முதல் சம்பந்தி
என் பெரியம்மா...அம்மாவின் அக்கா... சின்ன குயிலி...பெரியப்பா..குட்டிக்கார பெருமாள் ஆகிய இருவரும் செம்மாண்டப் பட்டியில் இருந்து...ஒரு ஞாயிறு காலையில் வீட்டிற்கு வந்தார்கள்...வாசலில் கட்டி இருந்த சிந்து மாட்டையும், வெள்ளைப் பசுவையும் பார்த்து விட்டு...வானம் பார்த்த வெறும் தரையில் கட்டி வைத்து இருக்கிறீர்களே....வெய்யல் ...மழை வந்தா மாடுங்க தாங்காதே என்று...அப்பாவிடம் சொன்னார்கள்....அப்போது. ...நாங்கள்.... பெரியம்மா கொண்டு வந்து இருந்த....பலகாரங்களை தின்று கொண்டிருந்தோம்...எப்பொழுது வந்தாலும்...கடலைக் காய்...குச்சிக்கிழங்கு...பனங்கிழங்கு.... சீத்தாப்பழம்... எழந்தைப் பழம் ...கொய்யாக்காய்... கோணப் புளியங்காய்...கொ டுக்காப்புளி.முருங்கைக்காய்...இவைகளோடு...பலகாரம் ஆகிய தீனிகளை கொண்டு வருவார்கள்... எப்பொழுதும்.. வெறும் கையோடு வந்ததில்லை... ஆனால் இந்த முறை ...இந்த தின்பண்டங்களோடு...ஒரு சில. . அங்கும் இங்குமான கரும்புள்ளிகளை முதுகிலும்...முன் நெற்றியிலும் கொண்ட வெள்ளை நிறப் பூனை ஒன்றும்...அதனோடு வெளுப்பும் சிகப்பும் கலந்த நிறத்தில் முட்டை இடும் பருவத்தில் ஒரு பெட்டைக் கோழியும் கொண்டு வந்து இருந்தார்கள்.... பூனை ...புசு ... புசு வென்று நல்ல சுறு சுறுப்பாக அழகாக இருந்தது...கோழி... கொக்...கொக்...என்று காலில் கட்டிய கயிற்றைக் கொத்திக்... கொத்தி கழற்ற முயன்று மூக்கு சிவந்து போனது... பூனையை என் அக்காக்கள் முகத்தில் வைத்து கொஞ்சிக் கொண்டு இருந்தார்கள்...இவைகளோடு...சென்ற வாரத்தில்...அப்பா வாங்கி வந்த ஒரு வெள்ளாடு...இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு குட்டிகளை ஈன்றது...ஒன்று கிடா...மற்றொன்று...பொட்டை....இப்பொழுது...எங்கள் வீட்டின் வாசல் முழுக்க இவைகளின் அசைவும்....இம்மா...அம்மா... மே.. மே...கொக்...கொக்கோ... மியா... மியாவ் என்ற இவைகளின் சப்த ...இசை வெள்ளத்தின் ஆக்கிரமிப்பும்... ஆளுமையும் தான் அதிகம்....அப்பா...பெரியப்பா சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்டார்...இந்த ஜீவன்களை காக்க ஒரு ஓலைக் கொட்டாய் போட முடிவு ஆனது.....16அடி அகலத்தில்.. 20அடி நீளத்தில் ...3 அடி உயர மண் சுவர் வைத்து .. மூங்கில் சாரம் வைத்து... பனை ஓலை வெய்ந்து...ஒரே வாரத்தில் ...பெரியப்பா...ஒரு சிலர் உதவியுடன்...கட்டியும் கொடுத்து விட்டார்...இது ஒரு நல்ல பாதுகாப்பானது என்பதை போகப் போக தெரிந்துக் கொள்ள முடிந்தது...இவ்வளவு வேலைகளை உடனுக்குடன் செய்து கொடுத்த பெரி யப்பாவுக்கு...அப்பா...அன்று மாலை ஒரு சிறிய ...சிறப்பான விருந்து ஏற்பாடு செய்து இருந்தார்...அப்பா... உள் வீட்டிற்குச் சென்று...தன்னுடைய ...மிலிட்டரியில் தயாரித்துக் கொண்டு வந்து இருந்த பெரிய இரும்பு பெட்டியைத் திறந்து...ஒரு பெரிய பாட்டிலை முதுகில் போட்டிருந்த துண்டி ல் மறைத்துக் கொண்டு வெளியே வந்து..."இது எல்லாம் எங்களுக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டு.".. மாட்டு கொட்டாய்ச் சென்று... கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டார்...பெரியப்பாவை வரவழைத்து...தன் அருகே அமர்த்தி...சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு .. டம்ளரில் ஊற்றிக் கொடுத்தார்... தானும் குடித்தார்....இருவரும் தொண்டையை செரும்பும் சத்தம் கேட்டு..மாடுகள் மிரண்டு...அவர்களை தலை தூக்கிப் பார்த்தன...அது military சரக்கு...மது.. ." ரம்.." .அம்மா கொடுத்த அசைவ உணவை சாப்பிட்டபின் இருவரும்...அந்த கட்டிலிலே ஒன்றாக படுத்து... அரசியல் பேச ஆரம்பித்து அப்படியே தூங்கிப் போனார்கள்....அந்த "ரம்"...மது... என்ன சுவையில் இருக்கும் என்று என் மனதில் ஆர்வம் ஊரியது .அந்த வயதில் எனக்கு அப்படி ஒரு ஆசை ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை..காலையில் எழுந்து கண்களை கசக்கிப் பார்க்கும் போது ...பெரியம்மாவும்...பெரியப்பாவும் ..தங்கள் ஊர் செம்மாண்டப்பட்டிக்கு சென்றுவிட்டு இருந்தார்கள். கருகுருவி கத்திக் கத்திக் கூவும் விடி காலையிலேயே அவர்கள் எப்போதும் புறப்பட்டு விடுவார்கள்...மனதிற்கு "பொசுக் "கென்று இருந்தது..அவர்கள் கொடுத்து விட்டு சென்ற அந்த பூனையை பார்த்த தும்..அதை எடுத்து கன்னத்தோடு கன்னம் அனைத்ததும் இலவம் பஞ்சு போல மனசு.... லேசாகிப் போனது... இப்பொழுது...இந்த இரண்டு பசுக்கள்...இரண்டு குட்டிகளுடன் ஆடு....இருபத்து ஒன்று குஞ்சுகளுடன் உள்ள தாய்க் கோழி...குறுக்கும் மறுக்கும் ஓடும் பூனை...இவைகளை எல்லாம் பராமரிக்க...பராமரிக்க...எங்களின் ஓய்வு குறைந்து கொண்டே போயிற்று.... தீனி போட்டு சமாளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது .. கோழிக்கு...சோளம்..கம்பு... ஆட்டுக்கு...செடி...கொடி.. தளை...பசுக்களுக்கு...பச்சை சோள தட்டு...காஞ்ச கம்பந்தட்டு... பருத்திப் புண்ணாக்கு...கலப்புநீர்...மேலும் வீட்டிற்கு முன் இருந்த சித்தப்பா திரு.நடேசன்...அண்ணன் திரு.செல்வகுமார் அவர்களின் வீட்டு நிலம்...2800 சதுர அடி மேச்சலுக்கு.... இவைகள் எல்லாம் போதவில்லை....சிரமமாக இருந்தது...ஓலை கொட்டாயின் ஓலைகளில் ஏறி ...அவைகளை சோர ண்டி ... கரண்டு....அதில் வயறு நிறைய சுவைத்து சாப்பிட்டு கொண்டு இருக்கும்..குடிசையை கெடுக்கும்... கரையான் களை...அதன் மண் கூட்டை தட்டி....கிழே விழச் செய்து... கோழிக் குஞ்சுகளுக்கு கொத்தித் தின்ன கொடுக்க வேண்டும்...கொரட்டி... சல்லை எடுத்துக் கொண்டு கோண புளியங்காய் மரம் தேடி கிளை ஒடித்து ஆடுகளுக்கு போடவேண்டும்...ஒரு சிமெண்ட் தொட்டி நிறைய குடிக்கும் சிந்து மாட்டிற்கு....தவிடு...பருத்தி...புண்ணாக்கு...கலந்து...கலப்பு நீர் வைக்க வேண்டும் ..இல்லையென்றால் ..அந்த அளவிற்கு பால் காலை மாலை கரக்காது ...வெள்ளைப் பசுவிற்கு...இந்த அளவுக்கு தேவைப் படாது...சேலம் மூன்று ரோடு .ஜவர்கர் மில்லில் வேலை செய்து வந்த அப்பாவுக்கு...மில்லுக்கு அருகில் இருக்கும் சிரசு முனியப்பன் கோவிலை ஒட்டி இருந்த தட்டுக் கடையில் இருந்து..பச்சை சோள தட்டு வாங்கி..திரு. சிதம்பரம் சித்தப்பாவிடம் இருந்து 200 ரூபாய்க்கு வாங்கி இருந்த... புதிய ராலி சைக்கிளில் பின் சீட்டில் வைத்துக் கட்டிக் கொண்டு... போடிநாயக்கன்பட்டி ஏரி... ரயில்வே track கீழே.. நாலு அடி அகலம். ஆறு அடி உயரம் கொண்ட அந்த ஒற்றைக்கண் குகை..பொந்தில். .. சைக்கிளை தள்ளிக் கொண்டு வருவது அப்பாவுக்கு மிக சிரமத்தை ஏற்படுத்தியது ....ஒரு நாள் பசு மாடு வாயில் நுரை ஒழுக ஈனக்குரலில் முனகியது...செரிமானக் கோளாறா...வேறு எதாவது...ஒன்றும் தெரிய வில்லை...கஞ்சமலை மாமாவை அணுகியபோது....மாடுகளைப் பராமரித்து வரும் ஒரு அனுபவ சாலியை அழைத்து வந்தார்...அவர்தான் .. திரு.சுக்காப்பயன் அவர்கள். .வந்தவர்... ஆறு அடிக்கு மேல் உயரம் .. தலையில் பெரிய முண்டாசு...கையில் மூங்கில் தடி...வெற்றிலை தொடர்ந்து போடுவதால்...சிவந்த தடித்த உதடு.காவி ஏறிய பற்கள்...முறுக்கு மீசை.. செவ்வரி ஓடிய கண்கள்....இரண்டு ஆள் சேர்த்த உடம்பு.... சித்தர் கோவில் அருகில் இருக்கும் சிவதாபுரம் பனங்காட்டில் கரும்பு வெட்டி விட்டு வருவதாக சொன்னார்... தோளில் இருந்த ஒரு சிறிய கரும்பு சுமையை கிழே இறக்கி வீட்டு சுவர் மீது சாய்த்து வைத்தார்..அவரை கண்டதும்...மாடுகள் தலைத் தூக்கிப் பார்த்து மிரண்டன...பூனை தாவிக் குதித்து வீட்டுக்குள் ஓடியது... கரு ம்பைப் பார்த்ததும் எனக்கு நாவில் கரும்பின் இனிப்பு ஊறியது ...அவரை ...அப்பா கை எடுத்து கும்பிட்டு வாங்க..என்று வரவேற்றார்...அவரும் கை சேர்த்து வணங்கினார்... மாமா திரு. கஞ்சமலை...அவரைப் பற்றிச் சொன்னார்.... வயிறு வலியால் கத்தும் பசுவிற்கு வைத்தியம் செய்ய இப்போது வந்திருக்கும் இந்த ஆஜானுபாகுவான திரு.சுக்காப்பையன் அவர்கள் தான் ..தனக்கு வரப் போகிற முதல் சம்பந்தி என்பது...என் தந்தைக்கு அப்போது தெரியாது .."சேலம் வசந்த்"
நன்றி.. நன்றி
ReplyDelete