காவி சாமியார்
இந்தியாவின் வடக்கு தேசத்தில்... military quarters ல்... என் குடும்பத்தார் வசித்தப் பொழுது ... இடுப்பு வரை வளர்ந்த சடா முடியுடன்... நீண்ட வெண் தாடியுடன் ...காவி நிறம் கொண்ட ஒற்றை ஆடையுடன்..... வயதான நெடிய உயரம் கொண்ட ஓர் இந்து சாமியார் ... "ஓம் நமச்சிவாய "....என்று வீட்டு வாசலில் நின்று யாசகம்.. ..கேட்டப் பொழுது.... என் தாய் நிறை மாத கர்ப்பிணி.. என் தந்தை duty க்கு செல்கிற பொழுது ...தனக்கு துணையாக இருக்கும் ஹிந்தி தெரிந்த பக்கத்து வீட்டு தெலுங்குப் பெண்ணுடன் வெளியே வந்து ..என் தாய்..அந்த சாமியாருக்கு தர்மம் செய்த பொழுது. ...அந்த காவி சாது ..அதை வாங்கவில்லை ..மறுத்துவிட்டார்....பதிலாக . . வருகிற பவுர்ணமி அன்று வெள்ளிக் கிழமை உனக்கு ஆண் குழந்தை பிறக்கும்.., அதற்கு. ... ,"வஸந்த...ராம்" என்று பெயர் வை.... என்றாராம் .. மகிழ்ந்த என் தாய் ... அதற்கு என்ன செய்ய வேண்டும் உங்களுக்கு என்று ... பக்கத்தில் இருந்த ஹிந்தி தெரிந்த அந்த .... பக்கத்து வீட்டு தெலுங்கு பெண் மூலமாக... கேட்ட போது... அதற்கு அந்த... சாமியார்... நான் அந்த பிள்ளையார் கோயிலில் இருப்பேன்.... குழந்தை பிறந்தப் பிறகு . ...ஒரு காவி வேஸ்டி...ஒரு துண்டு . ... கொடுத்தால்போதும் என்று சொல்லிவிட்டு... எதுவும் வாங்காமல்... சிவ...சிவா.. ஓம் என்று ஆசிர்வாதம். செய்து விட்டு....சென்று விட்டாராம்...அவர் சொன்ன தேதியில்..வெள்ளிக் கிழமை முழு பவுர்ணமி அன்று..அம்பாலா கன்டோன்மென்ட் military hospital லில் என் தாய் ஆண் குழந்தை பெற்றெடுத்தார் .... என் பெற்றோரும்.. குடும்பத்தாரும். மூன்று பெண்குழந்தைகளுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறந்ததால்.. மிகவும் மகிழ்ந்தனர்... அக மகிழ்ந்த என் தந்தையார் ..அந்த ஹிந்து சாமியாரை தேடி அவர் சொன்ன. ... அந்த பிள்ளையார் கோயில் சென்ற போது .. அந்த சாமியாரை காணவில்லை...என் தந்தையார்...கொண்டு சென்ற... ஒரு கிலோ... வெண்கற்கண்டு... காவி வேஷ்டி...காவிதுண்டு... ஆகியவற்றை... military Jeep ல் வைத்துக் கொண்டு... அந்த area முழுவதும் தேடியும் அந்த சாமியாரைக் காணவில்லை... ஒரு மாதமாக... தேடியும்..கிடைக்கவில்லை...என்ன செய்வது என்று. தடுமாறியபோது.அந்த கோவில் குருக்கள் வழிகாட்டல் படி...அந்த பொருள்களை... அந்த பிள்ளையார் கோயிலில் என் தந்தையார் வைத்துவிட்டார்.. எப்படியாவது அந்த காவி சாமியாரை பார்த்து விடவேண்டும் என்று தொடர்ந்து. வழிபோக்கெல்லாம் தேடியும் அவர் கண்ணில் படவேயில்லை. என் தாயின் கண்ணில் தென்பட்ட அந்த காவி சாது .... ஆண் குழந்தை பிறக்கும் என்று ஆருடம் சொன்ன அந்த அருள்வாக்கு சாமியார்..பிறக்கும் குழந்தைக்கு பெயர் வைத்த அந்த சாமியார்.. அவரின் தரிசனம் ஒருமுறையாவது கிடைக்குமா என தெருவெல்லாம் தேடியும்..தென்படும் திசையெங்கும் தேடியும்... ஆலயங்களிலும்.. அரசமரத்தடியிலும் .. ஆற்றின் ...நதிகளின் கரை ஓரங்களிலும்..நந்தவனத்திலும்.. நடு சாமத்திலும்....தேடியும்...அந்த காவி சாமியாரின் மறு தரிசனம்...கிடைக்கவே இல்லை ...தரிசனம்...அவரின்....தரிசனம் என்பது ஒருமுறைதான் கிடைக்கும் போல இருக்கிறது... தந்தைக்கு பரஸ் பூருக்கு transfer வரும்வரை நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து தேடியும் அந்த காவி நிறம் கண்ணில் படவே இல்லை... அந்த நான்கு ஆண்டுகளில்..நான்கு வயதில்.. கேட்ட.. ஹிந்தி பாடல்கள் என் மனதில் பதிந்தவை ...இன்றும் என் நினைவில் நடனமாடுகின்றன ... ""கியாக் கரு ராம் மிகே புட்டா மில்கையா... ஹரே கரே புட்டா மில் கையா... தேரே மினுக்கி . கங்கா..ஹர ஹர தேரே மினுக்கி யமுனா கா..போலு ராதா போலு சங்கம் தேவா கானா கி... ரகுபதி ராகவ ராஜாராம்..பசீத்த பாவன சீத்தாராம்..""". என்பது போன்றவை..அந்த ஹிந்தி பாடல்கள்.... மேலும் அந்த காவி சாது போலவே என் தந்தையும்..தாடி.. மீசை .. தலைமுடி வளர்த்து ஆண் குழந்தை பிறப்புக்கு .. தவமாய் தவமிருந்து வேண்டி வருந்தி இருந்திருக்கிறார்...பிறகு..என் ஐந்து வயதில் ...ராமேஸ்வரம் கடலில் நீராடி.. இரட்டை சடை போட்டு இருந்த என்தலை முடி இறக்கி ..தந்தையும்.. மீசை..தாடி..முடி இறக்கி...அந்த விண்ணளந்த ஈசனின் முகம் பார்த்து தன் வேண்டுதலை .நிறைவேற்றினார். இப்பொழுதெல்லாம்... சிவ சிவ ...என்னும் ஓசை காதில் விழும் போதெல்லாம்.. .. ஓம் நமசிவாய எனும் நாம .மந்திரத்தை மனதில் நினைக்கும்போதெல்லாம் ...என் மனம் ஒரு அமைதியையும்..ஆறுதலையும்..ஒரு பாதுகாப்பையும் ...நிறைவையும்...பெறுகிறது .. அப்பா.. அம்மாவின் முகம் ஆனந்தத்தை தரும் பொழுது...அந்த ஈசனின் முகம் என் இதயத்தை மகிழ் விக்கிறது... அந்த ஹிந்து சாமியார் வைத்த பெயர் '"வஸந்த ராம்"...தமிழ் நாட்டில் பள்ளியில். .. ஐந்து வயதில்.... சேர்க்கும் பொழுது...என் அப்பாவின் தம்பி நடேசன் அவர்களின் மகன் பெயர் செல்வகுமார் என்பதால்...வஸந்தராம்... என்பது வசந்தகுமார்...என மாற்றப் பட்டது....என் தாய் தந்தை....குடும்பத்தார்... மகிழ்ந்த தினம்... .மார்ச் மாதம் 6ஆம் தேதி.. என் பிறந்த நாள் வரும் பொழுது ஒவ்வொரு முறையும் நினைவில் வரும் முதல் நினைவலை . .என் பெற்றோருக்கு அடுத்து......அந்த... ஓம் நமசிவாய .. ஓம் நமசிவாய....காவி சாமியார்... தான்...🙏 "சேலம் வசந்த்"
அருமை வஸந்த். வியக்க வைத்த நிகழ்வுகள். கடவுளே வந்து அருள் புரிந்தார் என நினைக்க வைக்கிறது
ReplyDeleteஅருமை.
ReplyDeleteபெயருக்கு பின் இவ்வளவு பெரிய சம்பவம்.
ஓம் நமசிவாய