ஓசை

....  1968 ஆம் ஆண்டில் நான் மூன்றாம் வகுப்பு ... சேலம் ....போடிநாயக்கன் பட்டியில் படித்த போது...மாலையில் என் சகோதரிகளுடன் வீடு வந்து சேர்ந்தேன்...வழக்கம் போல அப்பா...வாசலில்...பச்சை சோள தட்டு களை ஒரு கட்டை மேல் வைத்து ஒரு ஜான் அளவில் துண்டு துண்டுகளாக வெட்டி...விரல் size அளவில் வளைத்து கட்டி செய்து இருந்த          மூங்கிலில் ஆன தீவன grate ல் போட்டுக் கொண்டு இருந்தார்... புத்தகப்பையை உள் வீட்டின் சுவர் ஓரமாக வைத்து விட்டு...வெளியே புறக்கடை ஓரம் இருந்த சிமெண்ட் தொட்டியில் நீர் எடுத்து...இப்பொழுது எல்லாம்...பிளாஸ்டிக் "mug "பயன் படுத்து கிறோம்...அப்போதெல்லாம்....ஒரு லிட்டர் engine oil iron tin ....கடையில் கிடைக்கும்...அதன் திறந்த வாய் பகுதியை தரையில் மாங்கு ...மாங்கு என்று தேய்த்தால் பேத்துக் கொண்டு வரும்...அதை mug ஆக பயன் படுத்து வார்கள்...அதுவும்...ஒரு ஆறு மாதம் தாக்குப் பிடிக்கும்... அப்புறம்....அதே மாதிரி வேற தயார் செய்ய வேண்டும்... ஏனென்றால்... துரு  ஏறி அடியில் சிறு சிறு ஓட்டைகள் விழுந்து விடும்...அதில் தண்ணீர் தொட்டியில் இருந்து நீரை மொண்டு தலைக்கு மேலே தூக்கி ஊற்றினால்... "ஷவர் பாத் "ல் குளிப்பது போல இருக்கும்....இந்த மாதிரியான ...சூழ்நிலைகளில்...பித்தளை... வெண்கல. .  சொம்மு தான் வாட்டம்.. ஆனால்....கையிக்கு கொஞ்சம் கனமாக இருக்கும். .அறை குறையாக... அவசர அவசரமாக..கை கால் கழுவி வாசலில்....இரவும் பகலும் கிடக்கும் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டேன் ..அப்பா எதுவும் பேச வில்லை... தன் வேலையில் சோளத்தட்டு வெட்டுவதில் மும்மரமாக இருந்தார்...இன்னும் கொஞ்சம் நேரம் போனால் இருட்டி விடும்... அதனால் அவசரம் அப்பாவுக்கு.... மாலையில் பள்ளியில் இருந்து வந்ததும்...இது தான் வழக்கம் ..அம்மாவின் பாசத்துடன் கலந்த....உபசரிப்பு...வேகவைத்த கடலைக்காய்....அவித்த வேர்க்கடலை .மொச்சை.... வேக வைத்த குச்சிக் கிழங்கு...மரவள்ளிக் கிழங்கு...சர்க்கரை வள்ளிக் கிழங்கு...பனங்கிழங்கு.... பஜ்ஜி. போண்டா..வடை.. முறுக்கு...கச்சாயம்....அதிரசம்.... பொரி... கடலை...அச்சு வெல்லம்...பட்டாணி... பிரிட்டானியா டின் பிஸ்கெட்...இவைகள் தான் மாலை நேர ஸ்நாக்ஸ்....அன்று அம்மா கொடுத்த ஸ்நாக்ஸ் ஒரு வித்தியாசமாக இருந்தது.....என் தாத்தா...  சாப்பிடுவதை நான் கவனித்து இருக்கிறேன்...மாலையில் குளித்து விட்டுத்தான் சாப்பிடுவார் ..பகல் முழுக்க உடல் உழைப்பு ..வாசலில் இருக்கும் கயிற்றுக் கட்டிலில் வலது காலை மடக்கி உட்கார்ந்து...இடது காலை தரையில்  ஊன்றி...இடது கையை இடது தொடை மீது ஊன்றி....நடுக்கட்டிலில் பெரிய வெங்கலத்தால் ஆன கிண்ணியில் உள்ள உணவை உருண்டை பிடித்துச் சாப்பிடுவார்..தாத்தாவின் அந்த  வெண்கலக் கிண்ணி போலவே...இன்று என் அம்மா கொடுத்த ஸ்நாக்ஸ்....லட்டு ஜிலேப்பி.... மைசூர் பாகு உடன் ...வெண்கல கிண்ணியில்....சந்தோசத்துடன்.... சாப்பிட்டேன்.."சாப்பிட தம்பிக்கு மட்டும் தானா வெண்கலக் கிண்ணி."..என் சகோதரிகள் மெதுவாகக்....கேட்டார்கள்.... இன்னைக்கு காலையில் தான் சேலம் செவ்வாய் பேட்டை சென்று...எனக்கும்... என் அப்பாவிற்கும் சாப்பிட வெங்கல கிண்ணி  வாங்கி வந்ததாக அம்மா சொன்னார்.சகோதரிகளுக்கு வருத்தம் தான்....இன்றைய காலத்தில் ... ஸ்டெயின் less steel பாத்திரங்களையும்... உணவு தட்டு களையும்..பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம்...ஆனால்...செம்பு...பித்தளை...வெண்கலம்... போன்ற பாத்திரங்களை பயன் படுத்துவது வயிற்றுக்கும்...செரிமானத்திற்கும்... நல்லது என்று மீண்டும்...பழைய பாத்திரங்களுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது...அன்று என் அப்பா சாப்பிட்ட பெரிய வெண்கல கிண்ணியும்...நான் சாப்பிட்ட வெண்கலக் கிண்ணியும்...ஒரு புராதனப்   பொருளாக பத்திரப் படுத்தி வைத்திருக்கிறோம்.... பச்சை சோளத் தட்டை வெட்டி அள்ளி போட்டப் பிறகு ,அப்பா பருத்தி புண்ணாக்கு கலந்த நீரை சிமெண்ட் தொட்டியில் கொட்டி ...வாசலில் தரையில் அடித்து இறக்கி இருந்த முலகுச்சியில்  கட்டி இருந்த பசுவை பிடித்து வந்தார்....அது தஸ் ...புஸ் என்று மூச்சு விட்டுக் கொண்டு நான் உட்கார்ந்து இருந்த கட்டில் நோக்கி ...புது வெண்கல கிண்ணியில் வாயை வைக்க வந்தது...நான் "அப்பா" என்று சத்தம் போட்டு ஒரே ஜம்ப் செய்து குதித்து தூர ஓடினேன்....அப்பா அது ஒன்னும் செய்யாது என்று... ஒரு ... ஸ்வீட் எடுத்து அதன் வாய்க்குள் போட்டார்...அது  நன்றாக  மென்று...தலையை ஆட்டிக் கொண்டு தின்றது... எச்சில் வழிந்து நூலாக ஒழுகியது..இனிப்பு சுவை அறிந்து கொண்டதும்...என்னை நோக்கி பசு மீண்டும் வந்தது..அப்பா முக்கனாங் கயிறை இழுத்துப் பிடித்துக் கொண்டார் ..பசு தலையை மேலும் கீழும் ஆட்டியது..அடங்காமல் திமிறியது. அப்பா... கிழே கிடக்கும் அந்த வெட்டிய துண்டு சோளத் தட்டை யெடுத்து வெண்கலக் கிண்ணியில் அடிக்கச் சொன்னார்....அடித்தேன்..வெண்கல ஓசையைக் கேட்க..கேட்க..பசு அடங்க  ஆரம்பித்தது... நான் அடித்த வெண்கலக் கிண்ணியின் ஓசையைக் கேட்டதும் பசு அடங்கிப் போனதா....இல்லை...அருகில் இருக்கும் மாதாக் கோயிலில் அடித்த மணி ஓசையைக் கேட்டதும் அடங்கிப் போனதா...."சேலம் வசந்த்"

Comments

Popular posts from this blog

ஆத்மா

ராகம்

நாராயணி கண்ணகி.