Posts

Showing posts from June, 2025

நிம்மதி

சென்னை என்றாலே ...தலைக்கு மேலே..ஆகாயத்தில்...  அன்னார்ந்து பார்க்கும் உயரத்தில்  மிதந்து கொண்டு இருக்கிற ஒரு நகர மக்களின் வாழ்க்கைதான் கண் முன் தோன்றும்  . அந்தக் காலம் தொட்டு ...இன்று வரை சென்னை ....ஒரு பெருமையும்...தனிச்சிறப்பும்..தன்னகத்தே கொண்டுள்ளது....அது எதனால்.... தமிழகத்தின் தலைமை இடமா...அரசு எந்திரங்களின் அசுர வேகமா..அந்த அகன்ற மெரீனா கடற்கரையா...ஆகாயம்   தொடும் அடுக்கு மாடி கட்டிடங்களா..அறிஞர்கள் பலர் அங்கே குடிப் பெயர்ந்து போனதாலா... தொழிற்ச் சாலைகள்  நிறைந்து உள்ளதாலா...பல மொழி பேசும் பலரும் பாசத்துடன் பழகுவதாலா ...பல்கலை கழகங்கள்  பெருகி உள்ளதாலா....திரைப்பட நட்சத்திரங்கள் நிறைந்து மின்னுவதாலா..  இருண்டு கிடக்கும் தமிழ் மண்ணை  விடியலுக்கு கொண்டு வரும் கிழக்கே எழும் சூரியானா . தூங்கி எழுந்ததும் முகம் பார்க்கும் காலக் கண்ணாடியா... தமிழகத்தின் தலையெழுத்தை தினம் எழுதும் எழுதுகோலா ..அதற்கு ஏன்... தானாகவே இப்படி ஒரு தனிப்பட்ட சிறப்பு....தாவி இழுக்கும்                        ...

படிப்பும் பயணமும்

மேட்டூர் அணை... VHS பள்ளியில் பதினோராம் வகுப்பு வரைப் படித்தப் போது .. பாதிநேரம் படிப்பு ...மீதிநேரம் விளையாட்டு என்று  காலந்தள்ளியப் பிறகு .. மேற்க்கொண்டு படிக்க...மிதக்கும் எண்ணங்களோடு... மே மாத இறுதியில்......1978 யில் திருச்சி அரியமங்கலம்.  . Sashasayee institute of Technology/.SIT யின் மெயின் gate முன்பாக இரவு ஏழு மணிக்கு நானும் அப்பாவும் திருவெறும்பூர் செல்லும் பஸ்சில் இருந்து இறங்கினோம்.                   அந்த கேட் முன்பாக... நல்ல உயரத்தில் ...சிவப்பு நிறத்தில்...இடுப்பில் பஞ்சகச்சம் ..உடம்பில் கோட் ..சூட்...   காலில் ஷு ..தலையில் முண்டாசு.... முன் நெற்றியில்... புருவத்தில் இருந்து நெற்றி வரை நீண்ட நாமம்..கொண்ட ஒருவர் நின்று இருந்தார்.அவரின் வலதும் இடமுமாக இருவர் நின்று கொண்டு இருந்தார்கள்....        அவரைப் பார்த்துத் தயங்கிய... என் தந்தையாரைப் பார்த்த அவர் .. எங்கே இருந்து வறிங்க... என்றுக் கேட்டார். அப்பா...மேட்டூர் அணை கெமிக்கல்ஸ் யில் இருந்து..என்றுச் சொன்னப் போது...      ...

ஜூன் மாதம்

ஜூன் மாதம் வந்தாலே ஒரு சுறுசுறுப்பு வந்து விடுகிறது ..........சுழன்று அடிக்கும் சூறாவளி காற்றும்...சூழ்ந்து கொள்ளும் பருவ அடை மழையும்...சுறுசுறுப்பாய் பள்ளித் திறப்பும் ..மாணவர்களின் அணி வகுப்பும் ...திணறிப் போகும் டிராபிக்கும் ...திருமண நிகழ்வுகளும்..ஒரு புது வருட ஆரம்பம் போல...இந்த மாதத்தில்... வளர் பிறை வைகாசியில்..வரிசையில் வந்து. வா வென்று வரவேற்கும்...................கோடை வெயிலில் ..கோயில் ...குளம்.. தேர்த் திருவிழா.. திருக்கல்யாண   உற்சவம் ....குற்றாலம்..குளிர்ச்சியான நீர் வீழ்ச்சி..குவிந்து கிடக்கும் நிழல் நிறைந்த புங்கா.. குளிர் பானம்.....மாங்கனி.. பழச் சாறு....மணம் வீசும் மலர்த் தோட்டம்...என தேடித் தேடி...உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு மகிழ்வான சுகம் காண       அலைந்து திரிந்த சூழ்நிலை மாறி... பிள்ளையார் சுழி போட்டு மீண்டும் அவரவர் வேலையைத் தொடரும் நேரமாக  மாறும்....இந்த ஜுன் மாதம்..உள்ளத்திற்கு உற்சாகத்தையும்...உடலுக்கு இதமான சுகத்தையும் தரும் சூழலில் நகர்ந்தாலும்...கோடை  வெப்பத்தின் தாக்குதலில் இருந்து...பருவ மழைக்கான பருவ நிலையில்..... ...