நாராயணி கண்ணகி.

 ஜோலார்பேட்டை இரயில் சந்திப்பில்.. நடை மேடையில்... ஹிக்கிம் பாதம்ஸ் புத்தகக் கடையில் ..அவரை ..முதன் முதலாக .. அந்தக் கடைக்காரர் திரு.அன்பு அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.                                       இருவரும் கைக் குலுக்கி முகம் மலர அறிமுகம் ஆனோம்.                                    என்னைப் பற்றி விசாரித்தார்.என் எழுத்துக்கள் பற்றி விசாரித்தவர் ..பாராட்டியதோடு... நீங்கள் மத்திய அரசுப் பணியில் இருப்பதால் உங்கள் படைப்புகளை நிதானமாக நேரம் எடுத்து உருவாக்கலாம். அவைகள் சிறப்பாக வரும். ஆனால் என்னால் அப்படிச் செய்ய முடியாது.. காரணம் பகல் முழுக்க.. வெப்பம்.. அனல்.. சூடு.. புகை இவைகளோடு உட்கார்ந்துக் கொண்டு தங்க நகை செய்தல்.. இரவு நேரத்தில் எழுதுதல்... இந்தக் கஷ்டம் உங்களுக்கு இல்லை.நிதானமாக படைப்புகளை உருவாக்குங்கள் என்று வாழ்த்தினார்.அவருடன் அவரின் இலக்கிய நண்பர் திரு.இளபரிதியும் இருந்தார்..                    பிறரைப் பாராட்டுதல் ...                        இந்தப் பாராட்டுதல் என்பது ஒரு சாதாரண விசயம் அல்ல.. விரிந்த சிந்தனையும் ..பரந்த நோக்கமும் ..அடுத்தவருக்கும் திறமை உண்டு...அவர்களாலும் முடியும் என்ற நம்பிக்கையை கொண்டவர்களால் தான்...மற்றவரைப் போற்றவும் முடியும்.. வாழ்த்தவும் முடியும்..   நான் நிறையப் பேரைப் பார்த்து இருக்கிறேன்... நாம் ஏதாவது செய்தால் .. அதைப் பாராட்ட மாட்டார்கள்... அதை அவர்களும் செய்ய மாட்டார்கள் ..அடுத்தவர் செய்வதையும் பொறுக்க மாட்டார்கள். பொறும்பித் தள்ளுவார்கள்...போகும் இடம் எல்லாம் பொல்லாததையும் இல்லாததையும்... இழுத்து... இழுத்து ப்பேசுவார்கள்..பொறாமையும் பொறு க்காதத் தன்மையும்.அவர்களிடம் பொங்கி வழியும்...         பாராட்டத்தான் செய்யவில்லை ..அமைதியாகத்தான் இருப்பார்களா...அதில் ஏதாவது     ஒரு சிறியக் குறையக் கண்டுப் பிடித்து பெரிதாக்கி ..அந்தச் சூழ்நிலையையே அசிங்கப்படுத்தி ...  தங்களை  திருப்தி படுத்திக் கொள்வார்கள்.                                  1978ல் VHS ... பள்ளியில்....பதினொன்றாம் வகுப்பு பள்ளிப் படிப்பின் கடைசி வாரத்தில் ..வகுப்பு ஆசிரியர் திரு. கிருஷ்ணன்    மாஸ்டர் அவர்கள்..எங்களுடைய கைரேகையைப் பார்த்து.. பள்ளிப் படிப்பை முடித்து யார் யார் என்ன வாக .. . ஆவார்கள் என்று ஜோசியம் பார்த்துச் சொன்னார்.. என் கை ரேகையைப்    பார்த்தவர்..நீ இரும்பு சம்பத்தப்பட்ட வேலைக்குச் செல்வாய் என்றார்    ...எனக்கு விருப்பம் என்ன வென்றால் ..சட்டம் படித்து வக்கீலாக...அல்லது போலீஸ் துறையில் SI ஆக வேலைக்குப் போக வேண்டும் என்பதே ... ஏனென்றால்...என்னிடம் இருந்த ஸ்போர்ட்ஸ் மெடல்ஸ் சர்டிபிகேட்ஸ் ...முதலியன நிறைய இருந்ததால்... பேசும் போது வார்த்தைகளை அடுக்கடுக்காக அலகிட்டு உச்சரிப்பதால்... பிசிகல் ஃபிட்னஸ் இருந்ததால்...அந்த ஆசை மனதில் வளர்ந்து இருந்தது ..அதோடு கிருஷ்ணன் மாஸ்டரின் வழிகாட்டு தலின்படி.. "காஃபி ஒரு காப்பி". என்ற ஒரு நாடகம் எழுதி வகுப்பு முன் இருந்த சிறிய இடத்தில்..வகுப்புத் தோழன் ராமமூர்த்தி நகர்  தேவராஜுடன் நானும் சேர்ந்து நடித்தேன்...படிப்பு என்பது அறிவை வளர்த்துக் கொள்ளும் ஒரு கருவி...அதை வைத்து நம் ஆர்வம்...திறமை இவைகளை கொண்டு தொழில் அமையுமானால் அதில் வரும் வருமானம் மனத் திருப்பதியைத்தரும் என்பதே அந்த நாடகத்தின் கரு.                             நாடகம் முடிந்ததும் வகுப்பில் இருந்த பாதிப் பேர் கைத்தட்டினார்கள் ..மீதிப் பேர்...அவர்களிடம் இருந்து எந்த ஒரு  எதிர் வினையும் இல்லை..மாஸ்டர் கிருஷ்ணன் சார்.அருமை அருமை என்றார்..எதிர் பெஞ்சில் அமர்ந்து இருந்த நண்பன் கிரிதரன்  எழுந்து ஓடிவந்து ....அவர் அவ்வளவு ஆர்வத்தோடு எழுந்து ஒடிவருவது ஒரு சாதாரண விசயம் அல்ல...இப்பொழுது வெத்திலைக் கொடியென இளைத்து விட்டார்..என் கையைப் பிடித்து சூப்பர்...சூப்பர் வசந்த் ...என்று.. கையைப் பிடித்துக் கொண்டே சிறிது நேரம் என் கண்களையேப் பார்த்தார்...அந்த    நெகிழ்வான நிகழ்ச்சியை  உணர்ந்த வகுப்புத் தோழர்கள் ...மீண்டும் வகுப்பே அதிரக் கைத்தட்டினார்கள்..   பாராட்டு என்பது மேலும் மேலும்
வளர வழி வகுக்கும்.. இப்படிப்           பாராட்டும்  குணம் என்பது ..ஒரு வரப் பிரசாதம்...                                           அப்படிப் பாராட்டியதில்.... இந்த முதல் சந்திப்பிலேயே என்னை வாழ்த்தி ...வளர வழி காட்டும் நாராயணி கண்ணகி அவர்கள் என் மனதில் இடம் பிடித்து விட்டார்.                காக்கைக் குருவிகள் கூட கத்தாத அமைதி நிலவும் சூழலில்... குளிர்ந்தக் காற்றின் தழுவலில்  . இயற்கை மாறாத அற்புத அழகில் .எப்போதும் இளமைத் தோற்றத்தைத் தரும் ஏலகிரி மலை அடிவாரத்தில்.. ஒருப் பள்ளியில் ...அடிக்கடி நடைபெறும் "சோலை இலக்கியக் குடில் "இலக்கிய ஆய்வு நிகழ்ச்சிக்கு வர என்னை அழைத்தார். ஏனென்றால்.அந்த ஆண்டு 1997 லில் எனது கவிதை ஒன்று..தினகரன் பத்திரிகையில்..  ஐம்பதாம் ஆண்டு இந்திய சுதந்திர தினப்பதிவில் வெளியானது "ஐம்பது ஆண்டு ஆனப் போதும் ... அறிஞர் பலர் வந்தப் போதும்.. அன்றாடம் காய்ச்சிக்         கெல்லாம் அரிசிப் பஞ்சம் போகலியே... என்றுத் தொடரும்... அந்தக் கவிதையைப் படித்த நாராயணி கண்ணகி அவர்கள்... சோலையார்ப்பேட்டை என்று வந்து இருக்கே..யார் இவர் என்று தேடிக் கொண்டு இருந்து இருக்கிறார்.அப்போது அந்த புத்தகக் கடைக் காரர்..என்னைப் பற்றி சொல்லி இருக்கிறார். அதனால் தான் அந்த ஆழமானத் தேடலின் சந்திப்பு இது..     ஒரு நாள் சோலை இலக்கியக் குடில் இலக்கிய ஆய்வு நிகழ்ச்சிக்குப் போய் இருந்தேன். என்னை அவர்கள் தமிழ் மனத்தோடு  வரவேற்றார்கள் .அவர்களின் அன்பான உபசரிப்பு உள்ளத்துக்கு உற்சாகத்தைத் தந்தது.வந்தவர்களில் ஒரு சிலர் தங்களின் படைப்புகளை ஒவ்வொன்றாக வாசித்தார்கள்.நாராயணி கண்ணகி யின் இலக்கிய நண்பர் திரு.இளம் பரிதி..ஒரு புதுக் கவிதை வாசித்தார் ."வாசலில் வண்ணக் கோலம் போட... மண் வெட்டியால் சுரண்டப் பட்ட தளம்...அதில் இருந்து முட்டி முளைத்து வெளி நீட்டின  புற்கள்.. உன் தேவைக்கு என்னை வெட்டினாய் ... எத்தனை முறை என்னை வெட்டினாலும்...என் தேவைக்கு நான் மீண்டும் எழுவேன்.. முளைப்பேன்....அதன் தலைப்பு "வீராப்பு" .நல்லக் கவிதை..எனக்குப் பிடித்துப் போனது.ஆனால் யாரும் கைத் தட்டவில்லை..  புதுக் கவிதை அவர்களுக்கு புரிய வில்லையோ  ...                                   இது எனக்கு முதல் நிகழ்வு என்பதால்.என் கன்னிப் பேச்சில் ..அந்தக் கவிதையை பாராட்டிப் புகழ்ந்தேன்.அதோடு இன்றைய சூழலில் பெற்றவர்கள்..தங்களின் பிள்ளைகளை ..ஒரு டாக்டராக...இஞ்சினியராக...உயர் அதிகாரியாக உருவாக்கவே தாங்கள் கஷ்டப் பட்டு சம்பாதிக்கும் பணத்தைக் கல்வியில் கொட்டுகிறார்கள். ஏன் இப்படி ஒரேச் சிந்தனை..,தங்களின் பிள்ளைகளை ஒரு பார்புகழும் பாரதிப் போல..பாரதிதாசன் போல..கவிஞர் கண்ணதாசன் போல..காளிதாசன் போல.. இசை அமைப்பாளர் இளைய ராஜாப் போல.இயக்குனர் பாலச்சந்தர்... பாரதிராஜாப் போல.. ஏன் உருவாக்கக் கூடாது..என்றுப் பேசினேன்.இதற்கு கைதட்டல்..காரணம்..நம் நினைவோடு..வாழ்வோடு..கலந்த வாழ்வியல் களஞ்சியங்கள் இவைகள்.இவர்கள்....பணம் சம்பாதிப்பது..சேர்த்த... சேர்ந்துவிட்ட ப்   பணம்... நிம்மதித் தராது..அமைதியும் மகிழ்ச்சியும் கொண்ட வாழ்க்கையே மன நிம்மதியைத் தரும்..பேச்சை முடித்துக் கொண்டேன்.            நாராயணி கண்ணகியும் அவரின் இலக்கிய நண்பர்களும் தேநீர் வழங்கி என்னை வழி அனுப்பி வைத்தார்கள்.                                       இந்தச் சோலை இலக்கியக் குடில் இலக்கிய நிகழ்சியில் திரு.மணிமாறன் ADME/SRly/கிளாஸ் II officer....அவர்களும் கலந்து கொண்டு "மூன்று விரல்களில் திருக்குறள்" ...என்று முப்பது நிமிடங்கள் விளக்க ஆய்வு உரை நிகழ்த்தினார்கள்.அவரது பேச்சும் விளக்கமும் அவர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதாக என்னிடம் சொல்லி மகிழ்ந்தார்கள்.                           அடிக்கடிக் நாராயணி கண்ணகியும் நானும் சந்தித்துக் கொள்வோம்.இலக்கிய ஆய்வு சம்பந்தமாக RMS ல் பணியாற்றிய கவிஞர் சோலைக் கூயில் திரு.இராஜேந்திரன்..அவர்களோடு  ... கலந்துரையாடுவோம்.                                                          அந்தச் சமயத்தில் குமுதம் வார இதழில்..நாராயணி கண்ணகி எழுதிய " பேரழகி " என்றச் சிறுகதை வெளியானது.கதை மிக அருமையாக எழுதப் பட்டிருந்தது.அவரை நேரில் சந்தித்தப் போது ...வெகுவாகப் பாராட்டினேன்.அதோடு அந்த நேரத்தில் மு .வ. எழுதிய "கள்ளோ காவியமோ" என்ற புத்தகம் படித்துக் கொண்டிருந்த காரணத்தால்..அதைப் போலவே...நீங்களும் பலப் படைப்புகளை உருவாக்கி சாகித்ய அகாதமி விருது பெற வேண்டும் என்று வாழ்த்தினேன்.                                  பெரிய மகளுக்கு திருப்பதியில் ..மகனுக்கு திரு.பழனியில்.. இளைய மகளுக்கு திருச்செந்தூரில் முடி இறக்கி..முறையே  ஐந்து..மூன்று..ஒன்று என்ற வயதுகளில் காது குத்த தீர்மானித்து..நண்பர் சந்தைக் கோடி யூர் திரு.நடராஜனிடம் கேட்டப்போது...குழந்தைகளுக்கு காது குத்த நாராயணி கண்ணகி    யிடமே அழைத்துச் சென்றார்.                        நாராயணி கண்ணகியின் தங்க நகைச் செய்யும் கடைக்குச் சென்று குழந்தைகளுக்கு காது குத்தி மகிழ்ந்தப் போது...தன் அருகில் இருந்த வாழைப் பழங்களை  அழும் குழந்தைகைகளின் கைகளில் கொடுத்து புன்னகைத்தவரிடம்.. வெற்றிலைப் பாக்கு ..பழங்கள்..இருநூறு ரூபாய் பணம் வைத்து ..நாராயணி கண்ணகியிடம் கொடுத்தால்..வாங்க மறுத்தவர்..மறுத்தே விட்டார்.                    உங்கள் குழந்தைகள் வேறு...என் குழந்தைகள் வேறு..வெவ்வேறு அல்ல..நட்பை பணத்தால் விலைக்கு வாங்க முடியுமா.. விற்க முடியுமா...என்று என்னையும் என் துணைவியாரையும் ..குழந்தைகளையும் பார்த்துச் சிரித்தார்.அதில் நட்பின் ஆழமும் உண்மைத் தன்மையும் தெரிந்தது.         "சேலம் வசந்த் "31.01.2025

Comments

  1. அருமை அருமை.
    அழகான சொல்லாடல்
    வாழ்த்துக்கள்🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆத்மா

ராகம்