பட்டாம் பூச்சி

2012 ம் வருடம்.... சேலம் கோட்டம்.  Railway divisional ஆபீஸில் .... பணியாற்றிய போது..AC குளிரில் coumputer ரையே பார்த்துக் கொண்டு இருப்பது. . வெறுப்பாக இருக்கும்... இதனிடம் இருந்து விடுபட..... மெயின் gate க்கு வெளியே வந்து....ஸ்டீல் plant செல்லும்  பாலத்தின் கான்கிரீட் கைப் பிடிச் சுவரில் சாய்ந்து ...மேலே குடை போல விரிந்து கிடக்கும் மரக் கிளைகளின் நிழலில் நின்று..... வேக வேகமாக விரைந்துச் செல்லும்....          வாகனங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தால் போதும்....ஒரு நல்ல புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.....           இப்படி ஒரு நாள்.... நின்றுக் கொண்டு சென்செஸ் எடுக்கும் போது .... டக் என்று கண்ணில் பட்டார்...சீனு....சீனிவாசன்....உடனே. ..நான் சீனு... சீனு... யென்று கூப்பிட்டால்.... வேக வேகமாக.... பெடலை அழுத்திக் கொண்டு. ..பாலத்தின் மீது சைக்கிளில் போய்க் கொண்டு இருக்கிறார் .. என் கூப்பாடு சத்தத்தைக் கேட்டு பின்னால் சென்ற ஒரு bike காரர்.... சீனுவிடம்...உங்களை.... அவர் கூப்பிடுகிறார் என்று சொல்லி விட்டுச் சென்றார்.... சைக்கிளை இடது புறமாக ஓரம் கட்டி....நான். . வேக... வேகமாக ஓடி வருவதைக் கண்டு    மிரளுகிறார் சீனு...நான் யார் என்பது அவருக்கு அடையாளம் தெரிய வில்லை... அருகில் சென்று ....நீங்கள் சீனு தானே ..மேட்டூர் வைதீஸ்வரா ஸ்கூல்  ....என்று அடையாளப் படுத்திச் சொன்னேன்... அப்பொழுது தான்...அவர் ஒரு நிலைக்கு வந்தார்....நீங்க... என்றார்.... சொன்னேன்... என் கையைப் பிடித்து...சுள் என்று ஒரு கிள்ளு கிள்ளினார்...நான் இப்படி திடீரென கிள்ளுவார் என நினைத்துக்    கூட பார்க்கவில்லை.... கிள்ளிவிட்டு....எப்படி என்று... ஹி....ஹி என்று சிரித்தார்... இப்ப என்னை.. நல்லா நியாபகம் வருமே      என்றார்....              அடேங்கப்பா...இப்படி கிள்ளு வாங்கி...வலியை அனுபவித்தது... மூணாவது... நாலாவது படிக்கும் போது அல்லவா...                           வலித்த இடத்தை தடவிக் கொண்டு...சீனு ..இப்படி...ஆள்காட்டி விரல் நகத்தை பெருவிரல்  நகத்தோடு பிளஸ்  போல வைத்து கிள்ளும் பழக்கத்தை... இன்னும் விட வில்லயா...என்று கேட்டேன்....           ..விட முடியுமா...தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்... என்றுச் சிரித்தார்...    இப்ப எங்க இருக்கீங்க...என்ன செய்றீங்க என்று விசாரித்தேன்.. இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்தில் பணியாற்று வதாகவும்.... அங்குள்ள incharge அதிகாரியை... ஒரு மாதத்துக்கு முன் மிரட்டி சண்டை போட்ட தாகவும்...அதனால்... சீனுவை  சஸ்பென்ஷன் செய்து விட்டதாகவும் சொன்னார் ..ஒரு யூனியன் தலைவர் வர சொன்னாராம்... அதற்கு அவரைப் பார்க்கச் செல்வதாகச் சொன்னார்....                                   மேட்டூர் அணை வைதீஸ்வரா பிரைமரி பள்ளியில்....திரு.பாலசுப்ரமணியம்...Head master .. திரு. ராமகிருஷ்ணன்... மதிய உணவு மற்றும் ஸ்பெஷல் activity ஆசிரியர்... உதாரணம் .. ஆடுவோமே பள்ளு பாடுவோமே.... ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று.......ஜெய ....கிருஷ்ணா ....முகுந்தா...முரா....ரி. . ஆகாச... வாணியின் செய்திகள் ..இவைப் போன்றவற்றை.. பள்ளியின் நடுக்கட்டிடத்தில் ... நீண்ட ஹாலில் ...மேல் அட்டாலில் ..இருந்த பெரிய வானொலியில் மிக sound கொடுத்து .. பள்ளியில் தூங்கிக் கொண்டு இருப்பவர்களை எல்லாம்...எழுப்பி விடுவார்...    அடுத்து... கருப்பு நிறத்தில்..மிக உயரமாக. .. பார்ப்பதற்கே பயமாக இருப்பார்... ஜேம்ஸ் வாத்தியார்...PT master...இவருக்கு நேராக நடந்து வரும் பயல்கள் அந்தப் பள்ளியில் யாரும் இல்லை.. பார்த்தாலே பயம் தான்....முரட்டு உருவம்...            அடுத்து.....திருமதி. இராஜ லட்சுமி டீச்சர்....இவரிடம் தான்...நானும் சீனுவும் ஐந்தாவது படித்தோம்...சீனு எப்போதும் ஏதாவது சேஷ்டை பண்ணிக்கொண்டு தான்   இருப்பார்... கிள்ளுவதில்...நல்ல expert... சீனு கிள்ளி இரத்தம் வராதவர் என்று யாரும் இல்லை...கிள்ளுவதில் அவர் என்றுமே அவர் king தான்...பள்ளியில்.   பையன்கள் பலரை கிள்ளி பழக்கப்பட்ட சீனு ...வகுப்பில் விளையாடிக் கொண்டு இருந்த ஒரு பெண் பிள்ளையை....(அந்த பெண்ணின் பெயர் இன்றும் என்  நினைவில் உள்ளது..). சீனு..காதில் கிள்ளிவிட்டார்...அந்த பெண்ணின் கம்மல் அணியும் மென்மையான காது குத்தும் பகுதியில்...இருந்து கொட்டிய இரத்தம்...வெள்ளை யூனிஃபார்ம் சட்டை நிறைய....அம்மா என்று அந்தப் பெண்... கத்திய சத்தம் கேட்டுத்தான் ..எங்கள் ஒவ்வொருவரின்.. ஆட்டமும் வகுப்பில் டக் என்று அடங்கியது.... ராஜலட்சுமி டீச்சர் வெளியே இருந்து ஓடி வந்தார். ..ஜேம்ஸ் வாத்தியார் சீனு வைப் பிடித்து...முதுகில் ஓங்கி அடித்தார் ..வரும் வழியில் இருக்கும் கெமிக்கல்ஸ் டாக்டரிடம் அந்தப் பெண்ணை தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.. ஸ்கூல் பெல் அடித்தது...நாங்கள் புத்தகப் பையை தூக்கிக் கொண்டு பயத்தோடு வீடு நோக்கி ஓடினோம் ..தலை மீது  பெரும் சுமையாக  தூக்கிக் கொண்டு போய்.  அம்மாவிடம்  நடந்த இந்த விசயத்தை சொன்னால்....இதைக் கேட்டுக் கொண்டிருந்த அப்பா... இப்படி எல்லாம் செய்யக் கூடாது .. ஒழுங்காப் போய்ட்டு ..ஒழுங்காக படிச்ட்டு வரணும் என்று...மிரட்டினார்..... ....க்கும் என்று திண்ணை மீது உட்கார வேண்டியதா யிற்று. ..அடுத்த நாள் முதல் சீனு பள்ளிக்கு வரவில்லை....காது கிழி பட்ட பெண் வெள்ளை நிறத்தில் பேண்டேஜ் போட்டுக் கொண்டு சோகமாக வகுப்பில் உட்கார்ந்து கொண்டு இருந்தது....                          ஒரு வாரம் கழித்து ஒரு நாள் ..காலை... இடைவேளை நேரம்...ஸ்கூல் compound  க்கு வெளியே இடது புறம் பெண்கள்....வலதுபுறம்... ஆண்கள்....     செய்ய வேண்டியதை செய்து விட்டு ..      வகுப்பிற்கு மீண்டும் திரும்பும் போது...சுவர் ஓரமாக வெட்டி போடப்பட்டு இருந்த... முட்கள் மீது ஒரு butter fly வண்ணத்துப் பூச்சி.   ..பட.   பட வென சிறகடித்துக் கொண்டு உட்கார்ந்தது . அருகில் இருந்த நான் ..அதை விரல்களால் பிடித்தேன் . ஆனால்..அது சிறகை. கிழித்து ....என் கை விட்டுத் தப்பி பறந்தோடியது...ஓடிய அந்த வண்ணத்துப்பூச்சி.. வகுப்புக்கு திரும்பிச் சென்று கொண்டு இருந்த ..ஒரு பெண்ணின் காதும் கன்னமும்  சேரும் இடத்தில் அடித்துச் சென்றது...                பையன்கள் நாங்கள் எல்லாம்... ஓ வென்று. சந்தோஷமாக .. சிரித்தோம். ..வகுப்பிற்கு சென்ற என்னை... ஜேம்ஸ் வாத்தியார்...என் காதைப் பிடித்து திருகினார்.. முதுகில் இரண்டு அடி...நடந்ததைச் சொன்னேன்..இனி இப்படி செய்யாதே என்று warn செய்து அனுப்பினார் .. அடுத்த நாள் ஜேம்ஸ் வாத்தியார்... பேப்பரில் ராக்கெட் செய்வது எப்படி என்று craft வேலை சொல்லிக் கொடுத்தார்...அவர் சொல்லிக் கொடுத்த அடுத்தநாள்.  வகுப்பில் இருந்த  பையன்கள் ஒவ்வொருவரும் கணக்கு நோட்டு பேப்பரை கிழித்து... ராக்கெட் செய்து. வகுப்பில் black board நோக்கி விட்டார்கள்...ஒவ்வொரு வருடைய கணக்கு நோட்டும் பாதி நோட்டு ஆகி விட்டது.. நானும் கணக்கு நோட்டில் இருந்து பேப்பர் கிழித்து... ராக்கெட் செய்து விட்டேன் பாருங்க...ஒன்னு மேலே போயி வளைந்து.  டீச்சர் சாப்பாட்டு பையை இடித்து விழுந்தது... அடுத்து விட்ட ராக்கெட் உயரே போய் இடது பக்கம் திரும்பி நேராக வகுப்பிற்கு உள்ளே திரும்பி...முதல் பெஞ்சில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் முகத்தில் அடித்து விழுந்தது... அவனவன் ராக்கெட் உட்டான்... எங்கேயோ போய் விழுந்தது...நான் விட்ட ராக்கெட் தான் அப்படி போய் முகத்தில் அடிக்கனு மா...நான் விட்ட ராக்கெட் முகத்தில் அடித்த பெண்ணும்...நான் பிடித்து தப்பிச் சென்ற வண்ணத்துப் பூச்சி .. போய் முகத்தில்  அடித்த.  பெண்ணும் .அந்த ஒரே பெண் தான். .   விசாரணை நடந்தது...நான் சொன்னது எல்லாம் உண்மை.... உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.  ஆனால் ...அங்கே உண்மை  ஊமை ஆகிவிட்டது ... சூல்நிலை காட்சிகள் ...  சாட்சிகளாயின.... வேண்டும் என்றே நான் அந்த பெண்ணிடம் இரண்டு முறை. ..வம்பு.... சீண்டி யதாக....முடிவாயிற்று... அடுத்தநாள். . பெற்றவரை அழைத்து வந்து TC வாங்கி  school லை விட்டு போகச் சொன்னார்கள்... அந்த பத்து வயதில்...இதற்கு என்ன செய்ய தெரியும்.... அப்பா... அம்மாவிடம் செல்வதைத் தவிர.                வழக்கத்தை விட ...மாலை கருக்கும் வேளையில்....  ..அம்மா என்று கத்திக் கொண்டே உள்ளே நுழைவது போல் அல்லாமல்... மெதுவாக வேறொருவர் வீட்டில் நுழைவது போல நுழைந்து...புத்தகப் பையை தூக்கிப் போடாமல்... பூப் போல வைத்து....சுற்றிலும் பார்த்தால்... யாருமே வீட்டில் இல்லை .. அமைதியாக இருக்கு...அம்மா என்றேன்...புறக்கடையில் இருந்து வந்த அம்மா...என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்... சூழ்நிலை அறியா பத்து வயது பருவம்...என் செய்ய...அப்போது ... வெளியே வாசல் வழியாக அப்பா பின்புறமாக.  கையை கட்டிக் கொண்டு... உள்ளே வந்தார்...நான் அப்பாவைப் பார்த்து சிரித்தேன். ...என்னப்... பண்ணிட்டு வந்து... என்னைப் பார்த்து சிரிக்கிறாயா...என்று...கையில் மறைத்துக் கொண்டு வந்து இருந்த...வாதநாராயணன் மரக் கிளைகளில் ஒடித்த  குச்சிச் கொண்டு அப்பா...கண்ணா பின்னா என்று அடித்தார்...அப்பா நான் தப்பு  யேதும் செய்யலப்பா....என்று.என் இரண்டு கைகளையும் மடக்கி முகத்தின் முன் நெற்றிப் பகுதியில் வைத்து தடுத்துக் கொண்டேன்.... புதிதாய் ஒடித்த குச்சிகள் நான்கு         ஐந்துக்கு மேல் துண்டு துண்டாக உடைந்து வீடு முழுதும் தெறித்து விழுந்தன...அதுவரை தாங்கிக் கொண்டு இருந்த என் அம்மா ஓடி வந்து.... அடுத்த அடியை தன் கையில் வாங்கிக் கொண்டு...அடிக்கவும். ஓர் அளவு வேண்டாமா என்று...அப்பாவிடம்....சத்தம் போட்டார்...ம்.. உன் பையன் என்ன செய்திட்டு வந்து இருக்கான் பாத்தியா...அவன... இனிமே மாடு மேய்க்க அனுப்பு.... நீ போய் TC வாங்கி கிட்டு வா என்று... கத்தி விட்டு...மீதி இருந்த குச்சியை...தூக்கி என் அம்மா மீது எறிந்து விட்டு வெளியேச் சென்றார் .                   அம்மா முந்தானையால் என் முகம்  துடைத்தார்....என் முகம் கழுவி...என்னப்பா நடந்தது என்றார்..நடந்ததைச்.சொன்னேன்...நான் எந்தத் தப்பும்  செய்யலம்மா.. நான் வேணும்னே செஞ்சதாய் சொல்றாங்க.என்றேன்.. நீ விளையாட்டுக்கு செய்தது.... வினையாப் போச்சு... அதுதான் உண்மை....சரி... சாப்பிடு...என்றார்... என்னால்... சோறு எடுத்துச் சாப்பிட முடியவில்லை ..ஒவ்வொரு விரல்களும் வெள்ளரிக் காய் போன்று வீங்கிக் கிடந்தன ..அம்மா ஊட்டி விட்டார்...இரவு எப்படி               தூங்கினேன் என்று தெரியாது...கனவு எதுவும் வரவில்லை. .முனகல் சத்தம் தான் வந்தது . சாப்பிட்டானா என்ற அப்பாவின் கர கரப்பான குரல் மட்டும் காதில் விழுந்தது போல் இருந்தது...                                      மறுநாள் காலை...HM ஆபீஸில் நானும் அம்மாவும் TC வாங்க நின்று கொண்டு இருந்தோம்.. மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நாங்கள் நின்று கொண்டு இருந்தும்...யாரும்  எங்களை கண்டுக் கொள்ளவில்லை. .. மதிய உணவுக்கு எல்லோரும் சென்ற பிறகு...திரு.ராமகிருஷ்ணன்.  Sir.  வந்து...அப்படி நீ செஞ்சியா...மெதுவாகக் கேட்டார்....அம்மா எடுத்துச் சொன்னார்... பையன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான்...sir அப்படியே செய்திருந்தாலும்....விளையாட்டுப் பிள்ளை...அவனுக்கு என்னத் தெரியும்... அவன் நேரம் அப்படி...ஒரு முறை மன்னிச்சு விடுங்க...ஒரே பையன் ..எங்களுக்கு வேற துணை         பையனை  விட்டா யாருமில்லை . நீங்கதான் காப்பாத்தனும்.... அம்மா கை எடுத்து கும்பிட்டார்.... கண்களில் கண்ணீர் கன்னத்தில் வழிந்தது... சரி..சரி   அழதீங்கோ...நான் HM கிட்ட   சொல்கிறேன் ...இனி இப்படி செய்யாதே... என்று... என்னைப் பார்த்துச் சொன்னார்... நான் வழக்கம் போலவே அவரைப் பார்த்துப் சிரித்தேன்.  ....                                  சிறிது நேரத்தில் சீனு அவன் அம்மாவோடு HM ஆபீசுக்கு வந்தான் ..அவர்களை பார்த்த திரு.ராமகிருஷ்ணன் sir... ம் .. இவனும் ஒருத்தன்...குறும்பு அதிகம்...என்றார்.. சீனுவின் அம்மாவும்...கை எடுத்து கும்பிட்டு...இனி அப்படி எதுவும் செய்ய மாட்டான்...ஒரு முறை மன்னித்து விடுங்கள் என்று வேண்டிக் கொண்டார் ...............      பத்து வயதில்... அப்படி படிக்கும் பள்ளியில் TC தரும் அளவுக்கு...எங்கள் இருவரின் செயல் பாடுகள்  இருந்து இருக்கிறது என்றால்.. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் போது...அந்த நிகழ்வுகளோடு .... சீனு    சுள்ளெனக் கிள்ளும் வலி இருக்கே... அது....நினைவில் வராமல் போகுமா என்ன..   "சேலம் வசந்த் "

Comments

Popular posts from this blog

ஆத்மா

ராகம்

நாராயணி கண்ணகி.