துணை
1975 ம் ஆண்டு.. மேட்டூர் அணை..VHSS ல் ஒன்பதாவது படிக்கும்போது... வகுப்பு ஆசிரியர் திரு. சேலத்து பாலு sir...தமிழ் ஆசிரியர் புலவர் திரு. மாதவன் sir . ஆகியோர் .... அரையாண்டு. தேர்வு முடிந்து...விடுமுறை கழிந்து ..மீண்டும் பள்ளிக்கு திரும்பி வந்த போது .. அந்தந்த பாடப் பிரிவு ஆசிரியரும்... மாணவர் பெயரைச் சொல்லி...முதல் mark...இரண்டாம் mark... மூன்றாம் mark என்று விடைத் தாளை கொடுத்து பாராட்டுவார்கள்.... அப்படி... தமிழ் விடைத்தாள் கொடுக்கும் போது..நண்பர்... ரகுராமன்.. முதல் mark...வகுப்பில் கைத்தட்டல்.... இரண்டாவது......நான் ..... வகுப்பில் கைத்தட்டல்... ஆனால்...மாதவன் sir ... என் திருத்திய தமிழ் பரிட்ஷைத் தாளை. எனக்கு கொடுக்காமல்..தன் கையிலேயே வைத்துக் கொண்டு...அந்த அரையாண்டு தேர்வின் தமிழ் வினாத் தாளை என்னிடம் காட்டி...என்ன கேள்வி கேட்டு இருக்கு... நீ என்ன பதில் எழுதி இருக்கிறாய் என்று...கீழ் உதட்டைப் பிதுக்கி ... முகத்தை... கடுமையாக வைத்துக் கொண்டார்.. சிரித்த முகத்துடன் என் தமிழ் விடைத் தாளை பெறச் சென்ற என் முகம் சிறுத்துப் போயிற்று... அந்த வினாவைப் படித்தேன்...அதற்கு நான் எழுதி இருந்த பதிலைப் படித்தேன்...பத்து மதிப்பெண் பெற வேண்டிய அந்த பதில் சிகப்பு ink ஆல் ❌ செய்து அடிக்கப் பட்டு இருந்தது...தமிழ் வித்வான் மாதவன் sir... யின் முகம் ...ஏறிட்டுப் பார்த்தேன்... புரிந்ததா...அவசரப் பட்டு... புரியாம சொந்த கற்பனையில் எதையும் எழுதக் கூடாது... பத்து mark அதனால் தான் வரல என்றார்.. வேதனை ..வெட்கம்..வெட்கம்....திரும்பி வந்து என் இடத்தில்... வந்து அமர்ந்தேன்..... எனக்கு முன்னால் உட்கார்ந்து இருந்த... நண்பர் செல்வரசு...என்னடா...என்று..ஆதரவோடு ..கேட்டார் . அப்புறம் சொல்கிறேன் ... என்று சொல்லி விட்டு சற்று ..படப் ...படப் போடு ..ச்சே..என்று நேரத்தைத் தள்ளினேன்... சில நாட்கள் கழித்து நண்பர் ரகுராமனிடம்...அந்தக் கேள்விக்கு பதில் எதில் இருந்து கிடைத்தது என்றுக் கேட்டேன்... ரகு .. மேலே அண்ணார்ந்து பார்த்து.... சிரித்துக் கொண்டே.. தமிழ் துணை நூல்...படிக்க வில்லையா . என்றார்.. அப்பொழுது தான் எனக்கு அப்படி ஒரு தமிழ் துணை நூல் ஒன்று உள்ளது என்பதே நினைவுக்கு வந்தது...தமிழ் main book உடன் சேர்த்து அதையும் வாங்குவோம்.. வீட்டிற்குச் சென்றப் பிறகு...அந்தத் தமிழ் துணை நூலை தேடியேடுத்து அந்த வினாவைத் தேடினேன்...கிடைத்தது... ராகத்தோடு படித்தேன்...படித்தேன்..படித்தேன்... அப்படி நான் படித்த அந்த படித்த . த்த.. த்..த்...த... த் தேன்...இன்றும் என் நினைவில் தேனாக இனிக்கிறது என்றால்.......காரணம்....தமிழ் இரண்டாம் தாள் தேர்வுக்கு நான் தமிழ் துணை நூலை எடுத்துப் படிக்காமல்..என் சொந்தக் கற்பனையில் விடை எழுதி வந்தது தான் .... அந்தப் பத்து mark கேள்வி...மனதில் அடிக்கடி இன்றும் ஓடிக்கொண்டு இருக்கிறது. அது .........என்ன வென்றால்...... "பாடலைப் படித்து ...பொருள் எழுதுக."..என்பது தான் ..அதை... அப்படியே தருகிறேன்.. .."வேதாளம் சேருமே...வெள்ளெருக்குப் பூக்குமே...பாதாள மூலி படருமே..மூதேவி சென்றிருந்து வாழ் வளே.. சேடன் குடி புகுமே..மன்றோரம் சொன்னார் மனை..இது அவ் வையார்.. .எழுதியது... இதற்கு நான் எழுதி இருந்த பதில்..." வெகுண்டு எழும் தாளங்கள் ஒன்று சேரும் ..அதன் ஓசைக் கேட்டு..வெள்ளெருக்கு பூத்து மணக்கும்.. பாளமாக வெடித்து வரும்... மண் வெடிப்பில்...காளான்கள்... வெண் மேகம் போல் படர்ந்து வரும்..அப்படிப் பட்ட மேடை போன்ற அந்த வீட்டில்.. மூன்று தேவிகளான... சரஸ்வதி...லக்ஷ்மி... ஈஸ்வரி ஆகிய மூன்று தேவதைகளும் மகிழ்ந்து .. ஆதிசேஷன் துணைக் கொண்டு வாழ்வர்...என்று நான் பொருள் எழுதி இருந்தேன்... இது மிகவும் தவறான பொருள்...நான் எழுதியது தவறானது...அதற்கு சரியான பொருள் என்ன வென்றால்..... "வழக்காடு மன்றத்தில் பொய் சாட்சி சொல்பவர் வீடு ..ஒருவருக்கும் பயன்படாமல் போகும் . அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும்.வெள்ளை எருக்கம் பூ பூக்கும். பாதாள மூலி என்னும் கொடிய விஷம் உள்ள கொடி வளரும்.மூதேவியர் வாழ்வர்.பாம்பு குடியேறும்... தமிழ் ஆசிரியர் புலவர் திரு.மாதவன் sir ... வழி காட்டியப் பிறகுதான்...தமிழ்த் துணை நூலை படிக்கவே ஆரம்பித்தேன்... இப்படி.. படிக்கும் போதும் சரி ..வழியில் நடக்கும் போதும் சரி..இரயிலில் பயணிக்கும் போது சரி...உணவு உண்ணும் போதும் சரி..இயற்கையை ரசிக்கும் போதும் சரி .. மனது இடர் படும் போதும் சரி....இல்லற வாழ்விலும் சரி..இனி...இருக்கும் வாழ்நாள் முழுவதும் சரி.. நமக்கு துணை... எவ்வளவு முக்கியம்.... "சேலம் வசந்த்"
Comments
Post a Comment