நிரந்தரமில்லை
ஆசிரியர்...அவர் ஒரு நல்ல ஆசிரியர்....மேட்டூர் சேலம் கேம்ப். ல் உள்ள பிரிசித்திப் பெற்ற தனியார் பள்ளியில்...ஆசிரியர் பணி செய்துக் கொண்டே... "ஒலி & ஒளி" அமைப்பதில் ...புகழ் பெற்ற "சாமி சவுண்ட் சிஸ்டம்" -சேலம் கேம்ப். ..என்ற அமைப்பை. . பட்டித் தொட்டி எங்கும் பரபரப்பாக நடத்தி வந்தவர்..திருமண நிகழ்ச்சி... நாட்டிய நிகழ்ச்சி...சொற்பொழிவு.....பிரபல அரசியல் தலைவர்களின். அரசியல் கூட்டம்... மாநாடு என்றால்...அந்த அளவுக்கு.... ஒலி & ஒலி mike setting அமைப்பதில் வல்லவர்.... அவரின் தம்பிதான் நம் கேசவன். . கீழ் மேட்டூர் ICH இந்தியன் சர்க்யூட் ஹவுஸ் To குஞ்சாண்டியூர் வரை சென்றுத் திரும்பும் ஶ்ரீ
ராமுலு பஸ்சில்... அரைக்கால் நிக்கருடன் வெள்ளை அரைக்கை சட்டையுடன்.. நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து...வாயில் வெற்றிலை பாக்குச் சிவப்புடன் .. சிரித்த முகத்துடன் வருவோரையும்... போவோரையும் கிண்டல் அடித்துக் கொண்டு கூட்டதை சேர்த்துக் கொண்டு...நல்ல வசூலில்... பஸ்சை ஓட்டி வந்த அந்த கண்டக்டரிடம் கூட. .கேசவன் பஸ்சில் ஏறியதும் Seat காலி செய்து கொடுத்து உடனே உட்கார சொல்லும் அளவுக்கு ஒரு நேசமான சினேகத்தை ஏற்படுத்திக் கொண்டு.....தினமும் சேலம் கேம்ப் ல் இருந்து வைத்தீஸ்வரா உயர்நிலைப் பள்ளிக்கு அந்த பஸ்சில் வந்து போகக்கூடிய செல்வாக்குக் கொண்டவர்..நம் சீனியர் கேசவன்.. தலை முடியை ஒட்ட வெட்டாமல் நீளமாக வளர்த்து இருப்பார்...பிஎஸ்சி டாடா செப்பல் அணிந்து...படார் படார் என குதிக் காலில் அடித்துக் கொண்டு வருவார்...கையால் பின்னிய ... ஒயர் bag. ல் புத்தகம் + டிஃபன் பாக்ஸ் நிறப்பித் தூக்கிக் கொண்டு long step நடையோடு வேக வேகமாக பள்ளி வகுப்புக்கு வேர்த்து விறு விறுக்க வந்துச் சேருவார் . கழுத்து,முகம் மற்றும் காது முழுக்க. ponds powder நிறையப் போட்டு தன் கருப்பு நிறத்தை வெளுப்பாக்க முயன்று இருப்பார்.அவர் பக்கத்தில் வரும் போது நல்ல வாசனை வரும்.. எப்பொழுதும் சிரித்துக் கொண்டே... கண் அடிக்கடி சிமிட்டி கொண்டே பேசுவார்.படிக்கும் போது புத்தகத்தை கண் அருகே வைத்துப் படிப்பார் நல்ல நண்பர்... சகஜமாகப் பழகக் கூடியவர். வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று எண்ணும் அளவுக்கு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பதில்...சாப்பிடுவதில்..தாராளமாக செலவழிப்பார். ஒரு முறை டென்னிஸ் பாலில் ...foot ball விளையாடும் போது.. இவருடன் விளையாடும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது...மூன்று அங்குல பந்தில் ..KK... ராமன் ball batminton tournament.க்காக...மற்றும் cricket விளையாடுவதற்காக...maintain செய்யப்பட்ட பள்ளி ground ல் வெறும் காலில்..வெய்லில்... விளையாடுவது மிகக் கடினமான ஒன்று.... இந்தச் சூழலில்.... அவரோடு விளையாடினேன்... பந்தை ஓங்கி உதைத்தவர்... அப்படியே விழுந்து விட்டார்... ஓடிப் பார்க்கும் போது வலது காலின் நடுவிரல் நகம் தரையில் மோதி அப்படியே பெயர்ந்து வந்து விட்டது. தேசாய் நகர் ராஜு... கையைப் வைத்து இரத்தம் வராமல் பிடித்துக் கொண்டார்... அவரை கைத் தாங்களாக அழைத்து வந்து வகுப்புத் திண்ணை மீது படுக்க வைத்து. ..PT room ல் இருந்து கொண்டு வந்த பாண்டேஜ் போட்டு.. அதே ஶ்ரீராமுலு பஸ்சில் அவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். பல வருடங்களுக்குப் பிறகு .. 1996 ம் வருடம்... ஜோலார் பேட்டை சந்திப்பில்...பணியாற்றும் போது.... என்னைத் தாண்டிச் சென்ற கேசவனை அடையாளம் கண்டு நிறுத்தினேன்....அவர் என்னைப் பார்த்து பயந்து விட்டார் .. சார்... எனக்கு ரயில் பாஸ் இருக்கு.. டிஸ்ட்ரிக் மெடிக்கல் ஆபீசர் கொடுத்தது என்று அவசரமாகத் தன்.. அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தார்... நான் அவர் கையைப் பிடித்துக் கொண்டேன் . என் பல் வெளியேத் தெரியாமல்...புன்னகைத்துக் கொண்டேன்.... இங்கே... எங்கே... வந்தீங்க .. நான் பிசினஸ் செய்கிறேன் சார்.. என்ன பிசினஸ்... ரேடியோ. டேப் ரெக்கார்டர் .. ரிப்பேர்..sapre parts. Sales . அவர் கையை விடுவித்து ..என் வலது கையை அவர் வலது தோள் பிடித்து என் நெஞ்சோடு அனைத்துக் கொண்டேன்... மேட்டூர் அணை...வைதீஸ்வரா ஸ்கூலில் நான் உன்னோடு படித்தவன் என்று மெதுவாகச் சொன்னேன்.. . அப்படியா சார் என்று அதிர்ந்து போனார். தனது இடது தோளில் தொங்கிக் கொண்டிருந்த நீண்ட ஜோல்னா பையை தூக்கிச் சரி செய்துக் கொண்டார்.... என் platform ஆபீசிர்க்கு அழைத்துச் சென்று என்னை முழுதுமாக அறிமுகப் படுத்திக் கொண்டேன்... பள்ளிப் பருவத்து வாழ்க்கை அவருக்கு ஓரளவிற்கு நினைவிற்கு வந்தது .... அவருக்கு platform VRR ல் இருந்து மெதுவடை.. காஃபி வாங்கிக் கொடுத்து நலம் விசாரித்தேன்... கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டார்... பள்ளிப் படிப்பைச் சரியாக முடிக்காமல் போகவே அவர் அண்ணன்... கோவையில் உள்ள G T நாயுடு டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட். ல்.. ரேடியோ.. டேப் ரெக்கார்டர் ரிப்பேர் பயிர்ச்சிப் பெற ஏற்பாடு செய்ததாகவும் பிறகு அதன் மூலம் வரும் வருமானத்தில் காலத்தை ஓட்டிக் கொண்டு இருப்பதாகவும் .. வேதனையோடுச் சொன்னார்... தன்னை வளர்த்து வந்த அண்ணன் திடீரென ஒருநாள் இறந்து விட்டதாகவும்...அந்த சாமி ஒலி & ஒளி ரேடியோ சிஸ்டம் தன்னால் நிர்வகிக்க முடியவில்லை என்றும்..அவைகளை குறைந்த விலைக்கு விற்று விட்டதாகவும்....பெருமூச்சுடன் சொன்னார்... பள்ளியில் படிக்கும் போது....மேட்டூர் RS ....modern கஃபே.. உயர் தர ஒரு ஓட்டல் ... எப்போதும் அதில் ஃபில்டர் காஃபி சாப்பிட்டு...மிலான் பாக்கு வாங்கி.. எப்பொழுதும் மென்றுத் தின்றுக் கொண்டிருக்கும் வசதி படைத்த அந்த படோடோப கேசவன்....இன்று....ரேடியோ ரிப்பேர் செய்து அதன் மூலம் வரும் சொர்ப்ப வருமானத்தில் வாழ்கிறார் என்றால்..... மனித வாழ்க்கையில் என்ன ஒரு ஏற்றத் தாழ்வுகள்.... நிலையற்ற வாழ்வு.. நிலையற்ற உலகம்.....என்று சொல்வார்களே...அதைக் கண் கூடாகக் காணும் பொழுது...இப்படி ஒரு நிரந்தரம் இல்லாத மண்ணுலக வாழ்க்கையில்... நாம்....ஜாதி.. மதம்..இனம்...நிறம்... மொழி ...உயர்வு... தாழ்வு என்றெல்லாம் பார்த்துக் கொண்டு....மனித வாழ்க்கைத் தத்துவத்தை மறந்து...நேரத்தையும்... காலத்தையும் வீணடித்துக் கொண்டு ..அருமையான அழகான ஒரு மனித வாழ்க்கையை அறிந்து முறையாக அனுபவித்து வாழாமல்.... அல்லலு ற்று அலைந்து கொண்டிருக்கிறோமே என்று எண்ணும் போது.... மனம் வெறுத்துப் போகிறது ... என்னிடம் இருந்து விடை பெற வெட்கப்பட்ட கேசவனின்..... கையில் இருபது ரூபாயை திணித்தேன். ..என் முகத்தை ஒருமுறை கண் சிமிட்டி பார்த்தக் கேசவனின் கண்களில் இருந்து... கண்ணீர் வெளிவரத் துடித்தன. தலையை குனிந்துக் கொண்டே வேகமாகச் சென்ற கேசவனை. . கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்று கொண்டு இருந்தேன். ....அதன் பிறகு கேசவன் இன்று வரை என் கண்களுக்கு கிடைக்க வில்லை.... " சேலம் வசந்த் "
Comments
Post a Comment