தொல்லை

 நேற்று IOB பேங்கிற்கு சென்று இருந்தேன்... ஸ்லீப் கொடுத்து விட்டு பேங்க் மேனேஜர் chamber க்கு முன்னால் இருந்த டேபிள் மீது இருந்த ஹிந்து நாளிதழ் கண்ணில் படவே... ச்சேரில் அமர்ந்து...பேப்பரை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்...என் அருகில் வந்து அமர்ந்த . .என்னை விட  வயதான ஒருவர்...என் முகத்தையும்... படிக்கும்                         பேப்பரையும் மாறி மாறிப் பார்த்தார்..நான் அவரைப் பார்க்கும் பொழுது சினேகமாக...புன்னகைத்தார்.  அவர் முகம் குழந்தை சிரிப்பதுப் போல இருந்ததால்.. நானும் பதிலுக்கு புன்னகைத்தேன்... உடனே...தம்பி... கொஞ்சம் பேனா தரமுடியுமா என்று கை நீட்டினார்.  என்னை யாராவது.. அண்ணா என்றோ..தம்பி என்றோ அழைத்தால்.  .... பாசத்தில் விழுந்து விடுவேன் ...ஏனென்றால்...என் பெற்றோருக்கு நான் ஒரே ஆண் பிள்ளை...எனக்கு ஐந்து சகோதரிகள்... அண்ணனோ..தம்பியோ பிறக்க வில்லை.. எனக்கு அது ஒரு குறை...குறை தான்.....மேலும்.... அவரை  மேலும்  கீழும் பார்த்தேன்...வெள்ளை அரைக் கை ராம்ராஜ் cotton shirt... அதே காட்டன் வேஷ்டி...எளிமையாக தெரிந்தாலும்... விஐபி போல காணப்பட்டார்...ஒரு நிமிஷம் அவர் முகத்தை பார்த்துவிட்டு...பேனா மூடியை கழட்டி கையில் வைத்துக் கொண்டு பேனாவைக் கொடுத்தேன்... ஏன் என்றால்...ஒவ்வொருமுறை  பேங்க் செல்லும் பொழுதும் .. இப்படி பேனா       கேட்பவரிடம் கொடுத்து விட்டு என் வேலை முடிந்ததும் திருப்பி என் பேனாவை வாங்க மறந்து விடுவேன் ..இன்றும் அப்படித்தான் நடக்குமோ யென்று மனதில் நினைத்துக் கொண்டு பேனாவைக் கொடுத்து விட்டேன். ஏதோ ஒரு ஃபார்ம் fillup செய்தவர்...என்னைப் பற்றி விசாரித்தார்.என்னைப்பற்றி சொன்னேன்.... அவர் ஒரு அரசு கல்லூரி பேராசிரியர் என்றும் ஓய்வு பெற்றப் பின்னர் வெளிநாடுகளில் உள்ள தன் பிள்ளைகளை பார்க்க சென்று மாதக்கணக்கில் தங்கி விடுவதாகவும் ..  இங்கு இருப்பது கொஞ்ச நாட்கள் தான் என்றும் சொன்னார்... வெளிநாடு என்றால் எங்கே என்றேன்...கனடா... நியூயார்க்..லண்டன் என்றார் ... நம்ம நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு சென்று வாழ்கிறார்களே..லைஃப் ஸ்டைல் எப்படி இருக்கு..என்று கேட்டேன்... அப்படி ஒன்றும் வேறுபாடு தெரியல..இதே உணவு தான் அங்கேயும்....ஆனால் அவர்கள் பழகும் விதம் நன்றாக உள்ளது.  தனக்கு உள்ளத் திறமை அடுத்தவருக்கும் இருக்கும் என்று மதிப்புடன் பழகுகிறார்கள்..அடுத்தவரைப் பாராட்டும் குணம் நன்றாகவே உள்ளது என்றார்.. மேலும் ..வெளி நாடுகளுக்கு போவதற்கு முன்னால்...இந்தியாவில்..சுத்தமில்லை... சுகாதாரமில்லை.. எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.. தேவையான வசதி..பாதுகாப்பு இல்லை . அரசு என்னச் செய்கிறது என்று வெறுப்படைவேன்....ஆனால் ..பல முறை வெளிநாடு சென்று பல மாதங்கள் தங்கி இருக்கும் பொழுதுதான் இந்தியாவின் பெருமையும்.. இந்திய மக்கள் எவ்வளவு பாதுகாப்பான வசதிகளோடு வாழ்கிறார்கள் என்றும் தெரிந்துக் கொண்டேன் என்றார் ...எனக்கு அழைப்பு வரவே அவரை பிரிந்து சென்று என் வேலை முடித்து வந்தேன்.. என்ன சொல்றீங்க...பேப்பர்.. TV... mobile phone எதை எடுத்தாலும் ..அதில் வரும் செய்திகள் ..மனதை பதை பதைக்கச் செய்கிறதே.. என்றேன்...ஒன்றின் அருமை அதை பிரிந்து இருக்கும் பொழுதுதான் தெரியும்...இந்தியாவில் வாழும் அருமை...எனக்கு வெளிநாடு சென்று போது தான் தெரிந்தது.... சென்ற மாதம் நியூயார்க் நகரில் இருந்து திரும்பி வந்தேன் .. இந்திய மண்ணை மிதித்தவுடன் தான் மனம் அமைதிக் கொண்டது என்றார்.. அவனவன் வெளிநாடுகளை பற்றி ஆகா.. ஓகோ.. என்று பேசிக்கொண்டு இருக்கிறான்...இவர் இப்படி சொல்கிறாரே என்று...வியந்தேன்...இவருக்கு வெளிநாட்டு climate உடம்புக்கு ஒத்துக் கொள்ள வில்லை போல இருக்கு . ..என்று எண்ணிக் கொண்டேன். .நீங்கதான்    வெளிநாடு பற்றி வித்தியாசமா சொல்லுறீங்க ...என்றேன்...அவர் சொன்னார்.... நீங்க... நியூயார்க் நகரில் ஒரு நாள் இருக்க மாட்டிங்க.  அது என்ன ... ஊரா...ஓட்டல்..வீடு..தெரு..என எங்கும் எதிலும் ..எங்கப் பாத்தாலும் எலி.. எலி.  எலியான... எலி... உடம்பு மேல ஏறி ஓடுது.. சாப்பாட்டுத் தட்டுல ஏறி ஓடுது.....அரசும் நடவடிக்கை எடுக்குது முடியல...தன் ஆர்வலர்களும் முயற்சி எடுக்கிறா ங்க...முடியல... அப்பப்பா ...என்று இரண்டு காதுகளையும் இரண்டு கரங்களால் கன்னம் இணைத்து மூடிக் கொண்டார்.  நியூயார்க் நகரில் அளவுக்கு அதிகமாக எலித் தொல்லை இருப்பதற்கும்...இந்தியாவில்  அளவோடு இருப்பதற்கும்... காரணம் எனக்குத் தெரிந்தது.   நியூயார்க் நகரில்..     ஓ ட்டலிலும்... வீட்டிலும்... தெருவிலும் சாப்பிடுபவர்கள்.... பாதிப் பாதியாக சாப்பிட்டு மீதி வைப்பதால்... குப்பைத் தொட்டி நிரம்பி வழிகிறது...எலிகளின்...        ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அந்த        மீதமாகும்  உணவு உதவுகிறது.   இந்தியாவில். அப்படி இல்லை... வாழை இலை முழுவதுமாக.. உணவைச் சாப்பிட்டு            மீதமில்லாமல்.. வழித்து...விரல் சூப்பி..சுத்தமாக. .  சாப்பிடுவதால் ..தான். எலிகளின் வளர்ச்சி   நம் நாட்டில் அளவுடன் உள்ளது என்றக் காரணத்தை.  நினைத்துக் கொண்டு வீடு திரும்பினேன்.  வீட்டிற்கு வந்தப் பிறகு தான் நியாபகம் வந்தது...பேனாவை வாங்க மறந்து விட்டேன் என்று... தன் உணவுக்காக எலிகள் மேற்க் கொள்ளும் முயற்சி.. இடம் விட்டு இடம் செல்லும்  பெயற்சி ... இரைத் தேடி.அடிக்கடிக் இருப்பிடம் மாற்றி வாழும் சுழற்சி..இவைகள் எல்லாம் எலிகளின் எண்ணிலடங்காத செயல்கள்.. . எலிகள்... இருந்தாலும்..இறந்தாலும்.... தொல்லை... தொல்லைதான்...இல்லையா...                    ". "சேலம் வசந்த் "

Comments

Popular posts from this blog

ஆத்மா

ராகம்

நாராயணி கண்ணகி.