ஆலய மணி

சேலம் சந்திப்புக்கும் எங்கள் ஊர் ஆண்டிபட்டிக்கும் நடுவில் கிடப்பது தான் போடிநாயக்கன்பட்டி ஏரி.         ..இந்த ஏரியில் எப்போதும் நீர் இருந்து கொண்டு தான் இருக்கும். மழை காலங்களில் ,நீர் நிரம்பி கிழக்கே உள்ள கோடிக்கரை முழுகி நீர் வழிந்துச் செல்லும்...சல..சல வென  ஓடும் நீரில் மீன் குஞ்சுகளும் விரல் அளவு நீளம் கொண்ட கெண்டை மீன்களும் எகிறிக் குதித்து வளைந்து  விளையாடும் ...                                   பள்ளி விடுமுறை நாட்களில்...துவைக்க வேண்டிய துணிகளை எல்லாம் தோளில் தூக்கிக் கொண்டு துணிச்சலுடன்      ஏரிக்கரை வந்துவிடுவோம்.      அக்காக்கள் துணி துவைக்க ஆரம்பிப்பார்கள்.அண்ணாக்கள் தூண்டில் வைத்து மீன் பிடிக்க       கரையோரம் அமர்வார்கள். சிறுவர்களாகிய நாங்கள் கரை ஓரத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டு குட்டிக் கரணம் போடுவோம்.குதிக்கும் போதே சொல்லுவார்கள் காதில்  "ஊப்பட்டை" ஏறிக் கொள்ளும் என்று..காதில் இரு விரல் வைத்து அடைத்தாலும் ...சள் என்று நீர் ஏறி விடும்.மூக்கில் ..சுர் என்று நீர் உள்ளே  ஏறி கண் கலங்கி விடும்.மூக்கில் ஏறிய நீர் தும்பும்போது நாசியின் வழியாக சூடாக வெளியே வரும்.மூக்கின் எரிச்சல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்...மூக்கை அடைத்து சிந்தினால் காது இரண்டும் அடைத்துக் கொள்ளும்.காது கேட்காது.. காது அடைப்பும்..மூக்கு எரிச்சலும்..கண்களில் கண்ணிரும்  ..சிறிது நேரம் இந்த கஷ்டம் இருக்கும்..இருக்கத்தான் செய்யும்..பிறகு ஓரளவுக்கு சரியானப்பிறகு... அக்காக்களுடன் சேர்ந்து ...உடைந்த கருங்கல்லின் மீது அமர்ந்து துணிக்கு சோப்பு போட முனைந்தால்.. இராசிபுரம் காந்தி ஆசிரமத்தின் துண்டு சோப்பை தரமாட்டார்கள்..துண்டு சோப்பு நீரில் விழுந்து விடும் என்பதால்.                         பருவ மழைக் காலங்களில் ஆனி... ஆடி மாதங்களில் ஏரி நிரம்பிவிடும் .தெற்கே இருக்கும் இரண்டு இரும்பு மதகு கதவுகளை திறந்து ..விவசாயத்துக்கு காத்துக் கிடக்கும் வெள்ளாமை நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவார்கள்..வயல்களில் நெல் விளைந்து அறுவடைக்கு தயார் ஆகும்வரை ஏரியில் நீர் நிறைந்தே இருக்கும்....                                                     அப்படிப்பட்ட ஏரி...இப்போதெல்லாம். ..ஒரு குட்டைப் போல காட்சி அளிக்கிறது..சாக்கடை நீரின் கழிவுகள் சேர்ந்து காற்று துர்நாற்றத்துடன் சுவாசிக்க முடியாத அளவில் வீசுகிறது .நீர் வரும் வழிகள் எல்லாம் தடுக்கப்பட்டு வீடுகளும் வெளிச்சுவர்களும் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு அதிகமாகி விட்டதால் ஏரிக்கு நீர் வரும் பாதை இல்லாமல் போய்விட்டது...அதாவது காணாமல் போய் விட்டது..அந்தப் பகுதியை சேர்ந்த ஊர் பெரியவர்களும்...அரசியல் தலைவர்களும்...                                    தன்ஆர்வலர்களும்...சமூக சேவகர்களும்...சமூக ... நற்பணி... மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும்... பொது மக்களும் எடுத்த விடாமுயற்சியினால்...         இப்பொழுது அந்த ஏரி ,ஒரு நல்ல சுற்றுச்சூழல் கொண்ட சுகாதாரமான....இயற்கை சூழ்ந்த ..பொழுதுபோக்கு   பூங்காவாக...  நடை பயிர்ச்சிக்காண தளமாக.. பெரும் பொருள் செலவில் தமிழக அரசினால் உருவாக்கப் பட்டு வருகிறது .                                                      .. சேலம் ஶ்ரீ கோட்டை மாரியம்மன் கோவிலின் எதிர்புறம் இருக்கும் ராயல் சைக்கிள் மார்ட்டில் தம்பி இராமமூர்த்தியும் (சீனியர் advocate)நானும் ஒரு நாள் முழுக்க நின்று இருந்து புதிதாகப் பூட்டிய ..Rs.1150/- க்கு. ....( 1987 லில்)  வாங்கிய ராலி சைக்கிளில் வரும் பொழுதெல்லாம் ..இந்த ஏரியை கவனிப்பது உண்டு........ஏரியில் நீர் நிறைந்து சிற்றலையைத்  தழுவி .. சில்லென்று  வீசும் தென்றல்  காற்று  உடலை சிலிர்க்கச் செய்யும். .....வெள்ளி நிறம்  கொண்ட கெண்டை மீன்கள் நீரின் மேலே நேராய் எழும்பி  துள்ளி விழுந்து  நீரில் நீந்தும்...
வெள்ளைக் கொக்குகள் வேவ்வேறு இடங்களில் பறந்து வளைந்தாலும்.. படார் என்று நீரின் மேலே எகிறி விழும் மீன்களை கவ்வி வேகமாய் சிறகடித்துச் செல்லும்.. நீண்ட பனை மரத்தின் சின்னச் சின்ன ஓட்டையில் இருந்து எட்டிப் பார்க்கும் வண்ண வண்ண கிளிகள் கீ.. கீ என்றுக் கத்தும், பேசும் .... கொஞ்சிச் சிரிக்கும் ...வரிசை வரிசையாய் வந்துக் கொண்டே இருக்கும் வண்ணத்துப் பூச்சிகள் ..கண் இமைத்தொட்டு   கண்ணிற்கு வண்ணம் தீட்டிச் செல்லும்.......நீரின் அலைத்தொட்டு ,அடி வயிற்றில் நீர் பட்டு.. அணி அணியாய் வரும் தட்டான்கள் தலை முட்டி தண்ணீரை  பன்னீராய் தெளித்துச் செல்லும்......வயலில் விளைந்த நெல்லும்... வேலியில் படர்ந்த குன்றின் மணிகளும்.. கண்ணைப் பறிக்கும்..... வழி நெடுக வளர்ந்து இருக்கும் மஞ்சள் நிற அரளிப் பூக்கள் மணம் பரப்பி மகிழ்விக்கும்.... முச்சந்தி அரச மரத்தடி பிள்ளையாரை மனதுருகி வேண்டி வழி நடந்தால்  மனம் அமைதி பெறும். வீரமாய்   வீற்றிருக்கும்   ஶ்ரீ முனியப்பசாமி முகம் பார்த்து  வேகமாய் நடந்தால்... வெற்றி கிடைக்கும்.........இப்படி இருந்த இந்த ஏரி..இன்று வறண்டு... முட்புதர் செடிகள் வளர்ந்து.... பார்க்கவே பயமாக இருக்கிறதே என்று...மனம் கனத்து ஏரியை கடந்து   சென்றதுண்டு...இந்த பூமி மீது அக்கறைக் கொண்ட நல்ல உள்ளங்களும் இருக்கிறார்கள்.அந்த ஏரிக்கு ....இப்போது ஒரு நல்ல விடிவு வந்து இருக்கிறது...  இதைப் பற்றி ஆண்டிபட்டி ஊர் நாட்டாமைக்காரர் திரு. ஆறுமுகம் சுப்பிரமணி ., MA  ... சேலம் பெரியார் பல்கலை கழகத்தில் பணியாற்றியவர்...அவர்களிடம் கேட்டப் போது....பல தொடர் முயற்சியின் காரணமாக ..பல ஆண்டுகால போராட்டத்தின் விளைவாக... இப்பொழுது இந்த ஏரி ஒரு பயனுள்ள உபயோகத்துக்கு வர இருக்கிறது என்றார்.                                  சென்ற மார்ச்  2025 பங்குனி மாதம் திரு.சுப்பிரமணி..ஊர் நாட்டாமை அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் வீட்டிற்க்கு வந்திருந்த அவரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  பேசும் போது...அவரின் தந்தை ஊர்நாட்டாமை திரு.ஆறுமுகம் பற்றிய பேச்சு வந்தது...திரு. சுப்ரமணி அவர்களின் தந்தையாரின்  முன்னிலையில் தான் எனக்கு வீட்டு முறைப்படி திருமணம் எங்கள் வீட்டிலேயே  " ஶ்ரீலட்சுமி " இல்லத்தில்  நடைபெற்றது.அப்போது திரு . ஆறுமுகம்..ஊர்நாட்டாமைக்காரர் அவர்கள்.... என்  திருமணத்தின் போது...ஒவ்வொரு நிகழ்வுகளையும்.. ஐதீகங்களையும் சரியாக செய்து..உறுதி படுத்திக் கொண்டே வந்தார்.. எந்த ஒரு தவறும் நடந்து விடைக் கூடாது என்ற ஒரு கவனம். பந்தல் முட்டும் வரை  மனைவரைப் பானைகளை சிவதாபுரத்தில் இருந்து வாங்கி வந்து பாங்காக  அடுக்கி செய்ய வேண்டிய சாங்கியங்களை செவ்வனே செய்து  சிறப்பாக திருமணத்தை செய்வித்தார்.வெள்ளை வேஸ்டியும்... அரைக்கை சட்டையும் அணிந்து ..நெற்றியில் திருநீறு பூசி பக்தி மார்க்கத்தில் வரும் அவரைப் பார்க்கும் போது ...அவர் மீது ஒரு தனி மரியாதையும் பக்தியும் மனதில்  தோன்றும்.......எங்கள் குடும்பத்தார் மீது நாட்டாமை திரு. ஆறுமுகம் அவர்கள் மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தார்.மிகவும் பாசத்துடன் பேசுவார். பண்போடு     பழகுவார்.. அவருக்குப் பிறகு... ..திரு. சுப்ரமணி நாட்டாமைக்காரர்  அவர்களும்...எங்களிடம்....சிரித்த முகத்துடன் பேசுவார்.அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் மரியாதை கலந்து இருக்கும்.சொல்வதை பொறுமையுடன் கேட்டு மனம் நோகாதவாறு பதில் சொல்லுவார்.அவரின் அன்பு கலந்த சினேகம்  மனதுக்கு மகிழ்வைத் தருவதாய் இருக்கும்.....இவர் ஒரு நல்ல தலைமைக்கு ஏற்ற ஒரு நல்ல பண்பாளராக திகழ்கிறார்..மேலும் நாட்டாமை திரு.சுப்ரமணியிடம் ... ஊர் ஆண்டிபட்டியின் வரலாறு பற்றிக் கேட்டப்பொழுது...சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் உருவாகி இருக்கலாம் என்றார். ஊர் உருவானப் பிறகு ...ஊரின் நடுவே ஶ்ரீ மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு இருக்கும் என்றார். மேலும் .. ஏன்.. நம்ப ஊரின்  ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் பண்டிகையின் போது..மேற்கே இருக்கும்                      சேலத்தாம்பட்டி  ஶ்ரீ மாரியம்மன்   கோவிலில் இருந்து   பூ கொண்டு வந்து நம்ம ஊர் திருவிழாவை நடத்துகிறீர்கள் என்றுக்          கேட்டதற்க்கு...அந்த காலத்தில்...எத்தனை ஆண்டுகள் என்றுத் தெரியாது... எத்தனை தலை முறைகளுக்கு முன்னால் என்றும் தெரியாது....சொல்லக் கேட்ட செவி வழிச் செய்திதான்  என்றுச் சொன்னார்........ நம்ப ஊர் ஆண்டிபட்டி ...மிகச் சிறியதாக இருந்தக் காலத்தில்..           நம்பவர்கள் விவசாய நிலங்களில் வேலைப் பார்க்க ... அக்கம் பக்கத்தில் உள்ள ஊர்களுக்கு சென்றப் போது....சேலத்தாம்பட்டிக்கும் சென்று உழைப்பைச் சிந்தி வருமானத்தை பெருக்கி வாழ்ந்து வந்து இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் அந்த ஊர் பகுதியிலேயே வேலை செய்து வந்ததால்..அந்த ஊரின் ஶ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவில் கலந்துக் கொண்டு .. அந்தப் பண்டிகையையே  கொண்டாடி         வந்திருக்கிறார்கள்.ஆனால் அப்படி கொண்டாடும் பண்டிகை அவர்களுக்கு திருப்தியாக அமைய வில்லை..அதனால் நம்ம ஊர் பெரியவர்கள் அந்த சேலத்தாம்பட்டி  முக்கியஸ்தர்களிடம்...எங்கள் ஆண்டிபட்டி ஊர்  மக்களால் பண்டிகையை  சுதந்திரமாக   கொண்டாட                                          முடியவில்லை .பதிலாக எங்கள் ஊரிலேயே நாங்கள் பண்டிகை நடத்த வழி காட்டல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனராம் ...அதன்படி.  சேலத்தாம்பட்டி ஶ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா முடிந்தப் பிறகு அம்மன் பூ வை எடுத்துக் கொடுத்து  இந்தப் பூவை வைத்து ...உங்கள் ஊரில் அம்மன் பண்டிகை நடத்திக் கொள்ளுங்கள் என்றுச் சொன்னார்களாம்   ..அதன் பிறகு ஆண்டிபட்டியில் அம்மன் சிலை வைத்து ..கோவிலும்  கட்டப்பட்டு... வருடா வருடம் பங்குனி மாதத்தில்  சேலத்தாம்பட்டி ஶ்ரீ மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் பூ மேள தாளத்துடன்... அதிர்வேட்டுகள் முழங்க ...சீரும் சிறப்புமாக கொண்டு வரப்பட்டு....இப்பொழுது மகா கோபுரத்துடன்  ஶ்ரீ மகா மாரியம்மன் ஆக விளங்கும் அம்மனுக்கு திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது என்றார்..........இப்படியாக பேசி வரும் போது...சிரித்துக் கொண்டேக் கேட்டார்...ரொம்ப நாளாக உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று இருந்தேன்...அது...நீங்கள் ..உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்.... கல்வியில் நல்ல ஒரு ஏற்றம் கொண்டு ஒரு                  முன்னேற்றமான பாதையில்....பெறும்பாலும் அரசுப் பணிகளில்  இருக்கிறீர்களே ...என்ன காரணம் என்று....கேட்டுச் சிரித்தார். ....ஓ..என்ன ஒரு ஆழமாக நம் குடும்பத்தை பற்றி இவர்  ஆய்வு செய்து இருக்கிறார் என்று வியந்துப் போனேன்....அதற்கு... " படிப்பும்  சட்டமும் " தான் காரணம் என்றேன்.நான் சொன்னதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவர்...சரிங்க...அப்புறம் ஒரு விசயம் உங்களைக் கேட்டால் தெரியும்...என்றார்..என்ன சொல்லுங்க என்றேன்...சென்ற மாதம் நம்ம ஊர் கோவிலின் பழைய பொருள்களை...ஒழுங்குபடுத்தி வைத்துக் கொண்டு இருக்கும் போது.....  வெண்கலத்தால் ஆன ஒரு ஆலயமணி இருந்தது.அது எப்படி இந்த பொருள்களில் சேர்ந்தது என்று விசாரிக்கும் பொழுது...      சுமார்                       22 ஆண்டுகளுக்கு முன்... மகா கோபுரம் கட்ட திருப்பணி செய்ய பழைய கோவிலின் ஓட்டுக்கூரை பிரிக்கப் பட்டப் போது ...இந்த வெண்கல மணி  கழற்றப் பட்டு கோவிலின் பொருட்களுடன் வைக்க ப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளது என்றுத் தெரிய வந்தது......இதை
நாட்டாமை திரு.சுப்ரமணி அவர்கள் சொல்லச் சொல்ல ..நானும் என் துணைவியாரும்..விசயத்தை ஒருவாறு  ஊகித்துக் கொண்டோம்...அவர் முகத்தில் புன்னகைத்  தவழ...மேலும் தொடர்ந்தார்...அந்த வெண்கல ஆலய மணியை நன்றாகத் தேய்த்து துடைத்துப் பார்த்தால்..*** 1929             முருங்கப்பட்டி*** ..என்று எழுதி இருக்கு.. கிட்டத் திட்ட 100 ஆண்டுகள் பழைமைக்  கொண்டது அந்த ஆலயமணி..ஒரு புராதனச் சின்னமும் கூட....உங்க பூர்வீகம் கஞ்சமலை சித்தர் கோவில் அருகே இருக்கும் முருங்கப்பட்டி தானே...உங்களைக் கேட்டால் அதன் விவரம்  தெரியும் என்றுச்...சொல்லி என் கண்களையே உற்றுப்  பார்த்தார் .......அம்மா தாயே...ஆண்டிபட்டி          ஶ்ரீமாரியம்மன் தாயே.. என்னம்மா..இது.... மறந்துப் போய் இருந்த அந்த ஆலய மணியின் வரலாற்றை மீண்டும் என் நினைவுக்கு ஊர் நாட்டாமை திரு. சுப்பிரமணி அவர்களின் மூலமாக சொல்ல  வைத்து இருக்கிறாயே..       ஏனம்மா ...என்று மனமுறுகி தியானித்து உள்ளம் உருகிப்  போனோம் நானும் என் துணைவியாரும்...39 ஆண்டுகளுக்கு முன்னால்...அந்த ஆலய மணியின் வரலாற்றை ..1986 ஆம் ஆண்டு.. ஜூன் 7 ஆம் தேதி ஆண்டிபட்டியில் உள்ள ஒவ்வொரு தெருவும் என் குரலில் ஒலி பெருக்கி மூலமாக கேட்டு இருக்கும். கேட்டவர்கள் ஓடி வந்து என் கைப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு அக மகிழ்ந்து போனவர்களும் உண்டு..... கண்கலங்கி கண்ணீர்விட்டு கை எடுத்துக் கும்பிட்டவர்களும்  உண்டு..ஒரு மணி நேரம் கடவுள் பக்தி பாடல்கள்...பிறகு பத்து நிமிடம் என் பேச்சு..ஒரு மணி நேரம்  கடவுள் பக்தி பாடல்கள் ..மீண்டும் என் பேச்சு .இப்படி காலை ஆறுமணி முதல் இரவு பத்து மணிவரை கேசட் மூலம் பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பப் பட்ட அந்தப் பேச்சில் அந்த ஆலய மணியின் வரலாற்றை குறித்துப் பேசினேன்... எங்களின் பூர்வீகம்...கிழக்கே உள்ள சென்னைக்கு அருகில் இருக்கும் பரங்கிமலை...எத்தனை      தலைமுறைக்கு முன்னால் என்றுத் தெரியாது....எங்களின்                     முதாதையர்கள் குழந்தைக் குட்டிகள்.. மூட்டை முடிச்சுகள்.... ஆடு மாடுகளோடு...நீர் உற்பத்தி ஆகி ஓடி வரும் மேற்குத் தொடர்ச்சி மலை திசை நோக்கி வாழ்வாதாரம் தேடி குடும்பம் குடும்பமாக ...கூட்டம் கூட்டமாக வந்து..எங்கெங்கே..குடிக்க நீரும் ..கால்நடைகளை மேய்க்க நிலமும் கிடைத்ததோ அங்கே அனுமதிப் பெற்று குடி அமர்ந்து இருக்கிறார்கள்.அப்படி கிழக்கே இருந்து ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டு மேற்கு நோக்கி வந்தவர்கள்..சேலம் கஞ்சமலை... சித்தர் கோவிலின்  வற்றாத நீர்           ஓடையும்...இயற்கை குறையாத வனப்பகுதியும்.. குளிர்ந்தக் காற்றும்... நிறைந்த இந்த இடம் வாழ்வுக்கு ஏற்ற இடம்  என்றுத் ...தீர்மானித்து... முருங்கப் பட்டியில்...இருப்பிடம் அமைத்து இருக்கிறார்கள்.                    ....இவர்களின் குலத்தொழில் மரவேலைச் செய்வது...குறிப்பாக கலப்பை தயாரிப்பது ..உழவுக்கு தேவையான பொருள்களை செய்வது ...பழுது பார்த்துக் கொடுப்பது .. ஆடு மாடுகளுக்கு அவ்வப்போது ஏற்படும்  சுவாதீனங்களுக்கு நாட்டு வைத்தியம் செய்வது...... குழந்தைகளுக்கு வாந்தி  பேதிக்கு.... வேப்பிலை மந்திரப்பாடம் சொல்லி ...முடிக்கயிறு கட்டுவது மற்றும் விஷ ஜந்துக்கள்  தேள் ...பூரான்...கடித்து விட்டால்.... விஷம் ஏறி... விஷம் இறங்கு...போன்ற மந்திரங்களை ஓதி.. தென்னங்கீற்று குச்சியிலான விலக்குமாறில் இருந்து ஒரு முழ நீள மூன்று குச்சிகளை உடைத்து  விஷக் கடிப்பட்ட இடத்தில் ஒன்பது முறை மேலும் கீழும் நீவி ,மூன்றாக முறித்து தலையை மூன்று முறை சுற்றி  தூர எறிவது.......பத்திய உணவு கொடுப்பது......... இதுப் போன்ற நாட்டு வைத்தியம் ... மாட்டு வைத்தியம்..இன்னும் பிற இலவச வேலைகளைச் செய்தும்.. சும்மா கிடந்த ...கிடைத்த நிலத்தில் உழுதும்..கடின உழைப்பை வேர்வையாகச் சிந்தியும்.... கஞ்சமலை  சித்தேஸ்வரனை தினம் தொழுதும்..வாழ்ந்து வந்து இருக்கிறார்கள்.....
இப்படி கிழக்கே இருந்து வந்தவர்களாக ...முருங்கபட்டியில் வாழ்ந்து வந்தவர்கள்...சுற்றி இருக்கும் சொந்த பந்தங்களில் இருந்து .. பெண் கொடுப்பதும் எடுப்பதும் செய்து கூட்டுக் குடும்பமாக வாழையடி வாழையாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்........அப்படித் தான்.. முருங்கபட்டிக்கு அருகில்... கிழக்கே இருக்கும்  ஆண்டிபட்டியில் .....தாத்தா ஆறுமுகமும் பெண் பார்த்து அக்கா.. தங்கை(குப்பாயி ஆயா....காளியம்மாள் ஆயா) இருவரையும் திருமணம் செய்துக் கொண்டார்..இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து இறந்து விட்டபடியால் ...ஆண்டிபட்டி                ஶ்ரீமாரியம்மன் கோவில் சென்று .. ஈரத்துணியோடு...தாத்தா ஆறுமுகமும் ஆயாக்கள் இருவரும்...அம்மனிடம் வேண்டிக் கொண்டார்களாம்..அம்மா  ...தாயே முதல் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன  ...அடுத்தக் குழந்தையை காப்பாற்றி எங்களுக்குக்  கொடு என்று வேண்டுதல் வைத்து வந்து இருக்கிறார்கள்...அப்படி மூன்றாவதாகப் பிறந்தக்   குழந்தை ஆண் குழந்தையாகப் பிறந்து இருக்கிறது...............ஆண்டிபட்டி             ஶ்ரீ  மாரியம்மன் அருளால் பிறந்ததால்... முத்து மாரியம்மன் சாமி  என்பதால் ...அந்தக் குழந்தைக்கு..முத்துசாமி  (என் தந்தைக்கு ) என்றுப் பெயர் வைத்துள்ளார்கள்  ...மேலும் தங்களின் வேண்டுதல்படி சிதம்பரம் ஶ்ரீ நடராஜர் கோவில் சென்று....வணங்கி அங்கே வாங்கி வந்த  ஒரு வெண்கல ஆலய மணியை ...அடுத்தக் குழந்தை...நல்லபடியாக... ஆண்  குழந்தையாக பிறந்தால் ஆலய மணி வைக்கிறேன் என்று வேண்டியபடியே....தங்களின் வேண்டுதலை நிறைவேற்றி இருக்கிறார்கள்..                                 அந்த *1929 முருங்கப்பட்டி *                             என்று வெண்கல ஆலய மணியில்  பொறிக்கப்பட்ட அந்த ஆலயமணி ...ஆண்டிபட்டி ஶ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு தாத்தா ஆறுமுகம் அவர்கள்  ..தனக்கு  ஆண் குழந்தை பிறந்ததற்காக நிறைவேற்றிய நேர்த்திக் கடன்  ..                   மேலும் 2000 ம் வருடம் தை மாதம்  ஒரு  நாள் காலை நேரத்தில்... வீட்டின் முன் வாசலில் அமர்ந்து   தினத்தந்தி நாளிதழை படித்துக் கொண்டு இருக்கும் போது ....எதிர்வீட்டில் வசிக்கும் மரியாதைக் குறிய திரு.ஜம்பு ...சரஸ்வதி சவுண்ட் சிஸ்டம் ஓனர் ..அவர்கள் கையில் ஒரு ஃபைலுடன் வந்தார்.அவரை நானும்...அம்மாவும் .என் துணைவியாரும் வரவேற்று ..தேநீர் வழங்கி... விசாரித்தப் போது ...கையில் இருந்த  ஃபயிலைக்  காட்டி...நம்ப ஊர் ஶ்ரீ மாரியம்மன் கோவிலை எடுத்துக் கட்டி கோபுரமும் கோவிலும் சிறப்பாக கட்ட இருக்கிறோம்  ......என் அம்மாவிடம் ...யாரிடம் முதலில் செல்வது என்றுக் கேட்டப்  பொழுது..அதோ அங்கே உட்கார்ந்து இருக்கிறாரே  அவரிடம் செல் என்றார்.உங்களிடம் தான் முதலில் வருகிறேன் என்றுச் சொல்லி.......இது தான் கட்டிட மேப் ...பாருங்கள் என்று கோவிலின் பிளான் யைக் காட்டினார்.பார்த்தேன் நன்றாக வடிவமைக்கப் பட்டு இருந்தது .இதில்  ஏதாவது ஒரு பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.அம்மன் கோவில் கட்டுவதில் நமக்கும் கொஞ்சம் வாய்ப்பு வந்து இருப்பது ..அம்மனின் அருளால் என்பதை உணர்ந்து...கோவில் கட்டிட ஜன்னல்களில்  வைக்கப் படும் நான்கு  கிரில்களை செய்து தருவதாக பொறுப்பு ஏற்றுக் கொண்டேன்.அதன் படியே அம்மனின் ஆணை படியே..அம்மனின் அருளால்... 07.03.2011 ல்... மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்  மகாகோபுரம் அமைக்கப் பட்டப் போது ....எங்களின் குடும்பத்தின் சார்பாக ஜன்னல் கிரில்கள் வழங்கி ...அம்மனின் திருப்பணிக்காக எங்கள் பங்கை  அர்ப்பணித்து நூறு ஆண்டுகளாக  அம்மனின் தெய்வீகப் பணியில்   .. பக்திப் பாதையில்   எங்கள் குடும்பம் ....                  .....அம்மனின் அருளால் எங்கள் திருப்பணி என்றென்றும் தொடரும்.          15.06.2025

Comments

  1. சிறப்பு.
    தங்களுக்கும் தங்களின் சந்ததியினர்க்கும் என்றென்றும் அம்மன் அருள்கிட்டும்.

    ReplyDelete
    Replies
    1. ..சிதம்பரம் நடராஜனா.....திருநெல்வேலி நடராஜ னா ...மிக்க நன்றி நண்பரே ..🙏

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஆத்மா

ராகம்

நாராயணி கண்ணகி.