மலை சாய்ந்து போனால்....
கோவை..கோவிந்தராஜ்...கோவை..தேவராஜ்... மேட்டூர்...ராஜு..ஆகிய நண்பர்களோடு... வீடியோ கான்பரன்ஸ் ..ல் மீண்டும் எங்களின்... மேட்டூர்.. வைத்தீஸ்வரா பள்ளியின்..46 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த. .பள்ளி பருவ நிகழ்வுகளை... நேற்று 25.10.2024 அன்று. மணி 3.15.to 05.15 வரை... தேடித் தேடி ஒவ்வொன்றாக எடுத்து... ஆராய்ச்சி சிந்தனையோடு... பேசி சிரித்துக் கொண்டு இருந்தோம்... அப்போது...நண்பர் ராஜு...தான் +2 முடித்தப் பிறகு நல்ல ஒரு மார்க் அதாவது 1980 ஆம் வருடத்தில் 710 மார்க் out of 1200 எடுத்ததாகவும்...அப்பொழுது..மருத்துவ படிப்பு படிக்க பெறும்பாலும் யாரும் விரும்புவதில்லை என்றும் ... Arts குரூப் ல் பட்டம் பெருவதையே...பெருமையாக...கருதுவதாகவும்...மேலும். Medical...படிக்க அதிக பணம் செலவாகும் என்பதாலும்...அந்த காலத்தில்...பணப் புழக்கம்..தாராளமாக இல்லாத காரணத்தினால்..ITI... Diploma...BA... Bsc...Bcom.. teacher training போன்ற...படிப்புகளையே... தேர்ந்து...படிக்க ஆவல் கொண்டதாலும்... மெடிக்கல் படிப்பை...நடுவோர்...குறைவாகவே இருந்ததாலும்...தான் பெற்ற. மார்க்கிற்க்கு...apply செய்தவுடன்... ராஜுவிற்கு மெடிக்கல் MBBS படிக்க... இன்டர்வியூ வந்ததாகவும்....அதற்க்காக...கோவைச் சென்று... இன்டர்வியூ நன்றாக செய்து மெடிக்கல் seat வாங்கி விட வேண்டும் என்ற வெறியோடு.. வைராக்கியத்தொடு இன்டர்வியூ attend செய்ததாகவும் சொன்னார்....அதற்கு...கோவிந்தராஜ்... இன்டர்வியூவில்... என்ன மாதிரி கேள்விகள் கேட்டார்கள்... என்றுக் கேட்டார்...அதற்கு ராஜு...டாக்டர் படிப்பாயிற்றே...கேள்விகள்...மிக deep ஆக...இருக்கும் என்று நினைத்து...pottany... zoology. .. Chemistry என...... விடிய விடிய கண்விழித்து... படித்துக் கொண்டு...பயந்துக் கொண்டு போனால்.. இன்டர்வியூவில்.. கேட்டக் கேள்வி ..என்ன வென்றால். . ஆட்டு இறைச்சி... மாட்டு இறைச்சி..இரண்டுக்கும்....வித்தியாசம். . என்ன...என்று கேட்டார்களாம்.... அதிர்ந்து போன...ராஜு..அது விலை அதிகம்...இது விலைக்...குறைவு.. என்று பதில் சொன்னாராம் . எங்களின்..சிரிப்பின் ..நடுவில்...தேவராஜ்...ராஜு உனக்கு கேட்ட கேள்வி சரியானது தான்...என்றார்... ஏனென்றால்... தோல்... சதை... நாளம்...நரம்பு...இரத்தம்... சவ்வு... மூட்டு... எலும்பு . .ஆகிய வற்றால் ஆனதே... மனித உடல்... அதற்கு வைத்தியம் பார்க்க...அறுவை சிகிச்சை செய்யச்...சார்ந்தது தானே...மருத்துவப் படிப்பு....அதனால்.... கேட்டக் கேள்வி சரியானது என்றார் கோவிந்தராஜ்.... மேலும். .ஓமலூர் அரசு உயர் நிலைப் பள்ளி. தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன உயர் நிலைப்பள்ளி... கொளத்தூர் நிர்மலா உயர் நிலைப்பள்ளி... சங்ககிரி சங்கர் உயர் நிலைப்பள்ளி... ஆகிய பள்ளிகளில்...சென்று விளையாடியதையும்...பெற்ற வெற்றிகளையும்...தோல்விகளையும்...அவர்கள் மூவரும்... அளவலாகிக் கொண்டு இருக்கும் போது...நான் மெளனம் ஆகிப் போனேன்... என்ன வசந்த்... தூங்கி விட்டாயா என்று...கோவிந்த ராஜ் கேட்டார்...இல்லை...நீங்கள் இந்த விளையாட்டு நிகழ்வுகளை...சொல்லும் பொழுது.... நம் VHSS பள்ளியில் டென்னிஸ் பாலில் foot பால் விளையாடியது நினைவுக்கு வந்தது என்றேன்...அது என்ன என்றார் தேவராஜ்...நான்... ஏழாவது படிக்கும்போது.... Sub junior... ல்..முதன் முதலாக...கப்...மற்றும்...certificate... வாங்கியது...கிரிக்கட் பால் throw வில்...முதலில் வந்ததுதான்...இரண்டாவதாக....சங்கர ராமன்...வந்தார்... அதே நேரத்தில். .. 100 மீட்டர் running ல் முதல் பரிசு வாங்கியது...நண்பர் ரவீந்திரன்...நானும் ஓடினேன்...பரிசு எதும் வாங்க வில்லை...காரணம் ...நண்பர் ரவீந்திரன். மிக நன்றாக. ஓடினார்....அதன் பிறகு தான்...எனக்கும்....நண்பர்... ரவீந்திரனுக்கும் நட்பு...வளர ஆரம்பித்தது. ஒரு நாள் ரவீந்திரன் வீட்டுக்கு சென்று இருந்தேன்.. வீட்டு மேல் மாடி ஏறும் திருப்பத்தில்...வேர்க்கடலை...முறத்தில்....வைத்து...வெய்லில் காய்ந்து கொண்டு இருந்தது. .ரவீந்திரன்.. தந்தையார்...என்னை...அன்போடு... விசாரித்து... நன்றாகப் படியுங்கள். . பெரிய பெரிய...அதிகாரிகளாக வாருங்கள்.. அனைவரும்... சமமாக வாழ உதவுங்கள் ..என்று...அறிவுரைச் சொன்னார்....அவர்... ஒரு communist... தொழிற்சங்கத் தலைவர்... மேட்டூர் RS... ஶ்ரீ காளியம்மன்...கோவில் திடலில் நடக்கும்... தொழிற்ச் சங்க கூட்டத்தில்...பேசும் போது அவரது.. சமுதாய சீர்திருத்த விழ்ப்புணர்வுக் கொண்ட...பேச்சுக்களை நான் கேட்டிருக்கிறேன்....அந்த. சமூக நீதி கருத்துக்கள் என்னை பலமுறை.... சிந்திக்க வைத்ததுண்டு....அப்படி அவரோடு....பேசிக் கொண்டு இருக்கையில்....நண்பர்...ரவீந்திரனின் தயார் படிக்கட்டில் காய்ந்துக் கொண்டு இருந்த வேர்க்கடலையை... வறுத்து எடுத்து ...எனக்கு கொடுத்து...சாப்பிடு...என்று... என்னைப் பெற்றத் தாய்ப் போல...பாசத்துடன்...என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்... பிறகு .அந்தப் பாசத்துக்கும். .. நேசத்துக்கும் உரிய அந்த பெற்றோரின்...அன்பில் இருந்து.... விடைப் பெற்று நானும் ரவீந்திரனும் வெளியே கிளம்பிச் சென்றோம்.... 1978 க்குப் பிறகு. ...நண்பர் ரவீந் திரனின் தொடர்பு ஏற்பட வில்லை...கடந்த செப்டம்பர் மாதம் 5 தேதி அன்று...VHSS 1978 group யை ....தடவிக் கொண்டு இருக்கும் போது....புதுசாம்பள்ளி.. .நடராஜன்...ஒரு பகிர்வு....போட்டார்.. சரி அவரிடம்....பேசுவோம் என்று....பேசி அவரை அடையாளம் கண்டு கொண்டேன்... அப்போது அவர்...என்னை ... நன்றாகக் நினைவு இருப்பதாகவும் .. baskat ball யை நடக்கும் போது...நான்...எப்போதும் கிரவுண்டில் தட்டிக் கொண்டே நடப்பது...மிக நன்றாக நினைவு இருப்பதாகச் சொன்னார்...அப்போது...நண்பர்....ரவீந்திரன்...உடன்....அடிக்கடி...தொடர்பு கொண்டு பேசி வருவதாகச்.... சொன்னார்...உடனே நான்...அந்த பள்ளிப் பருவத்து சிநேகிதனை நான் தேடிக் கொண்டு இருக்கிறேன்.... அவரது...phone number கொடுங்கள் என்று... உடனே வாங்கினேன்.... கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி அன்று.... நண்பர் ரவீந்திரன் phone number க்கு காலையில் இருந்தே call கொடுத்தேன்....விட்டு விட்டு 7 முறை செய்த அழைப்பில்...அன்று இரவு 8 மணி அளவில்...நண்பர் ரவீந்திரன் கிடைத்தார்...அறிமுகம் செய்து கொண்டு அளவில்லாத மகிழ்வுடன்....இருவரும்....செய்திகளைப் பரிமாறிக் கொண்டோம்....அவர்....tamil nadu police ல் பணி ஆற்றி ஓய்வு பெற்று தற்போது...சேலம் ஸ்டீல் plant அருகே. பிளாட் வாங்கி வீடு கட்டி. வாழ்ந்து வருவதாகச்....சொன்னார்....SI ஆக பணி புரிந்து.... ஓய்வு பெற்றவரா என்று கேட்டதற்கு....இல்லை...போலீஸ் ஆக.... பணி ஆற்றி ஓய்வு பெற்றதாகச் சொன்னார்....தற்பெருமை இன்றி....simply city ஆக அவர் சொன்னது...அவர் தந்தையின்.... கம்யூனிச தத்துவத்தை.... நினைவுப் படுத்தியது....இப்படி VHSS ரவீந்திரன் பற்றிய நினைவால்... மௌனித்த நான்...1985ஆண்டு என்னோடு...பணி புரிந்த... Railway...ரவீந்திரன்... நியாபகத்துக்கு வரவே....அவர் கோவை...காந்திபுரம்... பகுதியில் வசித்து வந்தவர்...அவர் தந்தையார் பெயர் திரு.சின்னுசாமி...CTTI....இனிய நண்பர்.....Railway வேலையை...resign செய்து விட்டு...defence ல் quality control inspector ஆக பணியாற்றச் சென்றுவிட்டார்... அவரைப்பிடிக்க முடியுமா எனக் கேட்டேன்....கோவை யைப் சேர்ந்த கோவிந்தராஜுவிடம்....அதற்கு....கோவை...தேவராஜ்...ஒரு idea சொன்னார்...கோவையில் உள்ள defence கேன்டீனில்.... விசாரித்தால் அவரைப் பிடிக்கலாம்...என்று...இதன் நடுவில் ராஜு ...திடீரென ஒரு அதிர்ச்சியான...செய்தியைச் சொன்னார்... இதுவரை பள்ளிப் பருவத்து நிகழ்வுகளை. சிரித்துப் பேசி வந்த....சூழ்நிலையில்....ராஜு சொன்ன செய்தி....அந்த சந்தோசமான... மனதினை ....சுக்கு நூறாக உடைத்து... சின்னாப் பின்ன மாக்கியது....நான் மீண்டும் மெளனம் ஆனேன்...அலப்பரியான ...அந்த கலந்துரையாடலை என்னால் தொடர முடியவில்லை.... தொடர்பை cut செய்து.....போலீஸ் ரவீந்திரனுக்கு ஃபோன் செய்து... உண்மையா என்று உறுதி செய்ய...ஒரு செய்தி கேள்வி பட்டேன்...ரவி....என்று தயங்கும் பொழுது....யார் சொன்னார்....என்று கேட்டார்... ராஜூ..உண்மைதான்....எப்படி என்று கேட்டப் போது..... கொரானாவில்... பாதிப்புக்கு உள்ளாகி...கடந்த வருடங்களில்..bed ridden ஆகி... நினைவிழந்து....கை கால்கள் செயல் இழந்த நிலையில்....ஒரு குழந்தையைப் போல மருத்துவப் பணி செய்தும்... வாழ்க்கைத் துணையை காப்பாற்ற முடிய வில்லை....இனி என்ன வாழ்க்கை இருக்கு....என்னுடன் இருக்கும் ஒரு மகளுக்கும் திருமணத்தை.முடித்து விட்டால்...எல்லாக் கடைமையும்.... முடிந்தது....சென்ற செப்டெம்பர் 30 அன்று...முப்பது கும்பிட்டாசு....என்று..சோகத்துடன்... சொன்னார். ..அந்த வார்த்தைகள்........ அப்பப்பா..... ஆறுதலாக வார்த்தைகளைச் சொல்லும் பொழுது அது ஒரு தைரியமாக இருக்கும்...என்று... அவரை தைரியப் படுத்தினேன்...பிறகு.... மனப் பாரத்தொடு....மேல் மாடியில்... ஈஸி chair ல் ஆட்கொண்டு...மேலே அண்ணார்ந்து...பார்க்கும்போது..கடந்த ஒரு வாரமாக வானில். ... இங்கும் அங்கும் நிறைந்து. நீந்திக் கொண்டு இருந்த கரு மேகங்கள். மீண்டும் வந்து பெரும் மேகங்களாக. ..இடி மின்னல் கொண்டு... கன மழையாக... பயமுறுத்துமோ என தோன்றியது...மனம் கனத்த இந்த நேரத்தில்....50 வருடங்களுக்கு...முன்னால்...இலங்கை வானொலியில் கேட்ட பாடல்....நினைவுக்கு வருகிறது....... https://youtu.be/zENkAcKLSKU?si=j945lF5gkLh-YQDM. (Https யை அழுத்தி... மேலே வரும் ஓபன் பட்டனை அழுத்தவும்..).
Comments
Post a Comment