யார் அவர்
20.12.2024 வெள்ளிக் கிழமை அன்று... பழையப் ஃபோட்டோ க்களை...பார்த்துக் கொண்டிருந்த போது...1947 ஆம் வருடம் August மாதம் 15 ஆம் தேதியில் லடாக்கில் ... பனி சிகரத்தில் MEG...Madras engineering group பிரிவில் ... பிரிட்டிஷ் rule ல்.....military யில் பணியாற்றிய போது....சுதந்திரம் கிடைத்து விட்டது என்றச்...செய்தியை அறிந்ததும்..... இமைய மலை மேலே....வானத்துக்கும் மேலே.. மேலே .. உயர்ந்துப் பறப்பதுப் போல....உன்னத உற்சாகத்தில்....இந்திய முவர்ணக் கொடியை நெஞ்சில் அனைத்து பிடித்துக் கொண்டு... ஜெய்ஹிந்த் ... ஜெய்ஹிந்த்....என்று உரக்கச் கத்திக் கொண்டு....அந்த லடாக் மலைச் சரிவில்....தன் சக இராணுவ வீரர்களோடு....ஓடிய ..பதினெட்டுப் வயது இராணுவ வீரர் ....என் தந்தையின் ஃபோட்டோவைப் பார்க்க நேர்ந்தது... என் தந்தை...அந்த காலத்து தேர்டு ஃபார்ம் படித்தவர்...பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தவர் ஒரு நாள் காணாமல் போய் விட்டார்....என் தாத்தா ...காணாமல்போன தன் மகனை தேடிப் பார்க்கவும் இல்லை...தேடிக் கண்டுபிடிக்க.அவருக்கு ஆர்வமும் ஏற்படவில்லை...காரணம்...பலப் பல இருந்தாலும்.... வீட்டில் நிறையப் பேர் இருந்தார்கள்... தாத்தாவும் அவரின் இரண்டு மனைவிகளும்...தாத்தாவின் வயதான பெற்றோர் மற்றும் ஒன்பது ஆண்பிள்ளைகள்.இரண்டு பெண் கள்.. மொத்தம்...பதினாறு பேர் வீட்டில் இருந்ததால்...ஒன்று குறைந்ததே என்று...கொஞ்சம் பாரம் குறைந்ததே என்றுத்... தாத்தாவிற்க்கு..இருந்து இருக்கலாம்..... ஆங்கில கவர்னர் ஜெனரல் மௌண்ட் பேட்டன் பிரபு அவர்கள்...இந்திய முதல் மற்றும் கடைசி கவர்னர் ஜெனரல் இராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம் இந்திய சுதந்திரத்தை ஒப்படைத்தார்... இந்தியா முழுதும்...சந்தோசம்....கொண்டாட்டம்...இந்த சந்தோசத்தில்...என் தாத்தா வீட்டார்.... எவ்வளவு சந்தோசப் பட்டார்கள்...என்பது...இது வரை தெரியாத விசயம்...ஆனால்... அண்ணனோடு ... வீராணம். தாதம்பட்டியில் இருந்து.காலில் செருப்பு இல்லாமல்.நடந்தே சென்று.சேலம் அம்மாபேட்டை அரசுப்பள்ளியில் படித்த என் தந்தையின்..... சகோதரி மற்றும் உடன் பிறப்புக்கள்.. எட்டுத் தம்பிகள்.....காணாமல் போன அண்ணன் என்ன ஆனாரோ என்று...கட்டாயம்... கவலைக் கொண்டு இருந்து இருப்பார்கள்.... இப்படிக் கவலையும்... கண்ணீரும்.... காலமும்...கல்வி என்ற பாதையில்...வேகமாக ...ஓடிக்கொண்டு இருந்தப் போது...இரண்டு வருடமும் ஓடிப் போனது.. ஒரு நாள் காலை வேளையில் ஊர் தெரு முழுக்க...தெரு நாய்கள் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தன... காலை வேளை என்பதால்...அரக்கப் பறக்க அவரவர் வேலைகளைச் செய்துக் கொண்டு இருந்தவர்கள்... ஒருமித்த தெரு நாய்களின் ஒரு விதமான...குரல் ஓசைக் கேட்டு தங்களின்...வேலைகளை சற்று ஒதுக்கி நிறுத்தி விட்டு...தெருவில் தங்களின் கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர்.... இந்திய சுதந்திரப் போராட்டத்தில் . மிலிடரி ... போலீஸ்.. போராட்டக் காரர்கள்... கோஷம்..சத்தம். தர்ணா..உண்ணாவிரதம்... ஊர்வலம்..அடி..உதை.. துப்பாக்கிச் சூடூ ..கைது.தூக்கில் போடுதல்.... சிறைத் தண்டனை..சவுக்கடி.. பட்டினி..சித்திரவதை... சிந்தும் இரத்தம்... இவைகளை அடிக்கடி... இரவானாலும் சரி பகலானாலும் சரி தெருவெங்கும்...ஊரெங்கும்... நாடெங்கும் தொடர் நிகழ்வாக பார்த்துப் பார்த்து பயந்து போய்க் கிடந்த அந்த தாதம்பட்டி கிராமத்துத் தெருவில்.... வந்தவரைப் பார்த்ததும்... அந்தத் தெரு...கிராமத்து வாசிகள் பயந்துதான் போய்விட்டார்கள்... நாடும் ஊரும்...இருக்கிற இந்த போராட்டக் கலவரத்தில்...நம்ப ஊர்ல யாரு என்ன செஞ்சுப் புட்டாங்கலோ ... என பயந்து... வாய் மீது கை வைத்து மேலும் நடப்பதை பார்க்க...ஆவலாக... இருந்தார்கள் அந்த வீராணம் தாதம்பட்டி கிராமத்து மக்கள்.. ..நாய்கள் புடை சூழ...காக்கைகள் பறந்தோட ....கோழிகள் கொக் கொக் என்று கூரை மீது தாவி ஓட...பூனைகள் பயந்து குறுக்கே நுழைய.....அந்த மிலிடரி உடையில் வந்தவர் ..இரண்டு வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன...என் தந்தையார் திரு .முத்துசாமி அவர்கள் தான்... அந்தத் தாதனூர் கிராமத்தின் முன்பாக அரை பர்லாங் தூரத்தில்...இருந்த உயரமான அரச மரமும்..அதன் கிழே இருந்த அரச விநாயகரும்..அதற்கு முன்பாக பறந்து கிடந்த அரை ஏக்கர் நில செம்மண் திடலும்... இவைகளைப் எல்லாம் தாண்டி.. ஊருக்குள் நுழையும்போது தான் இவ்வளவு தெரு நாய்களின் வரவேற்பு என் தந்தைக்கு கிடைத்தது...என் தந்தையைப் பார்த்தவர்கள்... மெது மெதுவாக தங்களின் செயல்களில் ஈடுபட்டார்கள். ஆடுகளை ஓட்டிச் சென்றவர்கள் ..ஆடுகள் அது வழிச் செல்ல... ஆ வென்று வாய்ப் பிளந்து நின்றார்கள்..அடுப்புச் சாம்பல் எடுத்து பாத்திரங்களை தேய்த்து கழுவிக்கொண்டு இருந்த இளம் பருவத்துப் பெண்கள் .. கழுவுவதை நிறுத்தி...தன்னை அறியாமல் சிரித்துக் கொண்டு இருந்தார்கள் ..கூடையில் மூடி வைத்த கோழிக் குஞ்சுகளை திறந்து விட்ட கூன் விழுந்த பாட்டிமார்கள்..பொக்கை வாய்த் திறந்து புன்னகைத்தார்கள்.தார் சாலை ஓரமாக இருந்த புளியமரங்களின் உச்சியில் அடித்தக் காற்றில் பொட் பொட் என... பொழுது விடியும் முன் விழுந்த புளியம் பழங்களை ..பொறுக்கி எடுத்து புடவை முந்தானையில் மடியில் கட்டி .. முழு மாத கர்ப்பிணிப் போல அசைந்து அசைந்து நடந்து வந்து... முறத்தில் கொட்டிக்கொண்டு நின்ற பள்ளிப் படிப்பை முடிக்காமல் பருவம் ஏறி நின்ற பெண்கள் பல்லைக் கடித்துக்கொண்டு பார்த்தனர்.குன்றின் பக்கத்தில் விளைந்து வில்லாக .. முள்ளாக நிற்கும் கரு வேலமரத்து கிளை ஒடித்து அதன் நுனி நீக்காமல் கடைவாய்ப் பல் துலக்கும்..மாணவப் பருவம் மீறிய இளம் வட்ட இளைஞர்கள்..இளித்துக் கொண்டு நின்றார்கள்.இருபது வயதுக்குள் இரண்டு குழந்தைகளைப் பெற்று மூன்றாவது குழந்தையை பெற முழுகாமல் இருந்த இளம் வயது பெண்கள்..வலது புற முந்தானையை வலது கையால் இழுத்து விட்டு மீண்டும் வழுக்கி மேலேராமல் இருக்க வலது இடுப்பில் சொருகி ...சொக்கும் பார்வையில் சுழன்று பார்த்தார்கள்.. ராட்டையில் பஞ்சு விட்டுக் கொண்டு இருந்த எங்களின் பெரிய குடும்பத்தின் தலைவி ...என் பெரிய ஆயா.... குப்பாயி ஆயா...வும்.. மாட்டிற்க்கு அருகே சாணி வாரிக் கொண்டு இருந்த சின்ன ஆயா காளியம்மாளும் ... அடே.. ஈஸ்வரா..என்று...வாய் அடைத்துப் போனார்கள்..மாட்டிற்கு மூக்கனான் கயிரு மாட்டிக் கொண்டு இருந்த என் தாத்தா..ஆறுமுகம்...அம்மா..பெரியாண்டிச்சி தாயே ..என் பையனை கொண்டாந்து தந்துட்டியே ...ம்மா...என்று உரக்க குரல் எடுத்துக் கத்தி ...கைக் கூப்பி எழுந்து வரும் சூரியனைப் பார்த்துக் கும்பிட்டார்.....இவைகளை எல்லாம் கடந்து வந்த என் தந்தையார்...என் தாத்தாவின் காலில் விழுந்து வணங்கினார்..தாத்தா அடேய்...என் மகனே. முத்துசாமி ... எங்கடாப் போன.. எனக்குச் தெரியுமடா ..நீ என்னை விட்டுப் போக மாட்டே..திரும்பி வந்திடுவேன்னு..அந்த அம்மா.. பெரியாண்டிச்சி . நம்ப குலதெய்வம் ....தாயி்..நம்பல பிரிக்க மாட்டா..அந்த பெருமாளு .தெய்வம் நம்பல .ஒரு நாளும் கெடுக்க மாட்டார்.....என்று தன் மகனை தாத்தா நெஞ்சோடு இறுகக் கட்டி அணைத்துக்கொண்டார்.....அப்பா.....அப்பா..என்று அழும் தன்மூத்த மகன் முத்துசாமியை.... அப்படியே தூக்கி தன் தோழின் மீது சாய்த்து ... தாத்தா..சுழன்று ஆடினார்...அப்போது தாத்தாவின் தலைப்பாக்கு கழண்டு கீழே விழுந்தது.... தோளில் இருந்து மகனை இறக்கிவிட்டு ....தாத்தா...தன் தலை முடியை அள்ளி கோதி தலை உச்சியில் கோடாலி முடிச்சு போட்டு கொண்டார்.மூன்று அடி நீல அடர்ந்த தலை முடி.... கரு கரு வென்ற நிரம்...தாத்தா பெரும்பாலும் தன் தலை முடியை அரப்பு தேய்த்து கழுவி தேங்காய் எண்ணெய் தடவி..மரக் கட்டை சீப்பு கொண்டு சீவி கொண்டை போட்டு ஒரு நாலு முழ நீள கதர் துண்டினால் தலைப்பாக்கு கட்டிக் கொள்வார்... இப்படித் தலையை ....தொடர்ந்து வெயில் படாமல் இறுகக் கட்டிக் கொள்வதால்... காற்று புக கஷ்டம் ஏற்படும். ..இதனால் தலைக்குள் ஊறும் வியர்வை தேங்கி...ஒரு வாடை உருவாகும். அந்தப் புழுங்கிய கவிச்சி...வாடை... தாத்தா தலைப்பாகையை கழட்டும் நேரங்களில் பக்கத்தில் யாரும் நிற்க முடியாத அளவில் நாற்றம் வீசும்...அதனாலேயே தாத்தா விற்கு....ஊரில் ஒரு பட்டப் பெயர் உண்டு...தாத்தாவை அடையாளம் கொண்டு சொல்ல வேண்டும் என்றால்.... சீத்தலையன் ஆறுமுகம் என்று தாத்தா இல்லாத நேரத்தில் சொல்வார்கள். மகனைப் பார்த்து அப்படியே ஆடிப் போன தாத்தா அருகில் இருந்த துணி துவைக்கும் நாலு அடி அகல பாறைக் கல்லின் மீது இரண்டு கைகளையும் பின்னால் முட்டுக் கொடுத்து உட்கார்ந்து விட்டார் ... ஆயாக்கள் இருவரின் காலில் விழுந்த ,தன் மூத்த மகனை கன்னம் பிடித்து வெற்றிலை எச்சில் வாயால் கவ்வி முத்தம் அழுந்த கொடுத்தார் பெரிய ஆயா... தாத்தா செல்லமாக அழைக்கும்.முதல் மனைவி ..உருளி என்கிற குப்பாயி தான்.... பெரிய ஆயா.இவருக்குத் ஆறு பையன்கள்.. இரண்டு பெண் பிள்ளைகள்..இரண்டாவது மனைவி..காளியம்மா ஆயா.. தாத்தாவின் காதலி என்றே இவரை சொல்லலாம்..இவருக்கு .. மூன்று பையன்கள் மட்டுமே.. பெரிய ஆயாவுக்கு வலது கால் குதி காலில் படைக் கள்ளி முள் குத்தி ஆழத்தில் முள் நுனி உடைந்து.......அது உடைந்து இருந்ததை தெரியாத காரணத்தால்....அப்படியே விட்டு விட்டார்கள்...தெரிந்து இருந்தால் முள் இடுக்கி மூலமாக . தாலிக் கயிறில் தொங்கிக் கொண்டிருக்கும் ஊக்கினால் தோல் கிளறி இரத்தம் சிந்த...ஐயோ .... ஐயோ என்று கத்தி கதறினாலும் இரண்டு மூன்று பேர் பிடித்துக் கொண்டு உடைந்து தைத்துக் கொண்டு இருக்கும் அந்த முள் நுனியை வெளியே எடுத்து முள் குத்தியவரின் உள்ளங்கையில் வைத்து..இந்தா..இதுதான் உன் காலில் இருந்த அந்த முள் என்று சொல்லிச் சிரித்து இருப்பார்கள். ..ஆனால் அப்படி உடைந்து போன அந்த நுனி முள்ளை வெளியே எடுக்காமல் விட்டதனால்....உடல் வெளிப் பொருளை சேர்க்காது என்பதனால்.... சீழ் பிடித்து... நடக்க நடக்க பாதித்து.....காலின் குதிக்கால் சேதம் அடையும் நிலைக்கு வீங்கிப் ...நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது .....இதற்கு நாட்டு வைத்தியம் தான்...அப்போதெல்லாம்....செலவு இல்லாத மருத்துவம்...இந்த வைத்தியத்தில்....அந்த உடைந்து... உள்ளே இருக்கும் முள்ளை வெளியே குதிக்காலை கீறி ... சீழ் இரத்தத்தோடு பிதுக்கி வெளி எடுத்து சுத்தம் செய்து....அதனுள் எருக்கன் பாலை சொட்டு சொட்டாக ஊற்றி....எருக்கன் நுனி இலையை நெருப்பில் வாட்டி மடித்து அதன் மேல் சூடாக வைத்துக் கிழித்த வெள்ளை வேட்டியின் .பட்டியில் நன்றாக இருக்கி கட்டு போட்டு விடுவார்கள். ..இதைச் செய்து முடிப்பதற்குள் முள் குத்தியவர் அழுது களைத்துப் போய்விடுவார்....பிறகு இரண்டு.. மூன்று நாள் கழித்து கட்டு பிரித்து அதன் நிலை எப்படி இருக்கிறது என்று பார்த்து...சுத்தம் செய்து....செங்கல்லை நெருப்பில் சுட வைத்து. குதி காலை அதன் மேல் வைத்து... அழுந்த மிதிக்கச் சொல்லுவார்கள்...காலின் ரண வலிக்கு இந்த செங்கல் சூடு சுகமாகவும் இருக்கும்... சுறுக் கென்று சுட்டு உயிரையே சுண்டி இழுப்பது போலவும் இருக்கும்...இப்படி முறையற்ற வைத்தியத்தை செய்து ...செய்து.அந்த காலை பெரும் சேதத்தை சந்திக்கும் அளவுக்கு கொண்டு சென்று விடுவார்கள்.அப்படி வைத்தியரிடம் போகாமல்... வந்தவர் . போனவர்கள் சொல்லும் வைத்தியத்தை செய்த காரணத்தால் பெரிய ஆயாவின் கால் நலம் பெற பல மாதங்கள் ஆகின...ஆனால் கால் மீண்டும் பழைய நிலைக்கு வரவில்லை.. நாய் வால் போல வளைந்து சுருண்டு கொண்டது.... அதன் பிறகு ஒரு மூங்கில் தடியை பிடித்துக் கொண்டு ...காலை ஊன்றிக் கொண்டுதான் பெரிய ஆயா நடக்க ஆரம்பித்தார்....தரையில் உட்கார்ந்து விட்டால் போதும்....மேலே எழ இடதுக்கையை ஊன்றி ...வலது கையில் மூங்கில் தடி பிடித்து இடது பாதம் ஊன்றி நிற்க வேண்டும்.... சுருண்ட வலது கால் பாதம் மேலே தூக்கி கொஞ்சம் உயர்ந்து இருக்கும். மீண்டும் உட்காரும் போது வலது காலை இடது கால் மீது மடக்கி தூக்கி படிய வைத்து .. உரலின் மீதோ...சுவரின் மீதோ முதுகை சாய்த்துக்கொள்ள வேண்டும் ... இப்படி உட்கார்ந்து இருந்த .பெரிய ஆயாவின் கண்களில் திரண்ட பாசக் கண்ணீர் துளிகள் அப்பாவின் பாதத்தின் மீது விழுந்தன.அப்பா ஆயாவின் முகத்தை தன் நெஞ்சில் இழுத்து அணைத்துக் கொண்டார்...இருவரின் குரலிலும் அழுகையினுடே ஒருவித சத்தம் வெளி வந்தது...அது பாசத்தின் வெளிப்பாடா.... பேரானந்தத்தின் மிகைபாடா.... சுவற்றின் அருகே நின்று இருந்த சின்ன ஆயா ....முந்தானையால் மூக்குத் துடைத்து கண்ணீரையும் துடைத்துக் கொண்டார். சகோதரி அங்குதாய் வாசல் வந்து எட்டிப் பார்த்து... அண்ணா என்று ...ஆச்சரியத்துடன் ... அழ ஆரம்பித்தார். அப்பா மிலிட்டரி தொப்பியை தலையில் இருந்து கழட்டியதும்...ஊர் வாசிகளுக்கு வந்தது முத்துசாமி தான் என்பது அடையாளம் தெரிய வந்தது . சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில் இருந்த களிமண் குட்டையில் பள்ளிக்குச் செல்ல குளிக்கச் சென்ற என் சித்தப்பாக்கள் எட்டுப் பேரும்....அண்ணா ....அண்ணா என்று கத்திக் கொண்டு இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டும்..இடையில் கோமனத்தை இழுத்துச் சரி செய்துக் கொண்டும்..வேகமாக பாய்ந்து.. வேளாண்மை வரப்புகளை தாண்டி என் தந்தையை நோக்கி ஓடி வந்தார்கள்.அருகில் வந்ததும் அப்படியே அதிர்ந்துப் போய் நின்று விட்டார்கள்.....அப்படி ...அப்பாவின் மிலிட்டரி உடல் அமைப்பு இருந்தது....வந்து இருப்பது அண்ணன் தானா..இல்லை வேறு யாராவது...என்று ஆராய்ச்சிச் செய்யும் போது ....முறுக்கிய மீசையை தடவி விட்ட ஸ்டைலைப் பார்த்ததும்... அண்ணன் தான் என்று அடையாளம் கண்டு...உறுதி செய்த போது....அண்ணா ...என்று ஒரே குரலில் கூவி ... தென்னை மரத்தின் மீது கொக்கிகளை மாட்டி சுற்றிலும் கோர்த்ததுப் போல..இரண்டு கைகளாலும் சங்கலி போல கட்டிக் கொண்டு அண்ணா...அண்ணா.. எங்கள விட்டு இவ்வளவு நாள் எங்கண்ணாப் போன...என்று... கதறி னார்கள்... பாசம் உள்ள நெஞ்சங்களுக்கு இதைப் பார்க்கும் போது ..இந்த சகோதர பாசத்தின் ஆழத்தை அறியும் போது..பிரிவின் பாதிப்பை உணரும் போது ....இதயத்தை இலகச் செய்யாமலாப் போகும்.... இமைகள் கண்ணீரை சிந்தாமலாப் போகும்.. " சேலம் வசந்த் '
Comments
Post a Comment