ஆடிப் பெருக்கு

 ஆடிப் பெருக்கு.. ஆடிப் பதினெட்டு.... பத்தாம் மாத கர்ப்பிணிப் பெண் போல.... நிறைவுக் கொண்டு... பூரிப்புக் கொண்டு...தமிழகத்தின்... வாழ்வாதாரத்தின் தாய் .. பொன்னி நதி... பொங்கி ஓடும் ஓசை வானை முட்டுகிறது....                                  தினமும் காலையில். ..,ராஜூ , ஜெகன் சங்கர் கோபு என்கின்ற மைசூர் கோபு, தேவராஜ் என்கின்ற ராமகிருஷ்ணன்,ரவீந்திரன் ,குணசேகரன் மற்றும் பல நண்பர்களுடன் காவேரி  ஆற்றில் நீந்தி குளித்து விட்டுத் தான் VHSS பள்ளிக்கு வருவோம்....                 ஆண்டு முழுக்க காலையில் காவேரி ஆற்றில் குளிக்கும் நாங்கள்...ஆடி பதினெட்டு அன்றும்  ஆடி இருபத்தெட்டு  அன்றும் காவிரி ஆற்றில் குளிக்க மாட்டோம்...     வீட்டில் .. அருகன் புல்லோடு ஐந்து எண்ணெய் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து காலை உணவு முடித்து, வெளியே கிளம்பி விடுவோம்..                                       மேட்டூர் அணை நோக்கிச் செல்லும் எங்களின் நண்பர்கள் படை வருவதை அறிந்த.... பாதையின்  இருபுறமும் பல்வேறு பொருள்களை வியாபாரம் செய்ய... கடைகள் நிறைய வைத்து இருக்கும் ...பொரிக் கடலை கடைக்காரர்கள். ..  குச்சி வைத்து நுனியில் பெரிய அளவிலான பலூன் வைத்துக் கட்டிய. . பலூன்களை கையில் டம். . டம்... என்று அடித்துக் கொண்டு.. கைவீசி  வரும்  எங்களைப் பார்த்ததும்... தம்பிகளா.   .. வாங்க ...வாங்க .. நல்லா இருக்கீங்களா... போன வருஷம் பார்த்தது...என்று  எங்களுக்காகவே சிறு சிறு பொட்டலங்களாக நியூஸ் பேப்பரில் கட்டி வைத்திருக்கும் பொரி, கடலை, நாட்டுச் சர்க்கரை கலந்த கூம்பு வடிவ பொட்டலங்களை ஆளுக்கு ஒன்றாக கொடுத்து ... சரி போய்ட்டு வாங்க....தம்பிகளா... என்று வியாபாரத்தை கவனிப்பார்கள்... நாங்களும்.. அண்ணா thanks வரண்ணா...என்று... நகருவோம்... அடுத்து...பேரிக்காய் , சோளக்கதிரு    என்கின்ற வேகவைத்த ...மக்காச்சோளம் விற்கும் கடைகள்....     குனிந்து பேரிக்காய் ஒன்றும்..மக்காச்சோளம் ஒன்றும் எடுக்கும் எங்களில் ஒருவர்..நிமிரும் போது ... பின்னால் நின்று இருக்கும்..எங்களின் ஒவ்வொருவர் கைகளிலும் தேவையான பேரிக்காயும்...மக்காச்சோளமும்.  இருக்கும்...                                        என்ன.. அண்ணா ...ஒரு பேரிக்காய்...ஒரு சோளக்கருது...          அவ்வளவுதான்...    எவ்வளவு...காசு...என்றால்... வேணாங்கண்ணு...   கடைக்காரர் சிரித்துக்கொண்டே எங்களை  பார்ப்பார்... நகர ஆரம்பிப்போம்...  அடுத்து ... கீழ்மேட்டுர் பாலத்தைக் கடந்து... வலது பக்கமாக திரும்பி          மகா ஶ்ரீ அணைக்கட்டு முனியப்பனை நோக்கிச் செல்லும் மண் திட்டு வழியில் கூட்ட நெரிச்சலில்...கலந்து வரும் போது... கையில் இருந்த பொரிக் கடலை பேரிக்காய் முதலியன  தின்று முடிக்கப்பட்டு இருக்கும்.....          அங்கே எதிரில் பரபரப்பாக இருக்கும்...பாயாச கடை எங்களை பாசத்தோடு எட்டி இழுக்கும்..              கம ....கம வென்று ஏலக்காய் வாசனையோடு...     மேலேத்  தூக்கி ஒரு ஆத்து ஆத்திக் கொடுக்கும் பாயாசக் கடைத் தாத்தா ....கண்ணாடி டம்ளரில் ஊற்றிக் கொடுப்பார் ..வாங்கிக் கொண்டு உடனே நகர முடியாது...வேறு வழி இல்லை...அங்கே இருக்கும் குறுகிய இடத்தில் நின்று... முழங்கையால்....மேலும் மற்ற வையால் .....இடித்துச் செல்பவர்களுக்கு வழிக் கொடுத்து.. சுவைத்து பாயசத்தைக் குடிப்போம்.... ஆனந்தம் பெரு ஆனந்தம்.... குடித்து விட்டு....தாத்தா... எவ்வளவுத் தாத்தா என்றால்...இருக்கட்டும்... பரவாலக் கண்ணு...  என்பார் காவிப் பல் தெரிய..அருகில் டம்ளர் கழுவிக் கொண்டு இருக்கும் பாட்டி ..சிரித்துக் கொண்டே போங்க... போங்க...என்று    தலையை  மடக்கி ஆட்டும்..... சரிப் பாட்டி என்று..... சிரித்துக் கொண்டே கூட்டத்தில் தலை முட்டி நுழைவோம்...                              அணைப் பார்க்கில் உள்ளே நுழைய ஐம்பது பைசா டிக்கட்... டேய்... டிக்கட் எடுத்தாச்சு... வாடா..என்று சொல்லிக் கொண்டே கூட்டத்தோடு கலந்து உள்ளே நுழைவோம். எங்களைத் தடுத்துக்    கேட்டால்.. PWD ல் பணியாற்றும் சித்தப்பாவின் பெயரைச் சொல்லி உள்ளே நுழைவோம் ...   நாங்கள்    நேரத்தை வீணடிக்காமல் நகருவதால்... டிக்கட் எடுக்க நேரம் இருப்பதில்லை     ...          உள்ளே நுழைந்ததும்....மேலும் கீழும் ஆடும் ஊஞ்சல்... சுழன்று சுற்றும் ராட்டினம்...மேலிருந்து கீழே சர் என்று சறுக்கும் சறுக்கல்.....முயல்... மான்...புறா...வெள்ளை எலி...பாம்பு பண்ணை....இவைகளோடு....தாவித் தாவி மரக்கிளை எங்கும்..... கொர். .... கொர் என்று...கும்மாளமிடும்.....குரங்குகளின்   கூட்டு குடும்பம்... கூ ...கூ என்று கூவும்... குயில்களின்.  குரலின் இனிமை....செயற்கைக் குளங்களில் மலர்ந்து இருக்கும் செந்தாமரை மலர்கள்.... வண்ண..வண்ண நிறங்களில்.... கண்ணைச் சுண்டி இழுக்கும் அழகு மலர்கள்...மலர்களில் தேன் உறிஞ்ச....சுற்றிச் சுற்றி வரும் வண்டினங்களின் படபடக்கும் வண்ண இறக்கைகள்... சப்போட்டா... மா..கொய்யா... தென்னை...இவைகளோடு.... அந்தப் பகுதியில் பிரத்தியேகமாக.... அமைக்கப் பட்டிருந்த பந்தலில்.... படர்ந்து இருந்த... மனோரஞ்ஜிதத் தின் வாசனை...      வண்ண மீன் களின் கண் காட்சி...                       வீட்டில் சமைத்துக் கொண்டு வந்திருந்த உணவோடு....வெளியே விற்கும்...மீன் வறுவலை சேர்த்து.. வட்டமாக குடும்பம் குடும்பமாக பச்சைத் புல் தரையில் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் ....பங்கிட்டுச்....சாப்பிடுவதைச்.... சுற்றி.. உர்...உர்....என்று தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருக்கும்...நாய்களின் கூட்டம்.... ....இப்படி....பார்க் roundsup முடியும் நேரம் ... மழைத்தூர
ஆரம்பித்து நிற்கும்..மீண்டும் மழைத் தூறும்.. நிற்கும்.  சிலு சிலு வென காற்று வீசும்...குளிர்ச்சியாக இருக்கும்...வானம்... மழை மேகங்களை அங்கும் இங்கும் தள்ளி விட்டுக் கொண்டு இருக்கும்..        அந்தி நேர சூரியன் மேற்கே பால மலையின் உச்சியில் முகம் மறைக்க ஆரம்பிக்கும்.   .                                  மீண்டும் பதினாறு கண் பாலம் வரும் போது .  பஸ்... லாரி வாகனங்க  ளோடு நிரம்பி ...நகரும் மக்கள் வெள்ளம் பாலத்தின் மேலே... தலைத் தெறிக்க ஓடும் நீரின் வெள்ளம் பாலத்தின் கீழே.. கையில் இருக்கும் குச்சிப் பலூனை மேலே தூக்கிப் போட்டால் .. சிறீப் பாய்ந்து ஓடும் நீரின் வேகம் தொட்டு பலூன் மேலே உயர எழும்..மீண்டும் சுழன்று ...சுழன்று மீண்டும் நீரில் படும்... எழும். ... விழும்...தொடும்... மேலே எழும்...நீரோடு கலந்து மறைந்தே  போகும்... பலூன் நீரில் பட்டு மேலே எழும் போது .  ஹெய்...என்று எழும் எங்களின் சத்தம். ...ஓடும் வெள்ளத்தின் ஹோ... வென்ற சத்தத்தை விட பெரியதாக இருக்கும்.. அட . .  அடா.  ..அந்த சந்தோசம்... மகிழ்ச்சி...கண் முன் எழுகிறது.... அந்த நண்பர்கள் படை நண்பர்களையும் ... காவேரி நீரின் பிரவாகத்தையும்... பலூன்..பொரிக்கடலை...பேரிக்காய்... பாயாசக் கடை ...நெருக்கி அடித்துக் கொண்டு... மனம் மகிழ்ந்த முகத்தோடுச் செல்லும் மக்களின் கூட்டம்  ....இவைகள் ... இன்று.... நேரில் பார்ப்பது போல உள்ளது....               அந்த வயதில்.. அந்த செயல்கள்.. தெரிந்து செய்ததோ ..இல்லை தெரியாமல் செய்ததோ தெரியவில்லை...       சந்தோசம் .. ஒன்றுதான் அப்போதைய ... தேவையாக இருந்தது..மேலும்.. ஆடி ஒன்று அன்று ஆரம்பித்த.. பாரதப் போரின் முடிவில்....ஆடிப் பதினெட்டு அன்று...வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள்...மக்கள்.  .. தங்களின் ஈட்டி ...கொடுவால். வில்..வேல். அம்பு.. சிலம்பு ..கத்தி. சாமி சிலைகள் முதலானவைகளை....புது வெள்ள காவேரி ஆற்றில் கழுவி ... எண்ணெய்த் தேய்த்து முழுகி நீராடி..தங்கள் சாப...பாவ தோஷம் நீக்கி... காவிரியில் விட்டுச் செல்வார்கள் ..  அதனால்தான் . ...உள்ளூர்     வாசிகளான நண்பர்கள் நாங்கள்...ஆடி பதினெட்டு மற்றும் இருபத்தெட்டு அன்று மட்டும்  காவேரி ஆற்றில் குளிப்பதில்லை...               டீன் ஏஜ் பருவத்தில் படித்துக் கொண்டிருக்கும் வயதில் எங்கள் விருப்பம் போல செலவு செய்ய பெற்றோர்கள் தேவையான பணம் தருவதில்லை ..அதனால் தான்...எங்களின்... நண்பர்கள் படை பலூனை அடித்துச் சப்தம் செய்து...பாயாசம் முதலானவைகளை காசு கொடுக்காமல் பெற்றுக் கொண்டோம் ..  ஏனென்றால்...கூட்ட நெரிச்சலில்...கடை மீது நாங்கள் விழுந்தால்.... விற்கும் பொருள்களின் சேதாரம் அதிகம் ...அதனால் தான் கடைக் காரர்கள் எங்களுக்கு அப்படி பொட்டலம் கட்டிக் கொடுத்து  நகர விட்டார்கள்.. காலம் கடந்த பிறகு... இப்பொழுதெல்லாம்... தெருக்கடைகாரர் ... தள்ளு வண்டிக் காரர்...சில்லறை இல்லை என்றாலும்.. மீதியை...வைத்துக் கொள்ளுங்கள் ..என்று கொடுத்து விட்டு வருகிறோம்....பசி... என்போரையும்.. மாற்று திறனாளிகளையும் ...பார்த்தால்...முடிந்த தர்மம் செய்கிறோம்.... அப்போதைக்கும்... இப்போதைக்கும் எவ்வளவு மாற்றங்கள்...                                                " சேலம் வசந்த் "

Comments

Popular posts from this blog

ஆத்மா

ராகம்

நாராயணி கண்ணகி.