தூக்கம் முக்கியம்

 மாலை நேரத்தில் ...பெங்களூரு சந்திப்பில் இருந்து....மெஜஸ்டிக் பேருந்து நிலையம் செல்லும் ....மேல் பாலம் மீது மெதுவாகச் சென்று... எதிரே இருக்கும் பரபரப்பான கடை வீதிகளில்... முதல் மூலையில்...முன் இருக்கும் கரும்புச் சாறு விற்கும் கடையில்.. நாங்கள் விரும்பும் வகையில் ... ஒரு டம்ளர் ...ஐஸ் கலக்காத. எலுமிச்சை ... இஞ்சி கலந்த .. கரும்புச் சாறு டோக்கன் பெற்று... வரிசையில் நின்று வாங்கிக் குடித்து விட்டு.. மீண்டும் பெங்களூரு சந்திப்பு ...இடதுபுறம் இருக்கும்... தங்குமிடத்திற்க்கு திரும்புவது அன்றாட வழக்கம் ...அப்படி  வரும் போது.. சக நண்பர் SSE/ CW/CBE... கோவையை சேர்ந்தவர்...எதிரே தள்ளு வண்டியில் விற்ற சோன்பப்டி வாங்கி என்னையும்  சாப்பிடச் சொன்னார்...இப்பொழுதுதான்... இஞ்சி .. எலுமிச்சை கலந்த கரும்பு சாறு உதடு ஒட்டக் குடித்து ..அதன் இனிப்பு இன்னும் வாயில் தித்தித்துக் கொண்டு இருக்கும் போது....இன்னொரு இனிப்பு எதற்கு...  எனக்கு   சோன்பப்டி சாப்பிட  ஆர்வம் இல்லை ..அதனால் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அதற்குள் ..அவர் எனக்கும் சேர்த்து வாங்கிய இரண்டு சோன்பப்டி பாக்கெட்டுகளைப் பிரித்து.... அவர் வாயில் கொட்டும் போது....அந்த மாலை நேர மயக்கத்தில்.... மெஜஸ்டிக் பேருந்து நிலைய மேல் பாலத்தில்.  ...இரண்டு புறமும் நின்றுக் கொண்டு... வருவோரையும்.. போவோரையும்..ஆச்சரியப் பட வைக்கும்...பெண்களையே  மயங்கச் செய்யும்.   ....வண்ண வண்ண .  உடல் அமைப்பில்....பார்த்துப் பார்த்து சிரிக்கும்....அந்த அழகு தேவதைகளில்...ஒருவர் ஓடி வந்து ...நண்பர் வாயில் கொட்டப்போன.... அந்த சோன் பப்டியை பிடுங்கி தன் வாயில் கொட்டிக் கொண்டு மீதியை... நண்பரின் வாயில் கொட்டித் திணித்து... சாப்பிடுங்க  ...அங்கிள்  என்று... சொல்லி விட்டு...அந்த அழகு  தேவதை தன் இருப்பிடம் நோக்கி  நகர்ந்தார் சிரித்துக் கொண்டே.................அந்த மெஜஸ்டிக் மேம் பாலத்தில் நடக்கும் போதெல்லாம்.... நாங்கள் அந்த தேவதைகளைப் பார்த்து ரசித்துக் கொண்டும், பயந்துக் கொண்டும் தான் நடப்போம்.அந்த தேவதைகள்.  ஏதாவது...எதையாவது செய்வார்கள் என்று எதிர் பார்த்தது நடந்தே விட்டது...  நண்பரின் ...மூக்கு....கன்னம்... உதடு...காது...கழுத்து..சட்டை காலர்.ஆகியவை எல்லாம்.. ...கெட்டியாக ஒட்டிக்  கொண்டது சோன்பப்டி.அந்த அழகு தேவதை வெடுக்கென்று பிடுங்கி வாயில் அழுத்திக் கொட்டி  மீதியைக் அவர் வாயில் கொட்டியதால்.. அந்த ஒரு சில வினாடி நேரத்தில் .....அவசரம். அடாவடி.... அதிர்ச்சியான... தருணத்தில்.... வாயில் நுழைத்த சோன் பப்டியை.  அப்படியே... .. வாய்க்குள் அழுத்தி விழுங்கி விட்டார் நண்பர்.. மிக அதிர்ச்சியோடு வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து வரும் எங்களை .. அந்த மேம் பாலத்தில் வேக வேகமாக... விரைந்து செல்லும் ....வேற்று கிரக வாசிகள் போல...செல்லும் அந்த மனித மேதாவிகள்....இந்த அழகு தேவதையின் செயலை ... நிகழ்ச்சியை யாரும் கண்டு கொள்ளவில்லை..... இருப்பிடம் வந்த பிறகு....நண்பர்.... ரூம் பக்கத்தில் இருந்த வாஷ் பேசின் சென்று வாயில் இருந்ததை துப்பினார்.சோன் பப்டியுடன் சிகப்பாக இரத்தம் கலந்து வந்தது.தண்ணீரில் வாய் கலந்து துப்பினார் .இரத்தம் கலந்து வந்தது...ரூமில் உள்ள நாங்கள் பயந்து போய் விட்டோம் ..எண்ணம் எங்கெங்கோ சென்று விட்டது.... மொபைல் டார்ச் அடித்து வாயைத் திறந்து பார்க்கும் போது...தொண்டையில் மேல்புறம் சிறு நாக்கிற்கு முன் மேல் அன்னத்தில் ஊசி போன்ற உடைந்த சோன்பப்டி குத்திக் கொண்டு இருந்தது.அதில் இருந்துதான் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. என்ன செய்ய... பால்பாயின்ட்  பேனாவின் நுனி கொண்டு... அந்த உடைந்த.. குத்திக் கொண்டு இருந்த  துகளை ஆட்டி எடுத்து  விடுவித்தோம்.மறுபடி நீர் சேர்த்து  துப்பிய போது இரத்தம் கலந்த சிகப்பு நீர் வரவில்லை.அதன் பிறகு தான் எங்களுக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது....சோன்பப்டி....அப்பளம்.... குச்சிக் கிழங்கு சிப்ஸ்... உருளைக் கிழங்கு சிப்ஸ் முதலியன....சாப்பிடுவதில்... மிகக் கவனம் தேவை.  குறிப்பாக சிறுவர்கள்...கவனமாக.... கொஞ்சம் கொஞ்சமாக கடித்து மென்று தின்று விழுங்க வேண்டும்.எங்களுக்கு இன்றைய தினம் இது ஒரு நல்ல படிப்பினை.........எங்களின்  Refresher course   பெங்களூரில் சூப்பர்வைசர் ட்ரைனிங் சென்டரில்...( STC )...28 நாட்கள் என்பதால்... சனி..ஞாயிறு விடுமுறை நாட்களில் வீட்டிற்கு சென்று விடுவோம்.மிகத் தொலைவில் வீடு இருப்பவர்கள் ..போய் வருவது அலைச்சல் என்பதால் ...STC ஹாஸ்டலில் தங்கிக் கொள்வார்கள். நான் நடுவில் ஒரு வாரம் சனி ஞாயிறு வீட்டிற்க்கு சென்று அடுத்து வரும் சனி ஞாயிறு ஹாஸ்டலில் தங்கிக் கொள்வேன். என் ரூம் மேட் கோவை  நண்பரை தவிர திரு.AK.வெங்கடாச்சலம்..JE/ CW/ ED.. உடன் இருந்தார்..

 நானும் கோவை  நண்பரும்  ஈரோட்டில் ஒன்றாக பணி ஆற்றியவர்கள் என்பதால் ....             மாலையில் வகுப்பு முடிந்தப் பிறகு வெளியே சென்று உலாவி வருவதும்....ஹாஸ்டல் அறையில் நாட்டு நடப்புகளை பற்றி கலந்துரை  யாடி வருவதும் வழக்கம் .அன்று சனி கிழமை மாலை வெளியே சென்று ஹாஸ்டல் திரும்பினோம்.இரவு உணவை ஹாஸ்டல் மெஸ்ஸில் முடித்து....எங்கள் அறையில்  நண்பர் வாங்கி வந்து இருந்த... ஆனந்த விகடன் ..குமுதம்.. இராஜேஷ்குமார்  எழுதிய   நாவல் ஆகியவற்றை படித்து தூங்க ஆரம்பித்தோம். ....நாளை ஞாயிற்றுக் கிழமை...நாள் முழுக்க தூங்குவேன்... குட் நைட் சார்...என்றுச் சொல்லி விட்டு மெத்தையில் சுருண்டு படுத்துக் கொண்டார் கோவை நண்பர்.பெங்களூருவில் அந்த இதமான குளிருக்கு .. தூக்கம் சுகமாக இருந்தது..காலையில் எழுந்து..குளித்து காலைச் சிற்றுண்டி சாப்பிட வெளியே கிளம்பினேன்.நண்பரின் குறட்டை சத்தம்... தலைக்கு மேலே சுழலன்று கொண்டு இருக்கும் மின் விசிறியின்  சத்தத்தை விட அதிகமாகக் கேட்டது..நன்றாகத் தூங்கி எழட்டும் என்று மெதுவாக கதவை மூடி வெளியே வந்தேன்.வெளியே வந்து வலது புறமாக இருக்கும் ஶ்ரீ பாலாஜி ரெஸ்டாரண்ட்டில் சூடாக ஒரு மசால் தோசை சாப்பிட்டு மெஜஸ்டிக் நோக்கி நடந்தேன்.அம்மாவுக்கு ஒரு காஷ்மீர் கம்பளியில்  ஆன சால்வையை வாங்கிக் கொண்டு... குழந்தைகள் விளையாட எலக்ட்ரானிக் பொம்மைகளை அழகு செயல் திறன் பார்த்து வாங்கி....ஒவ்வொரு கடையாக.  ஒவ்வொரு பொருளாக ...அங்கே வரும் ஒவ்வொருவரையும்  பார்த்துக் கொண்டு வரும்போது... மணியைப் பார்த்தால் ஒரு மணி ஆகி இருந்தது.அருகில் இருக்கும் பிரியதர்ஷினி ஹோட்டலுக்கு சென்று ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு வெளிவரும் போது மழை சோ ... வெனக் கொட்டியது...சாரல் முகத்தில்  அடித்தது.வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய  விட்டு மெது மெதுவாய்ச் சென்றன.ஹாஸ்டலுக்குள் நுழையும் போது மணி மூன்று .இன்னும் நண்பர்...சுருண்டு படுத்துக் கொண்டு முகத்தில் ஒரு துண்டை போர்த்திக் கொண்டு நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் .குறட்டை சத்தம் ..கொர்... கொர்..என்று வந்துக் கொண்டுதான் இருந்தது.எழுப்பலாமா ..வேண்டாமா யோசித்தேன். ..நேற்று இரவு தூங்க ஆரம்பித்தது...இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்.என்ன செய்வது...சரி தூங்கட்டும் ...எழும் போது எழட்டும்... டேபிள் மீது கிடந்த ஆனந்த விகடனை  எடுத்து புரட்டினேன்.அதில் உள்ள ஒரு செய்தியைக் கூட படிக்க முடிய வில்லை.குறட்டை சத்தம்                   சிந்தனையை சிதறடித்தது.மணி      ஐந்து. வெளியே சென்று பால் பேட்மின்டன் விளையாடினேன்.என் விளையாட்டைப் பார்த்து அங்கே என்னோடு விளையாடியவர்கள்  அசந்து போனார்கள்.என்னுடைய கிராஸ்  ஷாட் யை பார்த்து பயந்து போனார்கள்.என்னுடைய சர்வீஸ் பந்தை அவர்களால் எடுக்க முடிய வில்லை.காரணம் அவர்கள்..அந்த விளையாட்டை முறையாக கற்றுக் கொண்டவர்கள் இல்லை. வகுப்பு முடிந்து மாலையில் கொஞ்ச நேரம் விளையாடிப் பழகியவர்கள்.நான் அடிக்கும் ஷாட் யை அவர்களால் தடுக்க முடிய வில்லை... எடுத்துப் திருப்பி அனுப்ப முடிய வில்லை. அடிக்கும் ஷாட் பந்து அவர்களின் முகத்திலும் தலையிலும் .நெஞ்சிலும் அடித்து விழுந்தது.பள்ளியில் ஏழாவது படிக்கும் போது..நான் கற்ற முதல் விளையாட்டு அந்த பால் பேட்மின்டன் தான்.அப்பா எனக்கு ஒரு இரண்டாம் தர பயன்படுத்திய ஒரு ராக்கெட்டை ஐந்து ரூபாய்க்கு மேட்டூர் கெமிக்கல்ஸ் கிளப்பில் தனக்குத் தெரிந்தவரிடம் வாங்கிக் கொடுத்தார்.நானும் வகுப்புத் தோழன் தேவராஜும்( தற்போது சீனியர் மேனேஜர் IOB Rted) தான் பாட்னர்கள்.தேவராஜ் முன்புறம் ...நான் பின்புறம் இரட்டையரில்  விளையாடுவோம்.பெரும்பாலும் நாங்கள் பள்ளியில் வழங்கப்படும்  ராக்கெட்டில் தான் விளையாடுவோம்.ஒரு நாள் ஒன்பதாவது படிக்கும் போது  தேவராஜ் ஒரு புது ராக்கெட் வாங்கி வந்தார். விலை இருபத்து எட்டு ரூபாய் என்றார்.அது ஹனுமான் பிராண்ட் கம்பனி தயாரிப்பு.அது பார்க்க மினு மினுப்புடன் அழகாக இருந்தது .இந்த ஹனுமான் ராக்கட்டிற்கு நிகராக நாராயணா பிராண்ட் கம்பனி ராக்கெட்டும் புழக்கத்தில் இருந்தது.இந்த இரண்டு பிராண்டும் சிறந்ததுதான்.இந்த வகைகளில் முன்புறம் விளையாடும் ராக்கெட் கொண்டு பின்புறம் விளையாட முடியாது.ஏனென்றால் அதன் டிசைன் வடிவமைப்பு அப்படி.ராக்கெட்டின் கழுத்துப் பகுதியில் இரண்டு வளைவு கோடுகள் இருக்கும் . ஆள்காட்டி விரல் மீது அந்த வளையத்தை வைத்து ராக்கெட்டை படுக்க வைத்தால் போதும்...அது வலை யுள்ள பகுதி தரை நோக்கி சாய்ந்தால்...அது முன் புறம் விளையாடும் ராக்கெட்.. கைப்பிடிப் பக்கம் சாய்ந்தால் பின்புறம் இருந்து விளையாடும் ராக்கெட் என்பதை தீர்மானிக்க வேண்டும் .இந்த விசயத்தை சொன்னவர் தேவராஜ் தான்.இப்படி விளையாட்டு விசயங்களோடு...பல ஊர்களுக்கு சென்று பல வெற்றிகளை பெற்று...இரயில்வேயில் அடங்கி கிடக்கும் எனக்கு...இந்த பூ பந்து விளையாட்டு என் சிறு வயது விளையாட்டு . மெல்லிய காற்றோடு தூரல் ஆரம்பிக்கவே ஹாஸ்டல் அறைக்குத் திரும்பினேன்.கோவை நண்பர்..மல்லாக்கப் படுத்துக் கொண்டு தூக்கம் கலையாமல்  இருந்தார் .இது வரை அவர் தூங்கியது போதும்.    இனி தூங்க  வேண்டாம் என்ற முடிவோடு.மின் விளக்கைப் போட்டேன்.தொண்டையை செரும்பிக் கொண்டு மீண்டும் திரும்பி படுத்துக் கொண்டார்....சார் ...போதும் எழுங்க....நேற்று இரவு படுத்தது.இரவு பகலாக தூங்குறீங்க ..என்று சத்தமாகச் சொன்னேன்.அப்படியே கொஞ்சம் நேரம் படுத்து இருந்தவர் .. குட் மார்னிங் சார் என்றார்.இப்ப ராத்திரி எட்டு மணி எழுந்திரிங்க என்றேன்.எழுந்து மெத்தை மீது சம்மணம் போட்டு உட்கார்ந்தவர். .நல்ல தூக்கம் என்றார்.முகம் வீங்கி போய் இருந்தது.பின்னர் பல் தேய்த்து...குளித்து ...வெளியே சாப்பிடக் கிளம்பினார்.நீங்க             சாப்டிங்களா என்றார் .இன்னும் .இல்லை...வாங்க போகலாம் என்றேன்.வெளியே காம்பவுண்ட் கேட் கடந்து திரும்பும்போது கையில் இருந்த ஒரு பொட்டலத்தை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டார்.அது டங்க் ..பளீர்..என்ற சத்தத்துடன் குப்பைத் தொட்டியின் பக்க இரும்பு சுவற்றில் பட்டு உடைந்து விழுந்தது.என்ன சார் அது என்றேன்.ஒன்றுமில்லை என்று சிரித்தார்.என் நடையை நிறுத்தி அது என்ன என்றேன்..காலி பாட்டில் என்று சொல்லி மீண்டும் சிரித்தார். ம்..கும்...அந்த சரக்கை அடித்து விட்டுத் தான் இப்படி இரவு பகலாக   தூங்குனீரா  என்று கேட்க வாய் எழும் பொழுது...நீங்க நினைக்கிற மாதிரி..அது பிராந்தி பாட்டில்கள்  அல்ல...என்றார்.பிறகு வேறு என்ன என்று கேட்டப் போது...அது மருந்து பாட்டில் என்றார்.எதுக்கு அந்த மருந்து என்றேன்.இருமலுக்கு குடிக்கிற சிறப்பு....அதுல இரண்டு பாட்டில் இருநூறு மில்லி போதும்...குடித்து படுத்தால் இரண்டு நாட்கள் நன்றாகத் தூங்கலாம் என்றார்.எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்ன சார் சொல்றீங்க என்றேன்..ஆமாம் .உண்மைதான் ...புரோகிராம் இல்லாத விடுமுறையில் நன்றாகத் தூங்க வேண்டும் என்றால் .........என்று சொல்லிச்  சிரித்தார். இது  எவ்வளவு மோசமான செயல்...மருந்தின் வீரியம் அதிகமாகி.. ஏதாவது ஆபத்து...என்று சொல்லி முடிக்கும் முன்... நன்றாகத்  தூங்க வேண்டும்..அது தான்...என்றவர்....சரி வாங்க எனக்குப் பசிக்கிறது என்று என்னை விட்டு முன்னோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தார் அந்த கோவை நண்பர்.                                           இப்படி செய்வது மிகவும் ஆபத்தான செயல் என்பதை உணர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.

Comments

Popular posts from this blog

ஆத்மா

ராகம்

நாராயணி கண்ணகி.