பாசம்
2024 ஆம் வருட....ஐப்பசி மாதம் முடிய இருப்பதால்... மூன்று நாட்களுக்கு முன் ...சேலம் ஜங்ஷன் அருகில் உள்ள மீன் மார்கெட் சென்று இருந்தேன்... ஐப்பசி மாதம் முடிவதற்கும்...மீன் மார்க்கெட்டிற்கும் என்ன சம்பந்தம்... கார்த்திகையில். அசைவம் தொடுவதில்லை.......கார்த்திகை மாதம் மகா அண்ணாமலையார்...தீபம் ஏற்றும் மாதம்... இந்த கார்த்திகை முதல் நாளில் இருந்தே வீடுகளில் விளக்கேற்றி அண்ணாமலையாரை "அரோகரா. அரோகரா. "என்று நெஞ்சுருகி. ... பக்திப் பரவசத்துடன்.. மெய்மறந்து.... ஒவ்வொரு நிமிடமும்... ஒவ்வொரு நாளும்...இந்த மாதம் முழுக்க...வீட்டுப் பெண்கள். .ஒரு தெய்வீக உலகத்துக்கே சென்று விடுவார்கள்... இந்த நேரத்தில் மீன் கடை ஏன் நியாபகத்திற்கு வருகிறது என்றால்....?.. கார்த்திகை முதல் நாளில்.. ஶ்ரீ மஹா ஐயப்பன் அருள் முகம் காண....மகர ஜோதி காண...இரு முடிகட்டி. விர தமிருப்பவர்களும்... இம்மாத முதல் நாளிலேயே திருவிளக்கை ஏற்றி.... திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மகா தீபம் காணும் வரை... சென்னையில் உள்ள பெரும்பாலான இல்லங்களில்....மீன் மற்றும். அசைவம் சமைக்க மாட்டார்கள்... இப்படி பக்தி மையமாக செல்லும்...இந்த கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு இல்லத்தரசிகளின் நெற்றியிலும் குங்குமம்... திருநீற்றுப்பட்டை பளீரென துலங்கி....பார்ப்பவரை பக்தியில் இழுத்து ஒரு மரியாதையை ஏற்படுத்தும்... சென்னையில்...திரும்பும் தெருக்கலெல்லாம்....இருக்கும் ஶ்ரீ பிள்ளையார் கோவில்கள்.... மற்றும் உள்ள பிற அனைத்துக் கோவில்களிலும்... பக்திப் பாடல்கள் அதிகாலையில் இருந்தே ஒலிக்க ஆரம்பிக்கும். .அந்த அதிகாலைக் குளிரில்... குளித்து....வேக வேகமாக...கோவில் நோக்கிச் செல்லும் பக்தர்களை... பார்க்கும் போதே நமக்கும்....பக்தி பரவசம் எடுக்கும்... இப்படி பக்தி நிறைந்த கார்த்திகை மாதத்தில்.... அசைவம் தவிர்ப்பதால் தான்...கார்த்திகை மாதம் ஆரம்பிக்கும் முன். ஐப்பசி மாதம் முடியும் முன் மீன் மார்கெட் சென்றேன்... இப்படிச் சென்ற போது.... சென்னை பெரம்பூர் ,ஶ்ரீ வல்லூர் மெயின் ரோடு..சர்ச் தெருவில். நியூ மாடர்ன் கேப்....ஹோட்டலில்....ரூம் எடுத்துத் தங்கி இருந்த என்னோடு ....நண்பர்கள்...திரு. ஜெயவேல் சார்...திரு.பொன் கணேசன் சார்... ஆகியோர் எனக்கு ஒரு நல்ல உறுதுணையாக. . உதவும் குணத்தோடு ...ஒரு வழிகாட்டியாகவும். இருந்தார்கள்... காரணம்...என் அண்ணன் திரு.செல்வகுமார் அவர்கள் ...சென்னைக்கு வந்து இரண்டு நாட்கள் (1986ஆம் ஆண்டு)அந்த ரூமில் என்னோடு தங்கி ... மெரினா பீச் முதலானவற்றை பார்த்து விட்டு... திரு.ஜெயவேல் சாரின்....pressure cooker....மற்றும் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தி... அண்ணன் செல்வகுமார் அவர்கள்...ஆட்டுக் இறைச்சி அரைக் கிலோ வாங்கி ...எனக்கு சுவையாக சமைத்து பரிமாறினார்...அவரின் கைப் பதம் மிக சுவையாக ...அருமையாக...இருந்தது ........ அதற்கும்... ரூம் மேட்... எந்த ஒரு objection னும் தெரிவிக்க வில்லை...அதைப் போலவே...1986 முதல்1987 வரை நான் ,சென்னையில் இருந்து ஜோலார் பேட்டை posting ஆகிச் செல்லும் வரை ...நந்தனம் அரசு கல்லூரியில் முது நிலைப் பட்டப் படிப்பு படிக்கும் என் தம்பி திரு.ராமமூர்த்தி... சனி.. ஞாயிறு மற்றும் study leave .. கல்லூரி விடுமுறை நாட்களில் என் அறைக்கு வந்து தங்கி. படிக்கும் போதெல்லாம் என் ரூம் மேட்கள்...எந்த objection னும் தெரிவித்ததில்லை... தம்பி ராமமூர்த்தி என் அறையிலும் .அந்த முதல் மாடியின் முற்றத்தில்...அதன் அருகில் இருக்கும் வேப்ப மரத்தின் கிளையின் நிழலிலும்... வளைந்த கைப் பிடிச் சுவற்றின் step படியிலும் அமர்ந்து செவ்வனே படித்துக் கொண்டு இருப்பார்...இன்று அவர் சேலத்தில் ஏற்காடு திரு.M. Ramamurthy, MA BL... பிரபல சீனியர் advocate... அப்படி என்னோடு தங்கிப் படிக்கும் தம்பி ராமமூர்த்தியும்...நானும்...அந்த ஐப்பசி மாதத்தின்...கடைசி ஞாயிறு அன்று... காலை டிபன் சாப்பிட்டு விட்டு...அந்த வேப்ப மரத்தின் கிளை நிழலில் முற்றத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த போது...படியேறி மேலே வந்து..." என்னப்பா செய்றீங்க" என்று...முகம் நிறைய சிரிப்பாக.. சந்தோச மிக்க நடையாக எங்களை நோக்கி வந்த ....எங்களின் சித்தப்பா திரு.தாண்டவன் அவர்களைப் பார்த்ததும்...தம்பியும் நானும்...உடன் எழுந்து... "அப்பா"... என்று நாங்கள் இருவரும்.. ஒரே குரலில் அழைத்தது...இன்றும் காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது... அப்பாவிற்குப் பின்னால் யார் வருகிறார்கள் என்றுப் பார்த்தால் .... தங்கை ஜோதி... "அண்ணா "என்று சிரித்துக் கொண்டே வருகிறது...அடுத்துப் படியேறி "அப்பாடா" படியேறி ஒருவழியா வந்துட்டேன் ...என்று எங்கள் சித்தி அகிலு அம்மா வந்தார்...அடுத்து..." மாமா "என்று சொல்லிக் கொண்டு எங்களின் பெரிய அத்தை அங்குத் தாய் அவர்களின் மகன் ராஜா சிரித்துக் கொண்டே வந்தார்...எங்கள் இருவருக்கும் ...எங்கள் சித்தப்பா குடும்பத்தாரைப் பார்த்ததும். மகிழ்ச்சி தாங்க முடியவில்லை...சித்தப்பாவும்... சித்தியும்...வந்ததும் வராததுமாக... முதலில் விசாரித்தது...நீங்கள்...இருவரும் சாப்பிட்டர்களா என்பதே...தங்கை ஜோதி.. என் அருகே வந்து அண்ணா. .இங்கத்தான் ....இருக்கிறீங்களா... என்று அன்போடு கேட்டது...ராஜா...எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டே நின்றார்... சித்தி கேட்டார்..."ஏம்ப்பா... போன இரண்டு வாரமாக வீட்டுக்கே வரல"....வருத்தம் அவரின் முகத்தில் நன்றாகவே எங்களுக்குத் தெரிந்தது . "ஆமா ... அண்ணா...நீங்க வருவீங்க என்று அப்பா மீன் வாங்கி வந்தார் ...அம்மா சமைச்சி வச்சிட்டு. நீங்க வருவீங்க என்று ... ரொம்ப நேரம் அம்மா சாப்பிடாமயே..இருந்தாங்க ...என்று தங்கை ஜோதி சொன்ன போது...உள்ளத்தை அப்படியே சுண்டி இழுத்தது... அம்மாவின் கண்கள் கலங்க ஆரம்பித்தன...எங்களை விட்டுப் பார்வையை... வெளியே பார்த்தார்....அப்பா...சொன்னார்...நீங்க இரண்டுப் பேரும்...இரண்டு வாரமாக வராதது...எங்களுக்கு ஒரு மாதிரியா...போயிருச்சுப்பா... சிரித்துப் பேச ஆரம்பித்த அப்பாவின்...குரல் கம்மி தழுதழு த்தது ...சிரித்த முகம் சுருங்கிப் போயிற்று.... தம்பியும் நானும் பெரும்பாலூ ம்...பெரம்பூர்...வியாசர்பாடியில் உள்ள சித்தப்பாவின் வீட்டிற்கு ..மாதத்தில்...ஒரு வாரம் விட்டு ஒரு வார ஞாயிற்றுக் கிழமையில் சென்று...மத்திய உணவு அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டு விட்டு வருவோம்...எங்களுக்காக....சித்தி ..கடல் மீன் வறுவல்....மீன் குழம்பு ..பக்குவமாக சமைத்து பரி மாறுவார்...சாப்பிடும் போது...நாங்கள் அனைவரும்.... ஒன்றாகச் சுற்றி அமர்ந்து சாப்பிடுவோம்...என் வலது புறம் தங்கை ஜோதி... இடது புறம் தம்பி ராமமூர்த்தி... அப்பா...ராஜா...எதிர் புறம்.. சித்தி அமர்ந்து.... நாங்கள் சாப்பிட..சாப்பிட்ட ...சூடாக. ". ம்..இன்னும் கொஞ்சம் வா ங்கிக்குங்க"...என்று எங்களின் வயிற்றை நிறைத்து விடுவார் ....அது அடுத்தநாள் மதியம் வரை தாங்கும் ... அந்த அளவுக்கு எங்களை நிரப்பி விடுவார்...அப்போது தான் சித்திக்கு மனம் திருப்தி அடையும் .. தாய் மனது....அதற்கு இணை ஏது இவ் உலகில்? சாப்பிட்டப் பிறகு...பல கடந்த கால.... நிகழ்கால நிகழ்சிகள் பற்றிய கலந்துரையாடல்...தொடரும் ... அதற்குள் ...மாலை...நெருங்கிவிடும்... எதிர் வீட்டில் இருக்கும் தாழ்வாரத்தில்...எங்களுக்காக. ஒயர் ச்சேர் போட்டு இடம் பிடித்து வைத்து இருப்பார்கள் ..ராஜாவும்..ஜோதியும்...டீ குடித்து விட்டு நாங்கள் அனைவரும் தூர்தர்ஷனில் தமிழ் சினிமா பார்க்க... அங்கே சென்று பார்ப்போம்...பின்னர் நானும் தம்பியும் அவர்களின் அன்பான...பாசமான. இணைப்பில் இருந்து விடை பெறுவோம்...நான் என் ரூம் வருவேன்...தம்பி...நந்தனம் செல்வார் ... இப்படி ...அவர்களை சந்திக்கும் வாய்ப்பு இரண்டு வாரமாக இல்லாததால்... எங்களைத் தேடி ....இப்பொழுது எங்கள் அருகில் என் சித்தப்பாவின் குடும்பத்தார்... அவர்களின் அன்புக் கேள்விகள் ...எங்கள் நெஞ்சத்தில் அம்புகளாகப் பாய்கின்றன...நேரம் கிடைக்க வில்லை என்பதா...இல்லை . தம்பி படிப்பதால் ..வரமுடியவில்லை என்பதா...அன்பிற்கு முன்னால் தடை என்ன சொல்ல முடியும்..."அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்."..நானும் தம்பியும் மெளனம் ஆனோம்...பிறகு... வாங்கப்பா...என்றார்...அப்பா...வாங்க வீட்டுக்குப் போகலாம் என்றார் அம்மா ..அண்ணா ....வாங்க அண்ணா என்று அழைத்தார் தங்கை.... இதற்கு மேல் தாங்க முடியாது..."புன்கணீர் பூசல் தரும்"... உடனே நானும் தம்பியும் அவர்களோடு புறப்பட்டு அவர்களின் வீட்டிற்குச் சென்றோம்... வழக்கப்படி....எல்லோரும் ஒன்றாக சுற்றி அமர்ந்து சுவையான மீன் வறுவல் ..குழம்புடன் சாப்பிட்டோம் ..இந்த சந்தோசமான...சூழ்நிலையில்...எனக்கு ஜோலார் பேட்டைக்கு posting ஆர்டர் வந்திருக்கு என்று தெரிவித்தால்...........நான் எதுவும் சொல்லவில்லை ... என் சித்தப்பா. ....சித்திக்கு.... தங்கை மட்டும் தான் அருமை புதல்வி...அதனால் நாங்கள் அவர்களின் வீட்டிற்கு செல்லும் பொழுதெல்லாம் தங்கையின் உள்ளம் மகிழ்வால் துள்ளும்.... அன்று மாலை ...நாங்கள் அனைவரும் மெரினா பீச் சென்றோம்...அப்போது .... தீவுத் திடலில் பொருட்காட்சி நடந்துக் கொண்டு இருந்தது ..ஒரு பெரிய ஜெயன்ட் வீல் வானுயர உயர்ந்து சுற்றிக் கொண்டு இருந்தது... வங்கக் கடலில் வழிந்து வழிந்து .....வலிந்து ஓடி வரும் நீரின் அலைகள் ...முழங்க கால் ...பாதங்களை. சில் என்று. நுரையுடன் தழுவும் போது .... அடடா.. .என்ன ஒரு மகிழ்வு..துள்ளல்... அலைகள் பெரிதாக வரும் போது பயந்து...மேல் கரைக்கு நாங்கள் தாவி வருவோம்...ஆனால் ...தங்கை ஜோதி பயம் எதுவும் இன்றி...அலைகளை நோக்கி ஓடும்...நல்ல தைரியம்.... பின்னர் மாங்கா. . தேங்காய்...சுண்டல் சாப்பிட்டு.... பொருட்காட்சிக்கு வந்தால்...பயந்து... வியந்து போய் பார்த்த எங்களை....அந்த ஜெயண்ட் வீலில் சுற்ற விரும்பியது தங்கை...நான் அதில் சுற்றியதே இல்லை.. எங்கள் ஊரில் மாரியம்மன் திருவிழாவின் போது... ஒரு முறை சிறிய ராட்டினத்தில் சுற்றிய போது..கத்து கத்து என்று கத்தி விட்டேன்...இது பெரியதா யிற்றே...என்ன செய்வது....தங்கை ஆசைபடுகிறதே.... துணிந்து டிக்கட் வாங்கி ஏறி அமர்ந்து விட்டோம்... நானும் தம்பியும் ஒரு பெட்டி...அப்பாவும் ராஜாவும் ஒரு பெட்டி...அம்மாவும் தங்கையும் ஒரு பெட்டி... சக்கரம் சுழல ஆரம்பித்தது.... கிழே இருந்து மேலே உயரும் போது ஆகா...என்று இருந்தது..மேலே உச்சிக்குப் போன போது...சென்னை மாநகரம். மின்விளக்கு ஒளியில் பிரகாசித்தது... டக் என்று ...முதுகுக்கு பின்புறம் ஒரு சொடுக்கு சொடிக்கி... உட்கார்ந்து இருந்த பெட்டி அதுவும் அதன் போக்கில்... ஒருமுறை மேலே...ஒரு தூக்குத் தூக்கி ...கிழே இறங்கத் தொடங்கும் போது ... இரண்டு கைகளாலும்...பெட்டியின் கைப்பிடியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு..இரண்டு கால்களையும் பெட்டியின் அடிப் புறத்தில் உதை தத்துக் கொண்டு .. ஆ.. ஆ. என்று
நெஞ்சில் இருந்து வரும் பயப் பந்தை...தாங்கிக் கொண்டு....கண்களை மூடிக்கொண்டு... சக்கரம் சுழன்று நிற்கும் வரை...நான் பட்டப்பாடு.. அப்படா.. சாமி....வாழ்நாளில் அனுபவிக்காத ஒன்று.... இறங்கி நிற்கும் போது தள்ளா டினேன்...தம்பி.... அண்ணா...என்று... என்னைப் பிடித்துக் கொண்டார்...எல்லோரும்...என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டு நின்றார்கள்...எனக்கு...வயித்தைக் குமட்டிக் கொண்டு வருவது போல இருந்தது...பிறகு ... ஆளுக்கு ஒரு ஐஸ் கிரீம் வாங்கிச் சாப்பிட்டு விட்டு.... கூட்ட நெரிச்சலில் ..பஸ் பிடித்து திரும்பி பெரம்பூர் வந்துச் சேர்ந்தோம் .. அவர்களிடம் இருந்து விடைபெறும் போது....எனக்கு posting order வந்ததை தெரிவித்த போது....அனைவரின் முகத்தில் இருந்த அந்த உற்சாகமான...சந்தோசம்....மெல்ல மெல்ல. ..மறைய ஆரம்பித்தது... 02.03.1987 அன்று ....சென்னை சென்ட்ரல் பிளாட் பாரத்தில் ....என்னை ஜோலார் பேட்டைக்கு பதினொரு மணிக்கு புறப்படும் வெஸ்ட் கோஸ்ட் express ரயிலில் ....வழி அனுப்ப...அப்பா...அம்மா..தங்கை...ராஜா...தம்பி ராமமூர்த்தி ஆகியோர்....வந்து இருந்தார்கள் .எங்களிடையே.... மௌனமான. .. ஒரு வெற்றிட சூழ்நிலை... நிலவியது.அந்த இறுக்கமான சூழலை சமாளிக்க...நான் அனைவருக்கும் தைரியம் சொன்னேன்..தம்பி. ராமமூர்த்தி..சொன்னார்... "அண்ணன் இங்கே சென்னையில் இருப்பதால் தான் .இங்கே படிப்பதற்கே வந்தேன் என்று"...அப்பா சொன்னார்..."சென்னைக்கு வந்தால் வீட்டுக்கு வாப்பா "என்று...அம்மா சொன்னார்.... "நேர நேரத்துக்கு... சா ப்பிடுப்பா "என்று...ராஜா .. "மறுபடி... எப்ப மாமா வருவிங்க என்று".. .தங்கை .. "இந்தாங்க அண்ணா... ரயில்ல.. போகும் போது சாப்பிடுங்க."..என்று கேக்கை...கை நீட்டிக் கொடுத்தார்.... இரயில் புறப்பட்டது.... இரயில் முன்னோக்கி...... முன்னோக்கி ஓடுகிறது ....அந்த பிளாட் பாரத்தில் நின்றுக் கொண்டு..... இரயிலின் கடைசி பெட்டி கண்களை விட்டு மறையும் வரை "டா..டா.".. காட்டிக் கொண்டு நிற்கும் அந்த அன்பு உள்ளங்களை நோக்கி ..... என் நெஞ்சம் பின்னோக்கி பின்னோக்கி.... ஓடுகிறது... காலச் சக்கரம் ... சுழன்று...சுழன்று... என்ன வேகமாய்... சுழல்கிறது..... "சேலம் வசந்த் "
Comments
Post a Comment