நிம்மதி
சென்னை என்றாலே ...தலைக்கு மேலே..ஆகாயத்தில்... அன்னார்ந்து பார்க்கும் உயரத்தில் மிதந்து கொண்டு இருக்கிற ஒரு நகர மக்களின் வாழ்க்கைதான் கண் முன் தோன்றும் . அந்தக் காலம் தொட்டு ...இன்று வரை சென்னை ....ஒரு பெருமையும்...தனிச்சிறப்பும்..தன்னகத்தே கொண்டுள்ளது....அது எதனால்.... தமிழகத்தின் தலைமை இடமா...அரசு எந்திரங்களின் அசுர வேகமா..அந்த அகன்ற மெரீனா கடற்கரையா...ஆகாயம் தொடும் அடுக்கு மாடி கட்டிடங்களா..அறிஞர்கள் பலர் அங்கே குடிப் பெயர்ந்து போனதாலா... தொழிற்ச் சாலைகள் நிறைந்து உள்ளதாலா...பல மொழி பேசும் பலரும் பாசத்துடன் பழகுவதாலா ...பல்கலை கழகங்கள் பெருகி உள்ளதாலா....திரைப்பட நட்சத்திரங்கள் நிறைந்து மின்னுவதாலா.. இருண்டு கிடக்கும் தமிழ் மண்ணை விடியலுக்கு கொண்டு வரும் கிழக்கே எழும் சூரியானா . தூங்கி எழுந்ததும் முகம் பார்க்கும் காலக் கண்ணாடியா... தமிழகத்தின் தலையெழுத்தை தினம் எழுதும் எழுதுகோலா ..அதற்கு ஏன்... தானாகவே இப்படி ஒரு தனிப்பட்ட சிறப்பு....தாவி இழுக்கும் ஓர் ஈர்ப்பு...தமிழகம் என்ற உடலுக்கு தலையே சென்னை என்பதாலா....அந்தச் சென்னையில் ...சென்னை சென்ட்ரலில்...காலை நாலரை மணிக்கு.. ... ஏற்காடு எக்ஸ்பிரஸில் இருந்து..வலது காலை எடுத்து வைத்து இறங்கினேன்..... என் வாழ்நாளில் இருபத்து நான்கு வயதில் இன்று தான் சென்னை மண்ணைத் தொடுகிறேன்....பத்துக்கும் மேற்பட்ட அந்த நடை மேடைகள் அனைத்திலும் பயணிகள் சுழன்று நிறைந்து காணப் பட்டார்கள்..சார் லக்கேஜ் ...சார் ஆட்டோ...சார் டாக்ஸி..என்று..மிக மரியாதையோடு அழைக்கும் குரல்கள் அந்த இளம் காலை நேரத்தில் நெஞ்சை குளிர்விக்கின்றன ....இவ்வளவு பயணிகள் எங்கிருந்து வருகிறார்கள்..எதற்கு வருகிறார்கள்...எங்கே போகிறார்கள்...தினம் தினம் இடம் மாறுவதற்கு என்ன வேலை இருக்கிறது.....இந்த இரயில் வண்டிகளிலும் ..பேருந்துகளிலும் எப்போதும் நிறைந்து பயணிக்கும் இவர்களை... சுமந்து .. சுமந்து...தூரத் தொலைவில் கொண்டு கொட்டுவதில் ..தொடர்வதில் ...இந்த இரயில் வண்டிக்கு தொய்வே இல்லையே..நின்றுக் கொண்டே பயணம்..நெருக்கி யடித்துப் பயணம். தொங்கிக் கொண்டு பயணம்..தரையில் உட்கார்ந்துப் பயணம் .வேர்த்து மூச்சு விட முடியாமல் பயணம்.பசியோடு பயணம்.பச்சிளம் குழந்தைகளோடு பயணம்... பயத்தோடு பயணம்....இப்படி....நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு பெருகிக் கொண்டு போகிறதே தவிர...கூட்டம் குறைந்த பாடில்லையே.....ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் தேவைகள் அதிகரிக்கும் போது ...அதைத் தேடித் தேடிச் செல்வது அதிகமாகிக் கொண்டே போகிறதே ...............வலது கையில் இருந்த சூட்கேசை இடது கைக்கு மாற்றும் போது வேகமாக எதிர் வந்தவர் என்னை இடித்துச் சென்றார்...........முழங்காலில் எனக்கு இடி.......இடித்தவர் திரும்பிக் கூட பார்க்காமல் முன்னோக்கி சென்றுக் கொண்டிருந்தார்........முழங்காலில் வலி. முணுகிக் கொண்டே ...கையை வைத்து தடவிக் கொண்டு முகம் சுளித்தேன். ..,.என்னைப் பார்த்து சிரித்த நண்பர் திரு.அன்பு ...இவர் சென்னையில் தங்கியிருந்து தரமணி சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தவர்.கீழ்மேட்டூர் பொன் நகரைச் சேர்ந்தவர்.நான் மேட்டூர் அணை டான்சியில் கால்வனைசிங் பிளான்ட்டில் பணியாற்றிய போது என்னோடு பணியாற்றியவர்........நான் இது வரை சென்னைக்கு வந்ததில்லை....இது தான் முதல் முறை நான் சென்னைக்கு வருவது.எனக்கு வழிகாட்டியாக ..துணையாக வரும் அவருடன் வந்து இருக்கிறேன். இவர் எனக்கு முன்பேத் தெரியும் என்பதாலும்..எங்கள் வீட்டிற்க்கு வந்துப் பழகியவர் என்பதாலும்... வீட்டில் அம்மா கையால் தயாரித்த உணவு... தேநீர்,. காபி சாப்பிட்டவர் என்பதாலும்... ...தைரியமாக ...என் தந்தையும் தாயும்..சகோதரிகளும் இவருடன் சென்னைக்கு வழி அனுப்பி வைத்தார்கள்.... இங்கே...இந்த நடை மேடையில்.....அடுத்தவர் செல்ல மற்றவர் நின்று .வழி விட்டு..ஒன்றாகச் சேர்ந்து செல்ல வேண்டும்.சேர்ந்து வாழும் சகோதர வாழ்க்கை சென்னை நகர மக்களின் வாழ்க்கையோடு இரண்டற கலந்த ஒன்று... பல இடம்.பல நிறம்.பல மொழி..பல பழக்கம் என வேறுபாடு இல்லாமல் ஒன்றாக சேர்ந்து வாழும் பலதரப் பட்டோர்...வசிக்கும் பட்டணம் சென்னை பட்டணம் ..............சென்ட்ரல் நடை மேடை விட்டு வெளியே வந்தபோது.... சில்லென்றக் காற்று உடலைத் தழுவியது.அகன்ற நீண்ட சாலையின் இருபுறமும் மெர்குரி விளக்குகள் வெண்மை நிற ஒளியை உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டு இருந்தன.போக்கு வரத்து இன்னும் அதிகம் ஆகாத அந்த நேரத்தில்.. காய்கறி பழ வியாபாரிகள் ரிக் ஷாக்களில் நிறைய மூட்டைகளை ஏற்றி வேகமாக போய்க் கொண்டு இருந்தார்கள்.மூர் மார்க்கெட் கடைகளில் முன் விளக்குகள் எரிய ஆரம்பித்தன . எட்டுக்கு ஆறு அடி அளவில் இருந்த கடைகளில் பழைய... பல மொழிகளைச் சேர்ந்த புத்தகங்களும் ..புது ஆங்கில புத்தகங்களும் அழகாக அடுக்கி வைக்கப் பட்டு இருந்தன.கயிற்றில் தொங்க விடப்பட்டு இருந்த ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் ஆங்கில நாவல் அட்டைப் படம் கண் கூசுவதாக இருந்தது.ஹரால்ட் ராபின்சன் நாவல்களும் அதனுடன் கலந்து இருந்தன. பல்வேறு வகையான வெளிநாட்டுப் பொருள்களும் ...கேசியோ கால்குலேட்டர்.. பேனாசோனிக் ...டூ இன் ஒன்... டேப் ரெக்கார்டர்..டிரான்ஸ்சிஸ்டர் கர்லியன் கேசட்.. பென் டார்ச் லைட்... பைனாகுலர்.. லெதர் பெல்ட்..பேக்.. விவிதார் கேமரா...ஃபிலிம் ரோல்.. சென்ட் ஸ்பிரே ..கூலிங் கிளாஸ் ..மேக் அப் செட்.. நெயில்கட்டர்... ஹீரோ பென்.. ரெயின் கோட் ..பொம்மைகள்......மற்றும் சீனா..ஜப்பான். தயாரிப்புகள் கொரியா. கிளோத் பேண்ட்.....இன்னும் பிற பொருள்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப் பட்டு இருந்தன.....எங்கும் கிடைக்காத தேடும் ஒரு பொருள் இந்த மூர் மார்க்கெட் டில் கிடைக்க வில்லை என்றால் வேறு எங்கும் கிடைக்காது.தேடும் பொருள் கட்டாயம் அங்கே கிடைத்தே தீரும் ....அதிசயித்து.. அந்த கடைகளில் மின்னும் வெளிச்சத்தில் ... கண்ணைப் பறிக்கும் அனைத்து பொருள்களையும் ஒரே இடத்தில் பார்த்து நின்ற... என் கையைப் பிடித்து...வாங்க போகலாம் என்று நண்பர் அன்பு என்னை இழுத்துச் சென்றார்.....இப்பொழுது எங்கே செல்கிறோம் என்றதுக்கு...புரசைவாக்கம் என்றார். இங்கிருந்து எவ்வளவு தூரம் ....கொஞ்சம் தூரம் தான் ...குறுக்கு வழியில் செல்லலாம்....நடந்து போனால்தான் சென்னை நகரத்து வழிகளை தெரிந்து கொள்ளலாம் என்றார்....வலது பக்கம் திரும்பி .அந்த நெடுஞ்சாலையில் நடந்தால் இருட்டில் வெளிச்சம் எட்டிப் பார்க்கிறது. கடல் எந்தப் பக்கம் என்றேன்.வெளிச்சம் வந்த திசையை கை நீட்டிக் காட்டினார்......பள்ளிப் படிப்பில் பூகோளம் பாடத்தில் இந்திய வரைபடத்தில் கடல் பகுதிகளை ஊதா வண்ணத்தில் கலர் பென்சிலால் வரைந்து கடல்களின் பெயர்களை குறிக்க வேண்டும்.அதற்கு பத்து மதிப்பெண்.அப்படி வரைப் படத்தில் குறித்த ..அந்த வங்கக் கடல்...அருகில் நடக்கும்போது ...அதன் திசை நோக்கி பார்க்கும் போது...உள்ளம் உவகை கொள்கிறது...சற்று தொலைவில்....வலது புறத்தில் தெரிந்த அந்த உயரமான வெள்ளை நிற கட்டிடத்தை ..இது தான் சென்னை மாநகராட்சி அலுவலகம் என்று சொன்னார் அன்பு. அதன்முன் அப்படியே ஆ.. வென்று வாயைத் திறந்து..அதிசயித்து நின்று விட்டேன்...வரலாற்றுப் பாடத்தில்...கருப்பு வெள்ளை படத்தில் பார்த்த ...அந்த ரிப்பன் கட்டிடத்தின் முன் நான் தான் நிற்கிறேனா...அதைப் பார்க்க.. பார்க்க பரவசப் பட்டுப் போனேன்..பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் நிறைய இருக்கு...வாங்க போகலாம் ..விடுஞ்சி போச்சு என்றார் அன்பு....புரசைவாக்கம் நோக்கி வேகமாக நடக்க நடக்க...எனக்கு வயிற்றைக் கலக்கி கொண்டு வந்தது.. அன்புவிடம் சொன்னேன்.. பாத் ரூம் போகவேண்டும் என்று... ம்..எட்டி வாங்க இன்னும் கொஞ்சம் தூரம் தான்...என் நண்பர் சதா சிவத்தின் ரூம் போய் விடலாம் என்றார் ...என்னிடம் இருந்த சூட்கேசை கையில் இருந்து வாங்கிக் கொண்டு வேகமாக முன்னால் நடந்தார். என்னால் வேகமாக நடக்க முடியவில்லை...சமாளிக்க முடியாமல் நடந்தேன்.முகத்தில் வியர்வை அந்த சில்லிட்ட காலை நேரத்தில் முத்து முத்தாக வழிந்து விழுந்தது....புரசைவாக்கத்தில் பிரதான சாலையில் வசந்தி தியேட்டர் முன்பு இருந்த கடைகள் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் மாடியில் ..படி ஏறி திரும்பியதும் இருந்த ..அன்புவின் நண்பர் அறைக்குச் சென்றோம்.கதவு உள்புறமாக தாளிடப்பட்டு இருந்தது.விடிந்தும் ...இன்னும் அவர் தூங்கி கொண்டு இருந்தார்.என்னை அந்த படிக்கட்டு முனையில் இருந்த பாத் ரூம் போகச் சொல்லி விட்டு அன்பு..அவர் நண்பரின் அறைக் கதவை மெல்லத் தட்டினார்.பத்துக்கு பத்து அடி அளவில் இருந்த அந்த அறையில்..கட்டில் மெத்தை...மூலையில் ஒரு இரும்பு டேபிள்..அதன் மீது நிறைய ப்ளூ பிரின்ட் பேப்பர்கள் கிடந்தன.......இவர்.. திரு.சாம்பசிவம்.. நண்பர்.அன்பு அவர்களோடு சிவில் படித்து நகராட்சியில் சர்வேயராக பணியாற்றுகிறார்.என்னைப் பற்றிய அறிமுகம்..நலன் விசாரித்து...அறைக்கு முன் இருந்த கைப்பிடி சுவற்றில் வயிற்றை வைத்து சாய்ந்து... எதிரில் இருந்தக் கடையில் ..மூன்று டீ ஆர்டர் சொன்னார்.நான் பல் தேய்த்து...குளித்தேன்..அன்பு குளிக்க வில்லை என்று நண்பருடன் பேசிக் கொண்டு இருந்தார் .குளித்து வந்த என்னைப் பார்த்து நண்பர்.அன்பு...சிரித்துக் கொண்டே கேட்டார்..குளித்து விட்டு அங்கே பாத் ரூமிலேயே முகத்துக்கு பவுடர் போட்டு கொண்டீர்களா என்றார். என்னைப் பார்த்த சர்வேயர் ..இங்கெல்லாம் உப்புத் தண்ணிதான்..இந்தத் தண்ணில குளிச்சு என் தலை முடியை பாருங்க..பாதி முடி போயிடுத்து ..என்று தலைமுடியை தடவிக் கொண்டார்.இந்தத் தண்ணிக்கு எந்த சோப்பு போட்டாலும் முகத்தில் அப்படியே வெள்ளையாக ஒட்டிக் கொள்ளும் என்றார்.சுவற்றில் மாட்டி இருந்த கண்ணாடியில் என் முகம் பார்க்கும் போது. பாண்ட்ஸ் ட்ரீம் பிளவர் பவுடரை கை நிறையக் கொட்டி முகத்தில் தடவியது போல ... நான் பயன் படுத்திய ரெக்சோனா சோப்பு முகம் முழுதும் வெள்ளையாக ஒட்டிக் கொண்டு இருந்தது. ஈரத்துண்டுக் கொண்டு அழுந்த முகத்தை துடைத்தால்..முகம் சிவந்து எரிய ஆரம்பித்தது. என்னைப் பார்த்து....அதனால் தான் நான் குளிக்க வில்லை என்று நண்பர்.அன்பு சிரித்தார்.....சர்வேயர் சதாசிவத்துக்கு நன்றி தெரிவித்து... படி இறங்கி வெளியே வந்தால். எதிர் இருக்கும் வசந்தி தியேட்டரில் ... பாரதிராஜாவின் ...கமலஹாசன்...நடித்த ..ஒரு கைதியின் டைரி திரைப்படத்தின் பெரிய பேனர் வைக்கப் பட்டு இருந்தது........புரசைவாக்கத்தில் இருந்து ...சென்னை சென்ட்ரல் வர ...பஸ்ஸில் வரும் போது...மீண்டும் அந்த வெள்ளை கட்டிடம் ... ரிப்பன் கட்டிடத்தின் வெண்மை ...கண்ணை நிரப்பியது.....சென்னை சென்ட்ரலின் வலது பக்கத்தில் இருந்த ஒரு ஓட்டலில் நானும் நண்பர்.அன்புவும் டிபன் சாப்பிட நுழைந்தோம்.ஒவ்வொரு டேபிள் முன்பாக நான்கு பேர் என அவசரம் அவசரமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். நண்பர் .அன்பு ...இரண்டு இட்லி..வடக்கறி என்று ஆர்டர் கொடுத்தார். ...நேற்று தான் மேட்டூரில் இருந்து சென்னைக்கு ... வருவதற்கு முன்...சப்பாத்தியும் கறி வறுலும் சாப்பிட்டு வந்தோம்.இப்போ காலையிலேயே ..மீண்டும் கறியா...வாயில் எச்சில் ஊறியது. டேபிள் மீது பரிமாறப்பட்ட இரண்டு இட்லியுடன் ...இரண்டு ஸ்பூனுடன் வைக்கப்பட்ட வடக்கறியை பார்த்ததும்...வெறுத்துப் போய் விட்டேன்..மெதுவாக நண்பர்.அன்புவிடம் கேட்டேன்..இது தான் வடக்கறியா...நான் மட்டன் வறுவலாக இருக்கும் என்று நினைத்தேன் என்றேன்.அன்பு வாய்விட்டு சிரித்தார்.நான் ஏமாந்துப் போனேன்.அருகில் இருக்கும் டேபிளைப் பார்த்தேன்.கையில் தொடாமல் இரண்டு ஸ்பூன் வைத்து ...இட்லியை துண்டு துண்டாக நறுக்கி சாம்பாரில் ஊற வைத்து..ஸ்பூன் நிறைய உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தார்கள் .எனக்கு இது ஒரு புது அனுபவம்............என்னை அந்த பெருமை மிகுந்த தென்னக இரயில்வேயின் தலைமை அலுவலகத்தில் விட்டு விட்டு நண்பர் அன்பு...அவர் வந்த வேலையை பார்க்கச் சென்று விட்டார். .எதற்கு என்றால்.. கீழ்மேட்டூரில்..தன் மகளின் பெயரால் லாவண்யா எலக்ட்ரோ பிளேட்டர்ஸ்.. என்ற எனாமல் கோட்டிங் கடையை ஆரம்பித்து உள்ளார்.அதற்கு தேவையான பொருட்கள் வாங்க என்னோடு சென்னை வந்துள்ளார்.....அவர் சென்ற பிறகு.....என்னுடைய ட்ரெயின் எக்ஸ்சாமினர் பணி ஆர்டரை சென்னை டிவிசனல் பெர்சனல் ஆபீசரிடம் இருந்து வாங்கிக் கொண்டு ..BBQ கோச் மெயின்ட்டனன்ஸ் அலுவலகத்தில் duty report (22.01.1985)செய்தேன்.....அந்த அலுவலகத்தில் ..ADME....திரு.பெஞ்சமின் சார் அவர்கள் இருந்தார்.அவரிடம் அறிமுகப் படுத்தி ...அவரின் அறிவுரையைக் கேட்டு வெளியே வருவதற்குள் எங்கள் நான்கு பேருக்கும் பயம் தொற்றிக் கொண்டது..இந்த மாபெரும் இரயில்வே நிர்வாகத்தில் எப்படி நாம் பணி செய்யப் போகிறோம் என உள்ளூர மனத் தாழ்வு ஏற்பட்டது .எங்களை வழி நடத்தி அழைத்துச் சென்ற திரு.பாலகிருஷ்ணன் . சார்....CWS/ Roller bearing section .. ஒவ்வொரு வராக பிரித்து அனுப்பி வைத்தார். நான் திரு.ஜெயவேல் .சார். ..Train Examinar அவர்களிடம் சென்றேன்.என் பெயர் கேட்டு கை குலுக்கி வாழ்த்துக்கள் சொன்னார்.எங்கே இருந்து வருகிறீர்கள் என்றார்.சொன்னேன்.எங்கே படித்தீர்கள் என்றார்.SIT திருச்சி என்றதும் மீண்டும் என் கையைப் பிடித்து அமுக்கி பிடித்துக் கொண்டார்.அவரும் SIT திருச்சியில் படித்ததாகச் சொன்னார்.இருவரும் ஒரேக் கல்லூரி என்றதும் எங்களுக்கு இடையே ஒரு பிடிப்பும் ...பாசமும் ஏற்ப்பட்டது..பிறகு எங்கே தங்கப் போகிறீர்கள் என்றார்..இனிமேல் தான் தேட வேண்டும் என்றேன்.உடனே தன் பேண்ட் பாக்கெட்டில்
இருந்து ஒரு சாவியை எடுத்துக் கொடுத்து ..பெரம்பூர் இரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள நியூ மார்டன் கஃபே ஹோட்டலின் மேல் மாடியில் மூன்றாவது ரூம் என்னுடையது.அதில் இரண்டு பேர் தங்கியுள்ளோம் .மதியம் உணவு நேரத்தில் சென்று உங்கள் பொருள்களை வைத்துக் கொள்ளுங்கள் என்றார் ..... திடீர் என்று வந்த என்னை.. இரண்டு நிமிடத்தில் அறிமுகமாகி ...இந்தா
.என் ரூமில் தங்கிக் கொள் என்று சாவியை என் கையில் கொடுத்தாரே...அந்த மனசு தான் கடவுள்.....கடவுளைத் தேட வேண்டாம்..அது தானாகவே .... வரும்போது வரும்..என்பார்களே....அதை அன்று நான் அனுபவித்தேன்....மாலையில் அப்பா எழுதி கொடுத்து இருந்த ..சித்தப்பா திரு.தாண்டவன் .சித்தி அகிலாண்ட ம்...தங்கை ஜோதி ஆகியோரின் வீடு தேடி ...வியாசர் பாடி விலாசத்தை...பெரம்பூர் இரயில்வே ஸ்டேஷன் முன் நின்றுக் கொண்டு இருந்த ஒரு ஆட்டோ டிரைவரிடம் நண்பர் அன்பு விசாரித்தார். வழி கேட்டு வீடு வந்து சேர்ந்தோம்.அவர்கள் மூவரும் எங்களைக் கண்டு மகிழ்ந்து போனார்கள்.சித்தியின் உபசரிப்புக்குப் பிறகு..அவர்கள் மூவரும் பெரம்பூர் என் ரூமுக்கு வந்து ...என் இருப்பிடம் தெரிந்துக் கொண்டு ..அடிக்கடி வாப்பா..என்று கூறிச் சென்றார்கள்...அவர்களை அடிக்கடி சந்திப்பதும் அவர்கள் வருவதும் போவதும் வழக்கம் ஆயிற்று..ஆனால்..என்னை அந்த சென்னை மண்ணை அறிமுகம் செய்து வைத்த நண்பர் அன்பு அவர்கள்..அன்று என்னிடம் இருந்து விடை பெற்றுச் சென்றவர்.அதன் பிறகு வரவே இல்லை.இன்னும் அவரை தேடித் கொண்டுதான் இருக்கிறேன்... நண்பர் அன்பு இருக்கிறாரா என்று தெரியவில்லை........ முப்பத்தோரு வருடங்களுக்குப் பிறகு 2016 யில் சேலம் டிவிஷன் அலுவலகத்தில் பணியாற்றிய போது... இராமலிங்க நகரில் குடியிருந்தேன்.அந்த வீட்டிற்க்கு வந்து ஒரு சில மாதங்களில் ..........என் தம்பி டாக்டர் ரவியும் அவரது துணைவியார் காயத்திரி அவர்களும் வந்து இருந்தார்கள் ..உபசரிப்புக்கு பிறகு..திருமதி காயத்திரி ரவீந்திரன் அவர்கள்....சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் செவிலியர் பிரிவில் தலைமை பொறுப்பில் பணியாற்றி வருபவர். ..மருத்துவ சம்பந்தமான மேல் படிப்பிற்காக சென்னை சென்று படிப்பதால்...வருகிற ...2016...ஜூலை மாதத்தில் ...மக்கள் தொகை.. விழிப்புணர்ச்சி....பற்றிய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறினார் .நாங்களும் வாழ்த்துக் கூறி ஆசிர்வதித்து அனுப்பினோம்.....ஒரு வாரம் கழித்து தம்பி டாக்டர்.ரவியும்..அவர் துணைவியார் திருமதி காயத்ரியும் எங்கள் வீட்டிற்க்கு வந்தார்கள்.அந்த... மக்கள் தொகை.... விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி மிகச் சிறப்பாக சென்னை... பெரு மாநகராட்சி அலுவலகத்தில்...வெள்ளை நிற... அந்த மாபெரும் ரிப்பன் கட்டிடத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றதாகவும்...அந்த நிகழ்ச்சியில் திருமதி காயத்திரி அவர்கள்... மக்கள் தொகை ...என்ற தலைப்பில் கவிதையை வாசித்ததாகவும்..அந்தக் கவிதைக்கு முதல் பரிசு .... மிகப் பெரும் கர ஒலியின் ஓசையோடு.. மகிழ்ச்சியோடு பெற்றதாகவும்...சொல்லி பூரித்துப் போனார்.....எங்கள் குடும்பத்தார் அனைவரும் அவருக்கு வாழ்த்துச் சொன்னோம்....அந்த வெள்ளை நிற சென்னை மாநகராட்சி கட்டிடம்...என்ன ஒரு சாதாரண ஒன்றா..அதன் சிறப்புமிக்க வரலாறு என்ன...செயல்பாடுகள் என்ன..சீர்திருத்த சட்டங்கள் என்ன.அறிஞர் பெருமக்களின் வழிகாட்டுதல் என்ன..சொற்பொழிவுகள் என்ன..விவாதங்கள் என்ன... மீட்டு எடுத்த வெற்றிகள் என்ன..... அப்பேற்ப் பட்ட அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்தில் ..அதன் மகா மண்டபத்தில்.....நம் குடும்பத்தில் ஒருவர் முதல் பரிசை பெற்று வந்து இருக்கிறார் என்றால்...இது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் .பெருமிதம்..மகிழ்ச்சி...
குடும்பத்திற்கே பெருமை........திருமதி. காயத்திரி அவர்கள்..அந்த முதல் பரிசை என்னிடமும் என் துணைவியாரிடமும் கொடுத்து..இந்தப் பரிசு உங்களுக்கு சேர வேண்டியது.நீங்கள் எழுதிய கவிதைக்கு கிடைத்த பரிசு... .பெற்று கொள்ளுங்கள் என்றார்.....தம்பி டாக்டர் ரவியும் ..அண்ணா வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்.......இல்லை தம்பி...பரிசு யாரிடம் இருந்தால் என்ன..நான் எழுதிய கவிதையை உங்கள் துணைவியார் அந்த சிறப்பு மிகு ரிப்பன் கட்டிடத்தின் மகா மண்டபத்தில் சிறப்பாக படித்ததனால் தான் இந்த கவிதைக்கு சிறப்பு ஏற்பட்டு பரிசு கிடைத்து இருக்கிறது...எழுதுவதை விட எடுத்துச் சொல்லுதல் சிறப்பு அல்லவா என்றேன்.மேலும் அந்த நிகழ்ச்சியின் நோக்கம் ....மக்கள் தொகையில் ஒவ்வொருவரின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரவேண்டும் என்பதே..... ஏதோ ஒரு வழியில் நிகழ்ச்சிக்கான செய்தி வந்தால் போதும்.....பெரியவர்கள் சொன்னதில் இருந்தோ.. புத்தகப் பதிவில் இருந்தோ.. கேட்டக் கருத்து களில் இருந்தோ ....அனுபவத்தில் இருந்தோ..சேகரித்த செய்திகளை புரியும் படி சொன்னால் போதும்.. நிகழ்ச்சியின் எண்ணம் வெற்றி பெற்றுவிடும் . பரிசின் நோக்கம் ...நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வத்தை தூண்டுவது தான் என்றேன் .........திருமதி .காயத்திரி சொன்னார்.... அண்ணா..இந்த ...பரிசு வாங்கியது எனக்கு மகிழ்ச்சி தான்..ஆனால் ..அந்த பரிசை உங்கள் கையில் எப்பொழுது கொடுப்பேன் என்று காத்து இருந்தேன் .இதை வாங்கிக் கொண்டால்தான் எனக்கு.. என் மனதுக்கு அமைதி......இல்லை என்றால் எனக்கு நிம்மதி இல்லை என்றார்.....ஒவ்வொருவருக்கும் நிம்மதி எவ்வளவு முக்கியம்....மிக... மிக முக்கியம்...உடனே அந்த பரிசை நாங்கள் வாங்கிக் கொண்டோம்.... திருமதி.காயத்திரி ரவீந்திரன் அவர்களின் நேர்மைக்காக... மன நிம்மதிக்காக..... 21.06.2025. " சேலம் வசந்த் "
Comments
Post a Comment