லீவு..சரி..சரி.ரெஸ்ட் எடுத்துக்கப்பா ..என்று ..அம்மா...வெளியே வாசல் முனைக்கு  சென்று விட்டார்.துணைவியார் சமையல் செய்துக் கொண்டு இருந்தார்.குழந்தைகள் ஹோம் ஒர்க் செய்து கொண்டு இருந்தார்கள்....அம்மா..மனைவி..   மக்கள்..இவர்களைப் பார்க்கும்  போது என்னை அறியாமல் எனக்கு கண்ணீர் வந்தது.என்ன செய்வது.எப்படி சமாளிக்க போகிறோம்..கேள்விகள் என் முன் எழுந்து எழுந்து விழுந்தன . 

பிறந்தது  வடதேசம் அம்பாலா ...வளர்ந்தது  மேட்டூர் அணை.. மேல் படிப்புக்கு பதினேழு வயதில் மேட்டூரில் இருந்து திருச்சிக்கு பயணம்...இருபத்து நான்கு வயதில் பணம் சம்பாதிக்க இரயில்வே பணிக்காக சேலத்தில் இருந்து சென்னை பயணம்...குடும்ப பராமரிப்புக்காக ...பதிமூன்று ஆண்டுகள் சேலம்...ஜோலார்பேட்டை சுழல் பயணம்...பிள்ளைகளின் படிப்புக்காக    ஜோலார்பேட்டையில்  இருந்து  சென்னை வந்தால்....வந்த ஆறு மாதத்தில்....இப்போது  குடும்பத்தை விட்டு மீண்டும்  பயணம்...எண்ணிப் பார்க்கும் பொழுது...சொந்த வீட்டில்..சொந்த ஊரில் வாழ்ந்ததை விட..வாடகை வீட்டிலும்..அரசு குவாட்ரஸிலும் .. வெளியூரிலும் தான் என் வாழ்நாட்கள்  அதிகமாக  வந்து போய் இருக்கின்றன.........அன்று மாலை அம்மாவிடமும் ..மனைவி ..குழந்தைகளிடமும் உற்சாகம் இன்றி சொன்னேன். எனக்கு செக்சன் என்ஜினீயரில் இருந்து ..பதவி உயர்வு..சீனியர் செக்சன்  என்ஜினீயராக ஆர்டர் வந்துள்ளது..இதைச்  சொன்னதும்....அம்மாவின் முகத்திலும் துணைவியாரின்  முகத்திலும் ..ஒரு பிரகாசத்தைக் காண முடிந்தது.பிறகு நான்..மெதுவாக...நாகர்கோவிலுக்கு டிரான்ஸ்ஃபர் போட்டு இருக்கிறார்கள் என்றேன்.இதைக் கேட்டதும் அம்மாவின் முகமும்...துணைவியாரும் முகமும் வாடிப் போனது.....மனித வாழ்வில்..ஏற்றமும் இறக்கமும்..இன்பமும் துன்பமும்.வறுமையும் செழுமையும்....மகிழ்ச்சியும் சோகமும் ...இரண்டறக் கலந்து இருக்கும் என்பதை  .. அனுபவரீதியாக .அப்போது அம்மாவின் முகத்திலும் ..துணைவியாரும் முகத்திலும் ஒரு நிமிடத்தில் என்னால் காண முடிந்தது ..ஏம்பா..அவ்வளவு தூரம் போட்டுட்டாங்க..அம்மாவின் வார்த்தையில்..வேதனை நிரம்பி இருந்தது.....மேல் அதிகாரியிடம் கேட்டு இங்கே சென்னையிலேயே வாங்க முடியாதா என்ற  என் துணைவியாரின் வார்த்தைகளில் சோகம் கலந்து இருந்தது....நான் நேற்று..மேல் அதிகாரி..CRSE சார்..அவர்களை தென்னக இரயில்வே தலைமை அலுவலகத்தில் சந்தித்து வேண்டினேன்...அவர் சொன்னார்.. இன்னும் எட்டு மாதத்தில்     கேடர்  ரிஸ்டக்சரிங் வருது...அப்போது டிரான்ஸ்ஃபர் வரும்....போடுகிறேன்..பதவி உயர்வை விட வேண்டாம்...போய் டுட்டி ஜாயின் செய்யுங்கள் ..நானும் இப்படித்தான் ..அடிக்கடி டிரான்ஸ்ஃபர் ஆகி ஃபேமிலியை விட்டு போய் விடுவேன்..ரயில் வாழ்க்கை இப்படித்தான். ம்...பார்க்கலாம் ..போய்  பதிவு செய்யுங்கள் என்று ..சொன்னதை....அம்மாவிடமும் துனைவியாரிடமும் எடுத்துச் சொன்னேன்...இதைக் கேட்ட அம்மா...சரிப்பா.. அப்புறம் என்ன..நீ போய் டுட்டில சேரு... எங்களப் பற்றி கவலை படாதே என்று    தைரியத்தோடு சொன்னது எனக்கு தைரியத்தைக் கொடுத்தது. என் துணைவியார்...இப்ப நவம்பர் மாதம்..இந்த வருடம்  பசங்க படிப்பு முடிய இன்னும் ஐந்து மாதம் தான் இருக்கு ..மே மாதத்தில் நாம் ....          சேலத்துக்கே குடி போயிடலாம்.. அவ்வளவு பெரிய வீடு... சும்மா பூட்டிக் கிடக்குது..இந்த வில்லி வாக்கம் இந்த ஆறு மாதத்தில் எங்களுக்கு பழகிப் போய்விட்டது...நீங்க போய் டுட்டியில சேருங்க ..நாங்க பாத்துகிறோம்..தைரியமா போய்ச் சேருங்க  என்று சொன்ன வார்த்தைகள்...என் உள்ளச் சோர்வை தூக்கி எறிந்தது .என் பெரிய மகளுக்கு  மட்டும் நாங்கள் பேசியதும்...நான் அவர்களை விட்டு வெளியூர் செல்லப் போவதும் புரிந்து போனது. மகள் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு கண்ணை விழித்து என்னைப் பார்த்தப் போது...என் உள்ளம் மெழுகாய் உருகிப் போனது..மகனும்..இளைய மகளும் நாங்கள் சொன்னதை புரியாமல் எங்களை மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தார்கள் . ...வீட்டு ஓனர் திரு .ஜான்சன் சாரிடம்...என் புரமோஷன் டிரான்ஸ்ஃபர் பற்றிச் சொன்னேன்.. ஆகா...நாகர் கோவிலா..என் சொந்த ஊர் சார் அது..என் மகளும் மருமகனும் அங்கேதான் இருக்கிறார்கள்..மருமகன் தமிழ் நாடு கிராம வங்கியில் மேனேஜராக இருக்கிறார் .அவரின் ஃபோன் எண்ணைத் தருகிறேன்..எந்த உதவி என்றாலும் செய்து கொடுப்பார்.அவருக்கு நான் ஃபோன் செய்கிறேன் ...கவலைப் படாதீங்க ..உங்கள் குடும்பம் ..என் குடும்பம்..அது என் அம்மா..என் பிள்ளைகள்...நான் பாத்துக்கிறேன் என்றார்...இதை விட எனக்கு என்ன வேண்டும்.பிறகு IRTSA வைச் சேர்ந்த திரு.தமிழ்மாறன் சாரிடமும்...திரு.தமிழ்ச்செல்வன் சாரிடமும்..என்ன செய்வது என்று கேட்டப் பொழுது...போய் டூட்டியில் ஜாயின் செய்யுங்கள்... இட மாற்றலுக்கு பதிவு செய்யுங்கள்..டிரான்ஸ்ஃபர் க்கு உதவி செய்கிறோம்  என்றார்கள்..எப்படியும் மீண்டும் இங்கே வர  குறைந்தது ஒரு வருடம் ஆகலாம்.அதற்கு தகுந்தார் போல் குடும்பத்தை தயார் செய்துக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்கள் .இப்படி இவர்கள் ஒவ்வொருவரும் தந்த தைரியம்... அந்தத் தைரியம்.....அடுத்த நாள் இரவு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிப் புறப்பட்ட விரைவு இரயிலில் AC   கோச்சில் என்னை பயணிக்க வைத்தது.எனக்கு ஒதுக்கப் பட்ட கடைசி அப்பர் பர்த் அருகில் ஆட்டோமேட்டிக் டோர்   குளோசர் இருந்ததால் ....அது பலவீனம் அடைந்து இருந்ததால்..ஒவ்வொரு முறையும் கதவை திறந்து மூடும் போது... டப் ...டப் என என் பெட்டின் சேப்டி கார்டு மீது பட்டு ... சத்தம் எழுப்பி ..எனக்கு அதிர்ச்சியை தந்து இரவு முழுதும் தூங்க விடாமல் தொந்தரவு செய்து வந்தது...என்னதான் அம்மா..மனைவி..மக்கள்.. அக்கம் பக்கத்தார்..நண்பர்கள்... தைரியம் சொன்னாலும்....உண்மையிலேயே எனக்கு மனம் தளர்ந்து போனது.. தாயின் பாசம்..மனைவியின் அன்பு...குழந்தைகளின்  அருமை இவைகளை விட்டு  பிரிந்து செல்ல முடியாமல் தவித்து துன்புற்றேன். வெளியேத் தெரியாமல் உள்ளுக்குள் நான் அழுது கொண்டு தான் போனேன்.........அடுத்த நாள் மதியம் திருவனந்தபுரம் சென்ட்ரல் வந்து சேர்ந்த போது... மழை தூரல் விழுந்தது.திருவனந்தபுரம் இரயில் வே  டிவிஷன் ஆபீஸ்க்கு ஆட்டோ வாடகை கேட்டால்..இருபது ரூபாய் என்றார்கள்.என் லக்கேஜ் வைத்து ஏறிக் கொண்டேன். ஆட்டோ மலை பாறை வழியாக ஏறி ஒரு பத்து நிமிடத்தில் சென்று விட்டது.டிவிஷன் பெர்சனல் ஆபீசரை பார்த்து...என் ஆர்டரை கொடுத்து விட்டு...என் மெக்கானிக்கல் பிரிவு ஆபீசர் ...Sr.DME/TVC.  திரு.நந்தகுமார் .,IRSME...சாரை சந்தித்து...அறிமுகப் படுத்திக் கொண்டேன்.என்னைப் பற்றி விசாரித்த அவர்...முக்கியமான சில இன்ஸ்டிரக்சன் கொடுத்து ...வாழ்த்துச் சொல்லி அனுப்பினார் .மீண்டும் ஆட்டோவில் பயணித்து  திருவனந்தபுரம் வந்து நாகர் கோவில் வழியாகச்  எழும்பூர் செல்லும் இரயில் பிடித்து சீட்டில் உட்கார்ந்தேன் . திரும்பி  வரும்போது ஆட்டோ வாடகை அதே இருபது ரூபாய் தான்..ஒரு ரூபாய் கூட சேர்த்து வாங்கவில்லை. அந்த ஆட்டோ டிரைவர்களிடம்  என்ன ஒரு நாணயம்.. நேர்மை....புதிதாய் வருபவர்களிடம் ஒரு வாடகை... மொழி தெரியாதவரிடம்  ஒரு வாடகை.உள்ளூர் ஆட்களிடம் ஒரு வாடகை என்ற அந்த பித்தலாட்டம் அங்கு இல்லை.ஆட்டோ டிரைவர்களின் அந்த ஒழுக்கத் தன்மையை எண்ணி வியந்தேன்......இரயில் இறங்கு முகமாக தெற்கு நோக்கி  மலைச் சரிவில் செல்ல ஆரம்பித்தது...இரண்டு புறமும் பச்சை பசேலென உயரமான  மரங்களும் ...ரப்பர் மரங்களும்.... தேக்கு மரங்களும்... பலா மரங்களும் பல வண்ண மலர்களும் மலைச் சரிவில் நிறைந்து கண்ணைப் பறித்தன. மண் செம்மை நிறத்தில் காணப்பட்டது.அங்கங்கே நீர் ஓடைகளும் ...குளங்களும் காணப்பட்டன.குளத்தில் செந்தாமரை மலர்கள் மலர்ந்து அழகு காட்டின.கொக்குகள் பச்சை  நிற நெல் வயல்களில் நின்று வெள்ளை நிற மலர் மொட்டுக்கள் போல காட்சி அளித்தன. மழை தூறலாகவும் .. சாரலாகவும் அடித்துக் கொண்டு இருந்தது.ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு..இரயில் மலைப் பாதையில் இருந்து  இறங்கி இடதுப் பக்கம் முழுதாய்  திரும்பி நாகர் கோவில் ரயில் சந்திப்பு நிலையத்தை வந்தடைந்தது .....மூன்றாவது நடை மேடையில் லக்கேஜ் களை இறக்கி வைத்து .,ஒரு சுற்று சுற்றி அந்த நாகர் கோவில் ரயில் நிலையத்தை ..அதைச் சுற்றி உள்ள பகுதிகளை பார்த்தேன் .கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை நிறத்தில் நெல் வயல்கள் காணப் பட்டன. தலையில் ஒரு சிறிய த் துண்டை தொப்பி போல  மடித்துக் கட்டிக்கொண்டு...உடம்பில் அரைக் கை சட்டையை அணிந்துக் கொண்டு வயல்களில் வேலை முடித்தப் பெண்கள் வரிசையாக வரப்புகளில் வெளியே வந்து கொண்டு இருந்தார்கள் காக்கைகள் இங்கும் அங்குமாக தாவித் தாவி பறந்து கொண்டு இருந்தன.நடை மேடைகளில் நாய்கள் ஓடிக் கொண்டு இருந்தன. மழைத் துளிகள் ஒவ்வொன்றாக என் மேல் விழ ஆரம்பித்தது.அப்போது என் கைபேசியில் .. ரிங் டோன்னாக வைத்து இருந்த ...செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது                மோதுதம்மா... என்றப் பாடல் ஒலித்தது....எடுத்தேன்....சார்.... நான்          செக் ஷ ன் இஞ்ஜினீயர் ஹரி நாராயணன் பேசுறேன்..எங்க சார் இறங்கி இருக்கிறீங்க நான் சொன்னேன்...நான் மூன்றாவது பிளாட் ஃபார்ம் யில் புட் ஓவர் பிரிட்ஜ் அருகே இருக்கிறேன்...வந்தவர்கள் தங்களை அறிமுகப் படுத்தி கொண்டார்கள். சார்...நான் ஹரி நாராயணன்..section engineer... நான் லக்ஷ்மணன்...JE... நான் கோபால் சாமி சீனியர் டெக்னீசியன்...அவர்களின் வரவேற்பை கை குலுக்கி ஏற்று அவர்களோடு சென்றேன்.முதல் பிளாட் ஃபார்ம் யில் இருந்த ட்ரெயின் Examinar அறையில் லக்கேஜ் யை வைத்து .VRR யில் இருந்து காபி தருவித்தார்கள்.குடித்தப் பிறகு ..மேல் மாடியில் இருந்த ஓய்வு அறையில் இரவு தங்க ஏற்பாடு செய்து இருந்தார்கள்.நாளை காலை எனக்கு ஒதுக்கப் பட்ட இரயில்வே கோட்ரஸ் சுத்தம் செய்து பின்னர் அதற்குச் சென்று விடலாம் என்று ஹரி நாராயணன் சொன்னார். குட் நைட் சார்..நாளை காலை பார்க்கலாம் என்று அவர்கள் விடை பெறும்போது...வெளியே நின்றுக் கொண்டு இருந்த வரை பார்த்து.. சார் இவர்..பாலு..நம்ம ஸ்டாப்...உங்களுக்கு உதவிக்காக ...பாலு ...சாரு கூட இரு என்று சொல்லி...அன்பு பார்வையோடு சென்றார்கள்.நான் பாலுவைப் பார்த்தேன்.அப்போது மீண்டும் திரும்பிவந்த... கோபால் சாமி..சீனியர் டெக்னீசியன்...அப்போது பிளாட் ஃபார்ம் டுட்டி பார்த்து வந்தவர்...சார் ..எதாவது தேவை என்றால் சொல்லுங்க சார் ..என்று சொல்லி விட்டு சென்றார். சீனியர் டெக்னீசியன் கோபால் சாமி க்கு ஐம்பதுக்கு மேல் வயது இருக்கும்
.தலையில் தொப்பி அணிந்து இருந்தார்.முகத்துக்கு ஏற்ற தடிமனான மீசை.இரயில் பணியில் மூத்த அனுபவம் அவர் பேச்சிலும் முகத்திலும் தெரிந்தது....என் அருகில் வந்த பாலுவை...இங்கே இரவில் என்ன சாப்பிடக் கிடைக்கும் என்றேன்..பள்ளிக் கூடத்து மாணவன் போல இரண்டு கைகளையும் நெஞ்சின் முன் மடக்கிக் கட்டிக் கொண்டு.. பிது.. பிது வென முழித்த தவர்..இட்லி..தோசை ..சப்பாத்தி ..கிடைக்கும் என்றார்.இரண்டு சப்பாத்தி..இரண்டு பழம் 
.எட்டு மணிக்கு வாங்கி வாங்க..என்று பணம் கொடுத்து அனுப்பினேன்.கையில் பணத்தை வாங்கியவர்..வேற என்ன சார்.. வேணும் என்றார்..இது போதும் என்றேன்.சார் குடிக்க தண்ணீர்....ஒரு லிட்டர்  பிஸ்லரி வாங்கிகுங்க என்றேன்.பாலு வெளியே சென்றார்......வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு...பாலு கொண்டு வந்து இருந்த சப்பாத்தி சாப்பிட்டு...மெத்தையில் மல்லாக்க படுத்தேன்...பயண அலுப்பு...கனவு இல்லாமல் தூக்கம்...வெளிச்சம் கண்ணில் உணர்ந்த போது...கண் விழித்தேன்.மணி ஏழு ..எழுந்து குளித்து கதவைத் திறந்த போது...வெளியே பாலு நின்றுக் கொண்டு இருந்தார்.பாலு ..என்றேன்...அதற்கு அவர்.. சார் நான் ஆறு மணிக்கு வந்தேன்.. காப்பி வாங்கித் தர.... சாரு .. தூங்கிக் கொண்டிருந்ததால்..சரி வா பாலு போகலாம்...நம்ம ஆபீஸ் எங்க இருக்கு...வா என்று பாலுவை அழைத்துக் கொண்டு...படி இறங்கினேன்..எங்களை நோக்கி வந்த ஹரி நாராயணன்.. குட் மார்னிங் சார்.. நைட் நல்லாத் தூங்கி னிங்களா என்றார். ம்..என்றேன். சார்..இன்னும் டிஃபன் முடிகல போல இருக்கு...டிபன் முடிச்சுட்டு ..உங்க குவாட்ரஸ்  போயிட்டு ...பிறகு ஆப்பீஸ் போலாம் என்றார் ஹரி. நாகர் கோவில் ரயில் சந்திப்பின் வெளியே எதிரே இருந்த உயரமான அரச மரத்தின் அடியில் இருந்த விநாயகரை வழிபட்டு...முதல் வணக்கம் இந்த முக்தி வினாயகனுகே என்று வணங்கி...அந்த அரச மரத்தின் பின் புறம் இருந்த ஸ்டேஷன் மேனேஜர் திரு.வேலப்பன் அவர்களின்  குவாட்ரஸ் உடன் இருந்த இரண்டு வீடுகளில் கிழக்கு புறம் இருந்த எனக்கு ஒதுக்கபட்டு  இருந்த வீட்டில் நுழைந்தேன்.வீடு நல்ல வெளிச்சமும்  காற்றோட்டமும் கொண்ட பெரிய வீடு.நன்றாக சுத்தம் செய்யப்பட்டு இருந்தது.லக்கேஜ் யை வைத்து விட்டு..... வீட்டை பூட்டி விட்டு நானும் ஹரியும்..பாலுவும் அலுவலகத்திற்கு வந்தோம்......அந்த நாகர் கோவில் ரயில்வே சந்திப்பில் ..மெக்கானிகல்  டிபார்ட் மெண்டில்     கேரேஜ்  அண்ட் வேகன் பிரிவில் ...ஆக்டிங் in-charge ஆக பணி ஆற்றி வந்த ஹரி நாராயணன்...அனைத்து பொறுப்பு களையும் என்னிடம் ஒப்படைத்தார்.பின்னர்...அலுவலகத்தில் பணி புரியும் ஆபீஸ் சூப்பிரண்டு முருகேசன்...டீசல் பிரிவில் பணியாற்றும் தேவகி ... சீப் கிளார்க்... மற்றும் டைம் செக்சனில் பணியாற்றும் நடராஜன்.ஆகியோரை அறிமுகப் படுத்தினார்.பிறகு .. பிட் லைன் வந்து.. நாகர் கோவில். டூ மும்பை விரைவு பயணிகள்                 பெட்டிகளை பராமரிக்கும்... செ  க் ஷ ன் என்ஜினீயர் இசக்கி முத்து ...ஜூனியர் என்ஜினீயர்  லட்சுமணன்...மற்றும் அங்கே பணி புரியும் ... ஆண்..பெண் தொழிலாளர் களை அறிமுகப் படுத்தி வைத்தார்.மத்திய உணவுக்கு பிறகு என் அலுவலகம் வந்து ...என் பணிகள் குறித்து ஆராய ஆரம்பித்தேன்.அந்த அலுவலகம் அப்பொழுதுதான் கட்டி முடிக்கப் பட்டது.நான் தான் அந்த அலுவலகத்தில் முதல்(Senior Section  Engineer) SSE.   in-charge. அங்கிருந்த   
... ரி வால்விங் சேர்...டேபிள்...கம்ப்யூட்டர் சிஸ்டம்.. பேன்.அனைத்தும் புதியவையாக இருந்தன. பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடி வைக்க பட்டு இருந்த அவைகள் ஒவ்வொன்றையும் அலுவலகத்தில் பணி புரியும் நடராஜனைக் கொண்டு ஒவ்வொன்றாகப் பிரித்து செயல் பட வைத்தோம்... தேங்கிக் கிடந்த வேலைகளை தேடி தேடிப் பிடித்து முடிப்பதில்...இரவு பதினோரு மணி ஆயிற்று ..புது இடம்..புதிய காற்று.புதிய சூழல்...புது மனிதர்கள்.வித்தியாசமான உணவு.ருசி..வாழ்க்கை...ஆனால் பேசும் மொழி...கேட்கும் மொழி.. தாய்  மொழி தமிழ் ..அவர்கள் பேசும் .மலையாளம் கலந்த தமிழ் ...பேசுவதை கேட்க கேட்க..ஒரு  விதமான இனிமையை தந்தது .சென்னையில் இருந்து வரும்போது...அம்மாவிடமும் துணை வியாரிடமும்..சொல்லி விட்டுத் தான் வந்தேன். பிள்ளைகளின் படிப்புக்காக சொந்த ஊர் சேலத்தை வீட்டு சென்னைக்கு வந்து விட்டோம்.இனி நாம் எங்கு இருந்தால் என்ன..நான் நாகர் கோவில் சென்று...குழந்தைகளுக்காண படிப்பு வசதி..எப்படி இருக்கிறது என்று பார்த்தப் பிறகு சொல்கிறேன் என்று கூறி விட்டு வந்தேன் .அன்று மாலையே 

.

Comments

Popular posts from this blog

ஆத்மா

ராகம்

நாராயணி கண்ணகி.