Posts

Showing posts from July, 2025

கடல் அலை

இரண்டு நாட்களாக தூக்கம் கெட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை...அத்தை குணவதி       ஜெகதீசனின் போன் உலுக்கி எழுப்பியது..ஹலோ..அத்தை வணக்கம்...சொல்லுங்க ..என்றேன்......கண்ணு... எங்கப்பா இருக்க...          நாகர்கோவிலிலா....சற்று நேரம் கழித்து...தம்பி இராமமூர்த்தியிடம் இருந்து போன் வந்தது.. ஹலோ தம்பி ராம்ஸ்.... சொல்லுப்பா என்றேன்..... அண்ணா... எங்க அண்ணா இப்ப இருக்கிறீங்க...........                                       வில்லிவாக்கம் இரயில் நிலையத்தின் அருகில் உள்ள தினசரி மார்கெட்டைத் தாண்டி..எதிர் இருக்கும் முதல் தெருவில் ..கடைகள் நிறைந்த பகுதியில்...ICF   யில் ஆபீஸ் சூப்பிரண்டென்ட் ஆக பணி புரியும் திரு.ஜான்சன் சார்..அவர்களின் வீட்டில்(2003) நாங்கள் குடியிருந்தோம். பிள்ளைகள்...மூவரும் சிங்காரம் பிள்ளை மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்து வந்தார்கள்.மேல் மாடியில் வீட்டுக்காரரும்....கீழே இருந்த வீட்டில் நாங்களும் குடி இருந்தோம்.வீட்டுக் கார...

ஆலய மணி

சேலம் சந்திப்புக்கும் எங்கள் ஊர் ஆண்டிபட்டிக்கும் நடுவில் கிடப்பது தான் போடிநாயக்கன்பட்டி ஏரி.         ..இந்த ஏரியில் எப்போதும் நீர் இருந்து கொண்டு தான் இருக்கும். மழை காலங்களில் ,நீர் நிரம்பி கிழக்கே உள்ள கோடிக்கரை முழுகி நீர் வழிந்துச் செல்லும்...சல..சல வென  ஓடும் நீரில் மீன் குஞ்சுகளும் விரல் அளவு நீளம் கொண்ட கெண்டை மீன்களும் எகிறிக் குதித்து வளைந்து  விளையாடும் ...                                   பள்ளி விடுமுறை நாட்களில்...துவைக்க வேண்டிய துணிகளை எல்லாம் தோளில் தூக்கிக் கொண்டு துணிச்சலுடன்      ஏரிக்கரை வந்துவிடுவோம்.      அக்காக்கள் துணி துவைக்க ஆரம்பிப்பார்கள்.அண்ணாக்கள் தூண்டில் வைத்து மீன் பிடிக்க       கரையோரம் அமர்வார்கள். சிறுவர்களாகிய நாங்கள் கரை ஓரத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டு குட்டிக் கரணம் போடுவோம்.குதிக்கும் போதே சொல்லுவார்கள் காதில்  "ஊப்பட்டை" ஏறிக் கொள்ளும் என்று..காதில் இரு விரல் வைத்த...