எட்டாவது சித்தப்பா
என் கடைசி ..எட்டாவது சித்தப்பா திரு.நாகராஜன்...அரசு அச்சகத்தில் கம்போசகராக பணியாற்றியவர்...அவரின் துணைவியார் சித்தி அங்கம்மாள் அம்மாவும் என் வீட்டிற்க்கு( 2015) வந்தார்கள்.வந்தவர்கள் ஒரு சீப் வாழைப்பழம் ..ஆப்பிள்..சாத்துக்குடி..ஆகியவற்றை என் துணைவியாரின் கையில் கொடுத்து .. நலம் விசாரித்தனர்.என் பிள்ளைகளின் கல்லூரிப் படிப்பை கேட்டு அறிந்து...அப்படியே படித்து வரட்டும் என்றனர்.டிபன் சாப்பிடுங்க என்று அவர்களை சாப்பிட அழைத்தார்...ம்..கொண்டு வாங்க என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.சித்தி அங்கம்மா அம்மா
..நான் சாப்பிட்டு விட்டுதான் வந்தேன்...அப்பா தான் இன்னும் சாப்பிட வில்லை என்றார்.அப்பாவுக்கு கொடுங்க என்றார்.என் துணைவியார் கொண்டு வந்த இட்லி சாம்பார் தட்டை இரண்டு கைகளாலும் வாங்கி தன் மடி மீது வைத்து சாப்பிட ஆரம்பித்தார் சித்தப்பா.இட்லியை பிட்டு சாம்பாரில் தொட்டு வாயில் போட்டவர்.. ஆகா...பெரிய அண்ணி சமைத்ததுப் போலவே அதே சுவையோடு இருக்கு என்று. மகிழ்ந்து சிரித்தார்.சிரித்தவர்...அப்படியே அழ ஆரம்பித்து விட்டார்.அவரின் கண்கள் கலங்கின.சிறு குழந்தை போல தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்...கண்ணீர் கன்னத்தில் வழிந்து கையில் இருந்த சாம்பாரில் விழுந்தது...அவர் அழட்டும் என்று நானும் துணைவியாரும் சிறிது நேரம் காத்து இருந்தோம்.குலுங்கி அழுதவர் ..எழுந்து கைகளை கழுவ வாஷ் பேசின் சென்றார்.வாய் கண் முகம் கழுவி மீண்டும் எங்கள் முன் வந்தமர்ந்தார்.எம்ப்பா...அழுதீர்கள் என்று மெல்ல விசாரித்தேன்..அவரும் மெல்ல சிரித்துக் கொண்டே சொன்னார்... .மிலிட்டரி அண்ணனும் அண்ணியும் திருமணம் ஆனபோது ..நான் ஒரு வயது குழந்தையாக இருந்தேனாம் .. என்னைத்தான் அண்ணனும் அண்ணியும் குழந்தை மாற்றிக் கொண்டனராம்..என்னை குளிக்கச் செய்து...சோறு குழைய ஊட்டி...தலாட்டி தூங்க வைப்பதும் பெரிய அண்ணிதான்.வயல் காட்டில் ...விளையாட்டு காட்டி வீட்டிற்க்கு அழைத்து வருவதும் அவர் தான்.அண்ணியோட தான் படுத்து தூங்கு வேணாம்...மாலை நேரத்தில்... அக்கா அங்குதாயும்...பெரிய அண்ணியும் மாத்து உலக்கை போட்டு நெல்லோ... சோளம்மோ.. கம்போ உரலில் குத்தி சமைக்கும் போது...என் பசி தீர்க்க ....உரலில் குற்றிய உமியை நீக்கி அரிசியை எடுக்கும் போது...அதன் அடியில் சேரும் பால் அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக என் வாயில் ஊட்டி என் பசியை அடக்கி இருக்கிறார்கள்.இடுப்பில் உட்கார வைத்து தாகம் அடங்க சொம்பில் தண்ணீர் குடிக்க கொடுப் பார்களாம்.அது மட்டுமல்ல.. எனக்கு அடுத்து மேலே உள்ள நான்கு அண்ணங்களுக்கும் ...உணவு...உடை...முதலானவைகளை நேரம் நேறத்திற்கு கொடுத்து பள்ளிக்கு அனுப்புவது அண்ணி தான் .விடுமுறை நாட்களில்...கிணற்றில் ஏற்றம் இறைக்கும் போது ..வாய்க்காலில்.கடைசி ஐந்து பேரான எங்களை வரிசையாக நிற்க வைத்து குளிர்ந்த கிணற்று நீரில் குளிக்க வைத்து ...நாங்கள் இடுப்பில் அறைஞான் கயிரில் கட்டி இருக்கும் கோமணத்தை டக் என்று உருவி.. வெயிலுக்கு ஓடுங்க என்று...வாய் மீது கை வைத்து சிரிப்பதும் பெரிய அண்ணி தான்.எங்கள் மீது பெரிய அண்ணிக்கு அளவு கடந்த பாசம்.. மிலிடரியில் இருந்த பெரிய அண்ணனோடு அண்ணி போன பிறகு. எங்களுக்கு... அண்ணி போல அக்கா அங்குத்தாய்...தாயாகவே தனி கவனம் செலுத்தினார்..அதன் பிறகு சென்ற பத்து ஆண்டுகளாக...நீங்கள் சென்னை ..ஈரோட்டில் இருந்து வந்த பிறகு...அண்ணியின் கையால் உணவு வாங்கி சாப்பிட்டு உள்ளேன்..இப்போது...இந்த இட்லியை சாம்பாரில் சாப்பிடும்போது அண்ணியின் கைப்பததில் சமைத்த சாம்பாரின் சுவை போலவே இருந்ததால்...அண்ணியின் அந்த கால நிகழ்வுகள் நினைவுக்கு வந்து விட்டது என்றார்.மீண்டும் கண்களை துடைத்துக் கொண்டார்.சித்தி அங்கம்மாள் அம்மா அமைதியாக...சித்தப்பா சொல்வதை கேட்டுக் கொண்டும்..எங்களைப் பார்த்துக் கொண்டும் இருந்ததார்.....
Comments
Post a Comment