1980 ஆம் வருடம்...திருச்சி SIT யில் இரண்டாம் வருடம் Mechanical Engineering படித்தப்பொழுது...Annual day முடிந்தப் பிறகு...பொங்கல் பண்டிகையின் விடுமுறையும் சேர்ந்துக் கொண்டதால்....ஒரு ஆறு நாள் கல்லூரி விடுமுறை...அந்த விடுமுறையில்..... இந்த ஜனவரி மாதக் குளிரில்...மலைகளின் ராணி....ராணி..ராஜக்குமாரி... என்றாலே....அழகான...அமைப்பான உடலோடு..அங்கமெல்லாம் தங்கமாக...தங்கமே நிறமாக... இப்படியே வர்ணிக்கும்...தொடர்ச்சியாக....ஒவ்வொருவருடைய., மனதையும் வசீகரிக்கும் வனப்பு நங்கையாக... கண்ணுக்குக் குளிர்ச்சியாக...கவர்ந்து இழுக்கும் காந்தக் கன்னியாக விளங்கும்... ஊட்டி என்கிற நீலகிரி சென்று இருந்தேன். ஈரோட்டில் காலை 8.20 க்கு அரசு பஸ் பிடித்து உட்கார்ந்தால் 12.30 க்கு ஊட்டி வந்துவிடும்.... ...
திறமையின் வெளிப்பாடு அதன் உச்சம் தொடும்போது தான் தெரியும்.. திறமையின் வெளிப்பாடு..தொடர் முயற்சியினால் ...பயிற்சியினால் வெற்றி பெருகிறதா என்றால்...அது இயற்கைத் தந்த வரம் என்றேச் சொல்லலாம்.. அப்படி ஆளுமை கொள்ளும் திறமை அவரின் வாரிசுகளுக்கும் வரும் என்று உறுதி படுத்த முடியாது. அரசாங்கப் பதவி என்றாலும் .. அறிவியல் துறை என்றாலும்...வணிகத் துறை என்றாலும்..விளையாட்டுத் துறை என்றாலும்... விவசாயம் என்றாலும்.. விண் ஆராய்ச்சி என்றாலும்... சினிமாத் துறை என்றாலும் . இவைகளில் உச்சம் தொட்டவர்களின் வாரிசுகள்....அந்த அளவுக்கு வெற்றிப் பெற முடியவில்லை... ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கும் அந்த வாரிசுகளால் தொடர்ந்து வெற்றி பெற முடிவதில்லை..மெல்ல மெல்ல மங்கிப் போய் விடுகி...
ஜோலார்பேட்டை இரயில் சந்திப்பில்.. நடை மேடையில்... ஹிக்கிம் பாதம்ஸ் புத்தகக் கடையில் ..அவரை ..முதன் முதலாக .. அந்தக் கடைக்காரர் திரு.அன்பு அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் கைக் குலுக்கி முகம் மலர அறிமுகம் ஆனோம். என்னைப் பற்றி விசாரித்தார்.என் எழுத்துக்கள் பற்றி விசாரித்தவர் ..பாராட்டியதோடு... நீங்கள் மத்திய அரசுப் பணியில் இருப்பதால் உங்கள் படைப்புகளை நிதானமாக நேரம் எடுத்து உருவாக்கலாம். அவைகள் சிறப்பாக வரும். ஆனால் என்னால் அப்படிச் செய்ய முடியாது.. காரணம் பகல் முழுக்க.. வெப்பம்.. அனல்.. சூடு.. புகை இவைகளோடு உட்கார்ந்துக் கொண்டு தங்க நகை செய்தல்.. இரவு நேரத்தில் எழுதுதல்... இந்தக் கஷ்டம் உங்களுக்கு இல்லை.நிதானமாக படைப்புகளை உருவாக்குங்கள் என்று வாழ்த்தினார்.அவருடன் அவரின் இலக்கிய நண்பர் திரு.இளபரிதியும் இருந்தார்.....
Comments
Post a Comment