மனித நேயம்
நான் 2005-ம் வருடம் வில்லிவாக்கத்தில் வசித்தப் போது சென்னை சென்ட்ரலில் பணிப் புரிந்தேன்.. என் பிள்ளைகள் சிங்காரம் பிள்ளை மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள்..அப்போது எனக்கு "Good will" training -ல் பங்கு பெறும் வாய்ப்பு Southern Railway மூலமாகக் கிடைத்தது..இது இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து நடத்தும் பயிற்சி முகாம்.. திங்கள் கிழமையில் இருந்து வெள்ளிவரை ஐந்து நாட்கள் திருச்சியில் இந்தப் பயிற்சி முகாம் ,தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து அதாவது Southern Railway zone ல் இருந்து சுமார் 40 க்கு மேற்பட்டவர்கள் ..... பல்வேறு deparment ல் இருந்து வந்து கலந்து கொண்டார்கள்... Mechanical Engineering department சார்பாக நான்.. . திங்கள் கிழமை காலை இறை வணக்கத்திற்குப் பிறகு வகுப்பு ஆரம்பம் ஆனது.... ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். வகுப்பு எடுத்தவர் ஒரு வெளிநாட்டவர் ..மற்றொருவர் ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்.. மனிதப் பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை, உறவு,பாசம்,நேசம், காதல், நட்பு எப்படி ஒவ்வொரு இடங்களிலும்,நாடுகளிலும் இருக்கிறது என்பதை தெளிவாக விளக்கி மூன்று நாட்கள் theory ஆக class எடுத்தனர். நாலாம் நாள் practical... ஒவ்வொருவரையும் அவரவருடைய mobile phone எடுத்து அவரவருடைய மனைவிடம் மட்டும் . .." I love you darling". என்று சொல்லச் சொன்னார்கள்... சொல்லிவிட்டு... எதுவும் மேற்க்கொண்டு சொல்லவேண்டாம்...உங்கள் wife யி டம் இருந்து என்ன பதில் வருகிறது என்பதை உங்கள் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்...நாங்கள் ..இப்படி உங்கள் மனைவிடம் சொல்லச் சொன்னதாகச் சொல்லவேண்டாம். .. நீங்களே சொல்வதாக இருக்கட்டும்... என்று எச்சரிக்கைச் செய்தனர்.... சொல்லி விட்டு, வகுப்பறையை விட்டுச் சென்று விட்டார்கள்... இது எங்களுக்கு ஒரு புது சவால்... ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது... இதுவரை.. திருமணம் ஆகி11ஆண்டுகள் ஆகியும் ... மனைவிடம். ...நான் I love you என்று சொன்னதில்லை... ஆனால்..Birth day, wedding day வரும் போது வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறேன்... இதை எப்படி சொல்வது என்று... வியர்த்து விரு.. விருத்துப் போய் இருந்தேன்... lunch break க்கு பிறகு வகுப்பு ஆரம்பம் ஆனது...." good will " பயிற்சியாளர்கள் இருவரும் வந்தார்கள்...ம்ம்... எல்லோரும் உங்கள் மனைவிடம்" I love you" சொல்லி விட்டிற்களா ? என்றார்கள்... நாங்கள் அனைவரும் மௌனமாக இருந்தோம்... இந்த மூன்று நாட்கள் நாங்கள் கத்திக் கத்தி.... உறவு... பாசம்... நேசம் ...காதல்... நட்பு ...வாழ்க்கை என்று பாடம் எடுத்தது எதற்காக....உங்களில் ..உங்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா.... இல்லையா என்று தெரிய வேண்டும்... சரி.. இப்பொழுது நீங்கள் உங்கள் ஹாஸ்டலுக்கு போகலாம்... ஆனால்.. இன்று இரவு..உங்கள் wife யிடம் "I love you darling...good night சொல்லவேண்டும்...அவர்களின் பதிலை நாளைக்குச் சொன்னால் தான் ...உங்களுக்கு merit mark கொடுத்து ... course completion certificate தரமுடியும்.... என்றார்கள்.... சிந்துபாத்தை தோளில் சுமக்கும் கனத்தொடு... நாங்கள்..பிரிந்துச் சென்றோம்.... இந்த இரயில்... work pressure ல் இருந்து சற்று விலகி ஒரு ஐந்து நாட்கள் free ஆக இருந்து விட்டு வரலாம் என்று இங்கு வந்தால்... நம்பல புடிச்ச சனி எங்கப் போனாலும் தொரத்தும் என்பதுப் போல.... தர்ம சங்கடம் என்பதன் அர்த்தத்தை புரிந்துக் கொண்டே hostel நோக்கி நடக்க ஆரம்பித்தேன்... ஹாஸ்டல் மெஸ்ஸில் இரவு உணவு முடித்து hostel திரும்பும் போது...ஒரு வழியாக என் wife யிடம்...சொல்லிவிட்டேன்....I love you... good night darling.... சாப்டியா... எப்படி இருக்கிற...அம்மா (வயதான என் தாய்)... குழந்தைகள். ..எப்படி இருக்கிறார்கள்...என்றேன்...ஒரே அமைதி.... . அடுத்தநாள்.... வகுப்பு ஆரம்பம் ஆனது....அந்த good will organizer... ம்..ம்.. எங்கே ஒவ்வொருவராக ... சொல்லுங்கள் பார்க்கலாம்... நேற்று நீங்கள் உங்கள் மனைவியிடம் என்ன சொன்னீர்கள்... அதற்கு அவர்கள் என்னச் சொன்னார்கள்... என்று...எங்களை கேட்க ஆரம்பித்தார்கள்... முதல் bench ல் இருந்த முதலாமவர் சொன்னார்...சார்... என் மனைவியிடம். .. I love you darling .. ன்னு சொன்னேன்..அதற்கு என் மனைவி சொன்னா..... ஆளுக்கு நாலு நாளா free ஆகிப் போச்சு... பகல் நேரத்தில பள்ளிக்கூடம் ... .. பொழுது போனதும் சரக்கு போட வாட்டமா போச்சா... போகும்போதே நினைச்சேன்... வீட்டுக்கு வா பேசிக் கிறேன்... என்று சொன்னதாகச் சொன்னார்... ம்ம்...அடுத்தவர்.... சார். என் மனைவி சொன்னாங்க.... வீட்டை விட்டுப் போய் நாலு நாள் தான் ஆகுது... பொறுக்க முடியாதா உனக்கு... ஞியாபகம் அதுக்குள்ள வந்துறிச்சா... என்று கேட்டாங்க சார் அடுத்தவர்..... . .சார் என் wife சொன்னாங்க .. உனக்கு பாடம் எடுக்கறது ஆம்பளையா.. இல்லை பொம்பளையா... இந்தப்... பாடம் தான் அங்கச் சொல்லித் தறாங்களா.. வா..வா.டி.வா...பாத்துகிறேன்.. என்றுச் சத்தம் போட்டாங்க சார்..என்றார்.... அடுத்தவர்...... சார்.. நான் எதுவும் சொல்லல...சார்.. கல்யாணம் ஆகி 25 வருடம் ஆகிறது..எப்படி சார்...நான் போய் I love you darling ன்னு ... சொல்லறது ....எனக்கு வெட்கமா இருக்கு சார்.. என்றார்.... அடுத்தவர். சார்.. என்ன சார் நீங்க.. நான் என்ன.. தெருவுல போற வர்றவங்கல...பாத்துக்கிட்டு இருக்கிறவனா... என்ன அப்படி செய்யச் சொல்லிறிங்க...என்றார்.... அடுத்தவர்....சார் நான் இப்ப ..நாலு நாலாத்தான் எம்பொண்டாட்டிக் கிட்ட சண்டை போடாம ... நைட்டுல நிம்மதியா தூங்கறேன்... என்னை ஏன்..... சதாய்க்கிரிங்க..சார்..என்றார்
.... அடுத்தவர்.... சார். என் பொன்டாட்டி.. என்னை அசிங்கமா பேசிட்டா சார்....எனக்குத்தான் போன் போட்டிங்கலா இல்ல... வேற எங்கேயோ போட்டது எனக்கு வந்திரிச்சா.. கொஞ்ச நாளாவே.. நான் கவனிச்சுக்கிட்டு தான் வாறேன்... நீங்க ஒரு மாதிரியாகத்தான். இருக்கீங்க...வாங்க..வாங்க...பேசிக்குவோம்...
...அடுத்தவர்... சார்..என் wife கேட்டாங்க.....அங்க என்னத்தான் class எடுக்கிறாங்க... ஒண்ணுமே புரியலை... இத தெரியாம அனுப்பிப் புட்டென்....நல்லாப்போனவங்க .. .ஒரு மாதிரியா பேசுறீங்க... என்னங்க ஆச்சு.. உங்களுக்கு ... என்று என் wife அழுதாங்க sir.... அடுத்தவர். நான் தான்.... சார். என் wife... என்ன... சொன்னீங்க...ரொம்ப shock ஆகிட்டேன் .... பத்திரமா வந்து சேருங்கன்னு... சொன்னாங்க.. சார் அடுத்தவர். சார் ... என் மனைவி என்னை.. கெட்ட வார்த்தையால திடிட்டாங்க.. சார்.. என்ன ...பேச்சு பேசுற.. பேரன் பேத்தி எடுத்திட்டு...love வேணுங்குதா. .உனக்கு...வா... பேசிக்கிறேன்.... கண் கலங்குகிறார்... அவர்.... முடிவாக..... Good will organizer... சொல்கிறார்... இந்தப் பயிர்ச்சியின் நோக்கம்.. எதிர்பார்ப்பு ...என்ன வென்றால் புரிந்து கொள்ளுதல்... மனித வாழ்க்கை ..உறவு என்னும் போர்வையில் அன்பு,பாசம்,நேசம்,, காதல், நட்பு என்ற பிணைப்போடு நகர்ந்து செல்கிறது...அதைப் புரிந்து தெரிந்து ...அறிந்து வாழ்வதே வாழ்க்கை....தான் என்ற அகந்தையை நீக்கி...அடுத்தவரை மதித்து...ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து , அனைவரும் மகிழ்வோடு வாழ்வது தான் வாழ்க்கை... அதுதான் மனிதநேயம்....உங்களை நேசிப்பது போல...மதிப்பது போல... உங்களோடு இருப்பவர்களையும்..மதியுங்கள்.... நேசியுங்கள் ....என்றவர்... எங்கே நாங்கள் உங்களைப் பார்த்து. I Love you சொல்கிறோம்... நீங்கள் அனைவரும் எங்களைப் பார்த்து I love you சொல்லுங்கள் என்றார்... ..நாங்கள் அனைவரும் சத்தமாக.. .I love you சார்... என்றுக்...கத்தினோம்.... மீண்டும்... மீண்டும் கத்தினோம். .... வகுப்பரைக்கு வெளியேயும் அந்த I love you சத்தம் கேட்கத் தொடங்கியது ... "சேலம் வசந்த் "
Comments
Post a Comment