வசந்த அழைப்புகள்

 திரு.செல்வரசு... செல்வ அரசு... சீனியர் steno to judge... salem court...(ஓய்வு) இனிய நண்பர்..  அவருடனான பள்ளிப் பருவத்து.  ... ஒருப்பதிவு....                                             என் தம்பி...ஏற்காடு                        திரு.M. ராமமூர்த்தி,MA BL.. Salem court அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் திருமதி.ராகிணி ராமமூர்த்தி . .. சீனியர் steno to judge, Salem court அவர்களும்...  நண்பர் செல்வரசுடன் ஒரே கோர்ட்டில் பணியாற்றியவர்கள்....இப்படி .. ராகிணியை  சந்திக்கும் பொழுதெ ல்லாம்...நண்பர் செல்வரசு எப்படி உள்ளார் என்று நலம் விசாரிக்கத் தவறியதில்லை...                                     பள்ளிப் படிப்பு முடித்த பிறகு.              34 ஆண்டுகளுக்குப் பிறகு... 2012 ல் தான் நண்பர் செல்வரசுவை பிடிக்க முடிந்தது...phone number யைப் பெற முடித்தது.   தேதி நினைவுக்கு வரவில்லை . "கொறாணா "வுக்கு முன்.....நண்பர் செல்வரசு.  ..என் வீட்டிற்கு வந்து....என் குடும்பத்தார் நலன்... வளம் விசாரித்து.... தன் மகனின் திருமண அழைப்பிதழை வழங்கி.... பால்ய சிநேகிதன்...குடும்பத்தோடு வந்து கலந்துக் கொள்ள வேண்டும் என்று.  .. இரு கரம் கூப்பி அழைத்தார். . .குறைந்தது.  ..சுமார் இருபது நிமிடங்கள் மிகப் பொறுமையோடு .. மென்மையோடு.... என்னோடு. . கலந்துரையாடி... விடைப் பெற்றார்....நானும் என் துணைவியாரும். .. சேலம் டவுன் காந்திரோடு பகுதியில் இருந்த அந்தத் திருமண மண்டபத்தை அடைந்தப் போது..செல்வரசு.எங்களைப் பார்த்ததும்... வேகமாக ஓடி வந்து. ..கையைப் பிடித்து.  அழைத்துச் சென்று உட்கார வைத்தார்...பட்டு வேஷ்டி, சட்டை, துண்டு சகிதமாக...சுருண்ட தலை முடியோடு இருந்த  அவர்..சுறு சுறுப்பாக செயல் பட்ட விதம் எங்களுக்கு மகிழ்வைத் தந்தது.. .மீண்டும் எங்களிடம் வந்து ...முதலில் சாப்பிடுங்கள்... முகூர்த்தத்திற்க்கு இன்னும் நேரம் இருக்கு என்று...அழைத்தார்....நாங்கள் டைனிங் ஹால் செல்லும் வரை.  ..எங்களைக் கண் காணித்தார்.... எவ்வளவு பொறுப்புத் தன்மை....திருமணம் முடிந்தப் பிறகு. .. மணமக்களை வாழ்த்தியப் பிறகு... தன் குடும்பத்தாரை அறிமுகம் செய்து வைத்தார் ......இவர். ... என் நண்பன் .. மேட்டூர்அணை பள்ளியில் ஒன்றாக படித்தோம்.. நெருங்கிய நண்பன்  என்றார்.                   நெருங்கிய நண்பன் என்று அவர் சொல்லும் பொழுது....மனத்தில் எழுந்த மகிழ்வு... உயர ...உயர... பறந்தது.  மொய் கொடுக்க ...           எழுதுபவரைத் தேடினால்....யாரும் தென்படவில்லை.... அதைப் புரிந்து கொண்ட அவர்...என் கைப் பிடித்து.  அதெல்லாம் வாங்குவதில்லை... நீங்கள்.  நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்ததே போதும்... என்று entrance வரை வந்து வழி அனுப்பி வைத்தார் .                இப்போது. ...மேட்டூர் அணை வைத்தீஸ்வரா மேல்நிலைப் பள்ளிக்கு வருவோம்...நானும் நண்பர் செல்வரசுவும் சேர்ந்து படிக்க ஆரம்பித்தது...எட்டாவதா...இல்லை...ஒன்பதாவதா. .1974-1975 தா என்று .... நியாபகம் வரவில்லை.... எட்டாவது.  திரு. சுந்தர் ராஜன் சார்..வகுப்பு...ஒன்பதாவது திரு. சேலத்து பாலு சார்..வகுப்பு....பத்தாவது....science master திரு.சந்திரசேகரன் சார்..வகுப்பு......பதினோராம் வகுப்பு... திரு.கிருஷ்ணன் sir.. .எட்டாவதில் எனக்கு counter part நண்பர் திரு. தணிகாசலம்... ஒன்பதாவதில்...நண்பர்... திரு.ரகுராமன்.. பத்தாவதில்.  ரகுராமன்... மற்றும் ..எங்களுக்கு மேலே...நண்பர் கிரிதரன்.... பதினோராவதில்.... நண்பர் ..கிரிதரன்...தான்..ஒன்று..இரண்டு மூன்று ரேங்க் யடுப்பதில்.... உச்சத்தில் இருந்தார்..      ஒன்பதாவதில் நண்பர் செல்வரசும் நானும்...  ஒரே வகுப்பில் படித்தது நன்றாக  நினைவுக்கு வருகிறது....செல்வரசு எப்போதும் என் பெஞ்ச்க்கு  முன் அல்லது என் பெஞ்ச்க்கு  என் வலப்புறம் அல்லது ஒருவர் விட்டு அடுத்ததாகத் தான்                    உட்கார்ந்து படிக்க விரும்புவார்...ஏனென்றால் என்னுடைய சேஷ்டைகள்...பேச்சு.  செயல்பாடுகள்... comments இவைகளை ரசித்து மகிழ்வதில் அவருக்கு   ரொம்பப் பிடிக்கும்...படிப்பு... விளையாட்டு...இலக்கியம்... பலத்திறன் போட்டி என நான் ஈடுபடும் போது ...senior...junior என நண்பர்கள்...நிறையப் பேர் இருந்தனர்...அவர்கள்...என்னை அழைக்கும் பொழுது...தங்கள் விருப்பதிற்க்  கிணங்க அழைப்பார்கள்...நண்பர்கள்...ராஜு,கோவிந்தராஜ்...தேவராஜ்....இன்னும் பலர் என்னை...வசந்தகுமார்....என்று.  ...இழுத்து.  ஆழமாக அழைப்பார்கள்.தமிழ் ஆசிரியர் திரு.தாமோதரன் அவர்கள்..."வசந்தகாலம்"...என்பார்..            .நண்பர் ராஜுவின் அண்ணன் திரு. சித்தன் டெய்லர் அவர்கள்..."வசந்தன்."..என்பார்...அதனாலேயே "வசந்தம் டெய்லர்" என்று கடைக்குப் பெயர் வைத்து... என்னையும் என் பெயரையும் பிடித்ததால் அவ்வாறு பெயர் வைத்ததாக...ஒரு முறை என்னிடம் சொன்னார்...தமிழ் ஆசிரியர் திரு.மாதவன் அவர்கள்.. "தமிழே.... அமுதே.... வசந்தமே" என்று அழைப்பார் ...நிறைய நண்பர்கள்... "வசந்தன் 'என்று அழைப்பார்கள்...ஒரு சிலர் "வசந்தா " என்று அழைப்பார்கள்...  நண்பர்கள்... திரு.பிரசன்னா...புதுசாம்பள்ளி  திரு.முருகேசன்... இந்தியன் வங்கி திரு.K R. செல்ல துரை  .....ஆவின் திரு. ஞானசேகரன்...பட்டு வளர்ச்சி துறை திரு.குணசேகரன்...   நண்பர்.திரு.தணிகாசலம். ..நண்பர்.திரு. அப்துல் அஜிஸ்/பிரான்ஸ். ..  நண்பர்.திரு. கிரிதரன்..(..SSLC  ல் school first rank . ..  SIT திருச்சி College mate).......salem camp நண்பர் திரு.ராஜன். .இன்னும் நிறைய பேர் "வசந்த்" என்றும்..ஒரு சிலர்.       " டேய் " சேர்த்து....."டேய் வசந்த்"என்றும். மேலும் ஒரு சிலர் ... வசந்து...என்றும்...அழைப்பார்கள்... தேசாய் நகர் baskat ball ராஜு... Southern Railway Engineer... திரு ஜெயவேல் sir... திரு. பொன்கணேசன் sir... இப்பதிவின் நாயகன் நண்பர் செல்வரசு....இன்னும் பல நண்பர்கள் மிகவும் வாஞ்சையோடு செல்லமாக "வதந்தி" என்று அழைப்பார்கள்... இப்படி என்னை அழைப்பது.... வழக்கமாக இன்னும் உள்ளது.  ஒவ்வொரு வகுப்பிலும்...ஒவ்வொரு நாளிலும்...இப்படி என் பெயர் . .செயல்.. சேஷ்டை... Comments ஆகியவற்றை.... என்னுடன் இருந்து ரசித்துப் பாராட்டி வரும் நண்பர். திரு. செல்வரசுவும் நானும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது பிரிய வேண்டியதாயிற்று...ஏனென்றால்.. பத்தாவது பாஸ் செய்து பதினோராவது வகுப்பு செல்ல கோடை விடுமுறைக்கு பின் பள்ளி மீண்டும் திறந்தப் பொழுது....நண்பர். திரு. செல்வரசுக்கு வகுப்பு...பதினொன்று -  "E".section  எனக்கு பதினொன்று."  C "section.,co -education.... பாதி பெண்கள்...பாதி ஆண்கள்....சேர்ந்து படிக்கும் வகுப்பு.....பள்ளி திறந்த அன்று என்னால் பள்ளிக்கு வர முடிய வில்லை..ஒரு வாரம் லீவு போட்டு விட்டேன்... ஏனென்றால்....பள்ளி திறப்பில் இருந்து...யூனிஃபார்ம் போட வேண்டும்... என்னுடைய uniform வெள்ளைச் சட்டை கிழிந்து விட்டதால்... யூனிஃபார்ம் இல்லை...colour சட்டை உள்ளது . அதனால்..என் தந்தை   RS கடைத் தெருவில் இருந்த நியூ சில்க் பேலஸ் துணிக் கடையில் மேட்டூர்.   பியர்ட்செல்  long cloth துணியை வாங்கிக் கொடுத்தார்...ஒரு வாராத்திற்கு முன் கொடுத்தத் துணி.... டெய்லர் .. துரை சிங்கம் அண்ணன் ... கடையை சாத்தி விட்டு               ஊருக்குச் சென்று விட்டார்...வந்தப்பின் சட்டை தைத்து போட்டுக் கொண்டு வரும் போது ஒரு வாரம் ஓடி விட்டது...நான் பள்ளிக்கு வரும் முன் ..என் வகுப்புப் என்ன என்று கேட்டப் போது "C" section என்று நண்பர் ராஜு சொல்லிச் சிரித்தார் ..எனவே என் வகுப்பு முன்னமே எனக்குத் தெரிந்து இருந்தது ..ஒரு வாரம் கழித்து பள்ளித் திரும்பிய நான் drill master திரு .பழனியப்பன் சாரிடம் சென்று...என்னை ஆண்களோடு படிக்கும் வகுப்பில் சேர்க்க வேண்டினேன்...அவர் என் baskat ball coach...அவரும் Assitant.HM...திரு . கிருஷ்ணராவ். விடம் சொல்லி...என்னை .. பதினொன்றாம் வகுப்பு E section.  க்கு மாற்றிக் கொடுத்து விட்டார்...இங்கு நடந்தது என்ன வென்றால்... தொடர்ந்து.. ஒவ்வொரு வகுப்பிலும் என்னோடு அமர்ந்து படித்து வந்ததால்.....  எனக்கு C section போட்டதால்... E section  ல் இருந்த நண்பர். திரு.செல்வரசு...அவருடைய தந்தையார்... (பள்ளியில் அவரும் ஓர் ஆசிரியர்) .அவரிடம் சொல்லி  E section ல் இருந்து C section க்கு மாற்றிச் சென்று விட்டார்.நான் அங்கு இருக்கிறேன் என்று..ஆனால்...நான் இங்கு வந்து விட்டேன் ..அவர் அங்குச் சென்று விட்டார்.... நாங்கள் தான் வகுப்பு  மாறினோமே தவிற...எங்கள் மனது மாறவில்லை .. எங்கள் நட்பு மாறவில்லை...இன்றும். .."சேலம் வசந்த்"

Comments

Popular posts from this blog

ஆத்மா

ராகம்

நாராயணி கண்ணகி.