தாடி
1977 ஆம் ஆண்டு...பத்தாம் வகுப்பு படிக்கும் போது, என் bench ல் அமரும் நண்பன் ஒருவர்,ஒரு பெயரின் ஆரம்ப வார்த்தையைச் சொல்லி,ஒரு கவிதை எழுதிக் கொடு.. அந்தப் பெண்ணைக் காதலிப்பதுப்போல.. ...இது உன் திறமைக்குச் சவால் என்றார்.... பெயரின் முன் வார்த்தை கவிதை எழுத ஏதுவாக இருந்ததால்... எழுதிக் கொடுத்தேன்..ஆனால் அந்தக் கவிதை என்னுடையது அல்ல.. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு . seience மாஸ்டர்...திரு.சந்திரசேகரன் சார்...என்னை LAB க்கு வரச் சொன்னதாக. Office Assistant... அவர் ஒரு தாத்தா... நன்றாக பாடுவார்...என்னிடம் சொன்னார்....Lab க்குச் சென்றப் பொழுது ... அங்கே,சந்திரசேகரன் சார், சேலம் பாலு சார். மற்றும் பெண்களுக்கு வகுப்பு எடுக்கும் ...மரியாதைக்குரிய சார், கர...கர..குரலில் பேசுவார்...பெயர் நினைவுக்கு வரவில்லை...நின்றுக் கொண்டு இருந்தனர்... மூவரும் என்னை முறைத்துப் பார்த்தனர்... சந்திரசேகரன் சார், என்னை இங்கே வா..என்றார்... அருகில் சென்றபோது.. மூவரும் என்னை மேலும் கீழும் மீண்டும் முறைத்துப் பார்த்தனர்... சார் என்று. ..சிரித்துக் கொண்டே...வினவினேன்... சந்திரசேகரன் சார், ஒரு பேப்பரை எடுத்துக் காட்டி...இது... நீ எழுதியது தானே என்றார்...நான் அதைப் படித்து விட்டு...ஆமாம் சார் என்றேன்.. பாலு சார்... இதை எழுதி என்ன செய்தாய் என்றார்..நடந்ததைச் சொன்னேன்... அதான்...அதான்..இவன் எழுதிக் கொடுத்தான்...அவன் lunch bag ல் போட்டு விட்டான்..என்று.. மிகக் கோபமாக கர கர குரல் ..சார். கோபமாகச் சொன்னார்..., .எனக்கு உள்ளூர பயம் எழுந்தது .. பிறகு சிறிது நேரம்...மெளனமாக என்னை ஆழ்ந்து கவனித்த சந்திரசேகரன் சார்... நீ நல்லா எழுதரே... ஆனால் அவைகள் நல்லதுக்குத்தான் பயன் படனும்... நீ எழுதியது எப்படி தவறாக பயன் படுத்தப் பட்டு இருக்கிறது என்பதை பார் என்று.... நடந்த விவரத்தை எனக்கு விவரித்தார்... என் தவறு எனக்கு நன்றாகப் புரிந்தது... மன்னித்து அருள வேண்டிக் கொண்டேன்... சேலம் பாலு சார், என் தோளைத்தட்டி உஷார் என்றார்... கர. கர சார்.. இப்ப இதெல்லாம் வேணாம்... படிக்கிற தப்பார். இத யாரிடமும் சொல்லாதே என்றார்... இதை அந்த நண்பனிடம் நான் சொல்லவே இல்லை... காலப் போக்கில் தெரிந்துக் கொண்டேன் ...அது நண்பனின் ஒரு தலை யென்று... அந்தக் கவிதையை இன்று பதிவிடுவது பொருத்தமானது.... என்பதால் பதிவிடுகிறேன்.... "வாடி விழும் சின்ன இடைக் கொண்ட மீனா - உன் விழி இரண்டும் என்ன சேல் கெண்டை மீனா... தாமரை முகத்தவளே தளிர்க் கொடியே மீனா... நீ தாமரைமேல் வீற்றிருக்கும் கலைமகள் தானா........சாலையிலே நடைப் பயலும் கள்ள விழி மீனா. - நீ சோலையிலே துள்ளி ஓடும் புள்ளி இன மானா.... பொதிகை மலை விட்டெழும் தென்றலே மீனா - நீ பொற்க் கலசம் தாங்கி வரும் சிற்றேர் தானா..... அன்பினால் அழைப்பு விடும் ஆருயிரே மீனா. உன் அடர் கருங் கூந்தல் என்ன கார் முகில் தானா....தென்னகத்து உடைமை அந்தத் தீந் தமிழே மீனா. உன்னகத்துக் கோவிலிலே எழும் தெய்வம் நானா...... .... பிறகு....அந்த நண்பனையும் தனியாக அழைத்து ஆசிரியர்கள் எச்சரிக்கை செய்ததில் இருந்து அந்த நண்பன்... அன்றில் இருந்து என்னிடம் பேசுவதில்லை.. பிறகு... முப்பது ஆண்டுகள் கழித்து...சேலம் பஸ் நிலையத்தில்...அந்த நண்பனை...அடையாளம் கண்டு...பேசினேன்..அவர் சொன்னார்...பள்ளியில் படித்த போது ஏற்ப்பட்ட அந்தத் தோல்வி...இரண்டாவது முறையும்... நிகழ்ந்ததாகவும்... அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டிருந்தால்....எதிர் கால வாழ்க்கை நலமாக அமைந்து இருக்கும் என்றும்...வேதனையோடு சொன்னார்... என்ன ஆயிற்று என்று கேட்டபோது.. என்னிடம் சத்தியம் செய்து கொடுத்தவள்... அவளுக்கு வந்தவர்....அரசு வேலை என்றதும்... மறுத்து விட்டாள்... நான்...என்னை மணந்து விடு...என்றேன்...அவள்...என்னை... மறந்து விடு என்றாள்... எனக்கும் அரசு வேலை கிடைத்து விட்டது...இப்போது மனைவியுடன்....இரண்டு பெண் குழந்தைகள்.... தாடியை நீவிக் கொண்டார்... சரி.. அப்போது விட்ட தாடி தானா இது...என்றேன்... இந்தத் தாடி என் வாழ்வின் இறுதி வரை வரும்...வளரும்...என்றவரை ....மீண்டும் இன்று வரை காண முடிய வில்லை... " சேலம் வசந்த் "
.
Comments
Post a Comment