யார் அந்த திருடன்
.... அப்பா ...21 ஆண்டுகள் military service செய்தபிறகு. ..,1968ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்று தன் வீடு உள்ள...சேலம்.. ஆண்டிபட்டிக்கு திரும்பினார்...இரண்டொரு மாதங்களில்...இந்த பசு வீடு வந்து சேர்ந்தது...இது சிந்து மாடு ...பஞ்சாப்பில் இருந்து...இரயில் மூலமாக...சேலம் வந்து எங்கள்... வீட்டிற்கு வந்தது...அப்போது அதை வரவேற்கும் வயது எனக்கு வரவில்லை...சுமார் எட்டு அடி நீளம் இருக்கும்...ஒன்றறைக்கு இரண்டு அடி size ல் முகம் இருக்கும்...அகலம்... மூன்று அடி இருக்கும்... செம்மை நிறத்தில் இருக்கும்.... பெரிய பெரிய கண்கள்...கண்களுக்கு....கண்மை தீட்டியது போல இருக்கும்...பால் மடி மிகப் பெரியதாக இருக்கும்....
பால் காலையில்...இருபது லிட்டர்...மாலையில் பதினைந்து லிட்டர் கறக்கும்......பால் கறந்து முடிக்க...அப்பாவும்...அம்மாவும்... .களைத்துப் போய் விடுவார்கள்...காலையில் பால் கற ந்ததும் ...ஒரு டம்ளர் பால்.... வெத வெத என்று இருக்கும்...எனக்கு கொடுத்து குடிக்கச் சொல்லுவார்கள்.... "தம் "கட்டி குடித்து விடுவேன்...பால் வாடை என் வாயில் அடிக்கும்....பின்னர்...அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு.... குழந்தைகளுக்கு.... முக்கியமான விசயம்....ஒரு சொட்டுக் கூட தண்ணீர்க் கலக்காமல் பால் அளந்து ஊற்றுவார்கள்.... சாணி...கோமியம் . எப்பொழுதும் இலவசம்....இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு....அப்பா மேலும் ஒரு நாட்டு பசுவை வாங்கி வந்து விட்டார் ..பால் போன்ற வெள்ளை நிறத்தில்...தந்தம் போன்ற வளைந்த கொம்புடன்....இது ஒரு நல்ல அழகான மனதுக்கு பிடித்த பசு...அந்த சிந்துமா டு..அப்பப்பா...பார்த்தாலே பயம்...பருத்த உருவம்....இப்பொழுது... வீட்டில் இருக்கும் அனைவருக்கும் வேலை அதிகம் ஆகிப் போச்சு....நாங்கள் ஓடி ஆடி விளையாடிய வாசல் சுருங்கிப் போச்சு...வீட்டு வாசல் படியில் நின்று பார்த்தால்...இந்த சிந்து பசு..வெள்ளைப் பசு...இவைகளோடு அப்பாவும் அம்மாவும் தான் தெரிகிறார்கள்... ஒரு நாள் பள்ளியில் இருந்து மாலை வீடு திரும்பிய போது...அம்மா சொன்னார்கள்...வெளியில் கொடியில் காயப் போட்டு இருந்த அம்மாவின் புடவையை காண வில்லை என்றும்...யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள் என்றும் ...இது வரை நடந்திராத திருட்டு இப்போது நடந்து இருக்கு...யார் என்று கண்டு பிடிக்க வேண்டும் என்று...எங்களை உஷார் படுத்தினார்கள்... பால் வாங்க வந்தவர்கள் தான் திருடிச் சென்று இருக்கு வேண்டும் என்று நாங்கள்....சந்தேகப் பட்டோம்...ஒரு வாரம் கூட ஆகவில்லை... காயப்போட்டு இருந்த அப்பாவின் வேஸ்டியை காண வில்லை ...அந்த வயதில் எங்களுக்கு இது ஒரு மிகப் பெரிய பயமாக ...பயங்கரமாக...இருந்தது....அப்பா தன் கொடுவால் மீசையை முறுக்கிக் கொண்டு ...அது யார் என்று நான் கண்டு பிடித்து விடுகிறேன்...நீங்க எல்லாம் பயப்படாம தூங்குங்க...என்று கையில் நீண்ட மூங்கில் தடியை வைத்துக் கொண்டு வாசலில் கட்டில் போட்டு படுத்துக் கொண்டார்...அன்றில் இருந்து... இரவில் ...one bath செல்லும் போது...எனக்குப் பின்னால்...அம்மாவோ... அக்காக்களோ...என் வேலை முடியும் வரை துணைக்கு வரவேண்டும்....இல்லை என்றால் இரவில் வெளியேச் செல்லவே மாட்டேன்....அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் நாங்கள் எல்லோரும் வீட்டில் அப்பாவுடன் ஒன்றாக அமர்ந்து கறி உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம்...அப்போது... வீட்டு வாசலில் இருந்து ஒரு சத்தம்... ஐயோ அம்மா...அப்பா...காப்பாத்துங்க....காப்பாத்துங்க...அப்பா சாப்பிட்ட கையோடு வெளியே வேகமாகப் போனார்...நாங்கள் என்ன நினைத்தோம் என்றால்...யாரையோ மாடு முட்டி விட்டது என்று...ஏனென்றால்...அப்பப்ப.... யாராவது வந்து சாணி எடுத்துச் செல்ல வருவார்கள்...அப்படி இன்று....நடந்திருக்கும் என்று நினைத்தோம்...நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது....பக்கத்து தெரு பெண் சாணி எடுக்க வந்தவர்...கீழே கிடக்கிறார்...உடம்பில் உள் பாவாடை மட்டும் தான் இருக்கிறது...புடவையைக் காணோம்... திரும்பிப் பார்த்தால்....சிந்து மாட்டின் வாயில்....கால் புடவையை வாயில் துருத்தி மென்று தின்றுக் கொண்டு இருக்கிறது...அப்பா ..கையில் இருந்த மூங்கில் தடியால் பளார்...பளார் என்று அடி விட்டார் ...இம்... இம்ம்...புடவையை மாடு விட்டபாடில்லை... அப்பாவின் கை தான் வலித்தது. மாடு அசை யவில்லை....அம்மா அந்தப் பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒரு புடவை கொடுத்து கட்டி விட்டு அனுப்பி வைத்தார்...சாணி எடுக்க வந்தேன்...டக்குன்னு..என் முந்தானையை எட்டிப் பிடித்து... சொழட்டி. சொ ழட்டி..தின்னுது....இழுத்துப் பார்த்தேன்...முடியலே விட்டுட் டேன்...அம்மாடி...சாமி...என்று...அரட்டிக் கொண்டுஅந்தப் பெண் சென்றார்...இதன் மூலம்.... வெளி ஊரில் இருந்து யாரும் புடவைத் திருட வரவில்லை என்பது....உறுதியானது...எங்களுடைய துணிகள் சரியாக இருக்கிறதா ...ஏதாவது காணாமல் போய் விட்டதா....என்று பெட்டியில் இருந்த எங்களின் துணிகளை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தோம்........ ,இப்பொழுது ...இன்றைய நாட்களில் இவைகளை எல்லாம் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை....."சேலம் வசந்த் "
Comments
Post a Comment